பிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை !
(எனது Facebookஇல் எழுதியிருந்த நிலைத்தகவல் இது )
CIA - Comrade in America என்ற மலையாளப் படத்தைப் பார்த்தது பற்றி நேற்று இடைவேளை update போட்டிருந்தேன்.
அதற்குப் பிறகு படத்தில் வரும் ஈழத் தமிழர் பற்றியும் ஒரு காட்சி பற்றியும் எழுதுமாறு நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
அதன் கீழேயே சில நண்பர்கள் துல்கர் சல்மான் நடித்த புதிய படமான வாரானே அவஷ்யமுண்ட் - Varane Avashyamund பற்றி சிலாகித்திருந்தார்கள்.
நேரமிருந்த காரணத்தால் இன்று பார்த்துவிட்டேன்.
சமூக வலைத்தளங்களில் ஏதோ சர்ச்சைகள் போய்க்கொண்டிருப்பதை அவதானித்தாலும் இது பற்றித்தான் என்று அப்போது அறிந்திருந்திருக்கவில்லை.
நேரமிருந்த காரணத்தால் இன்று பார்த்துவிட்டேன்.
சமூக வலைத்தளங்களில் ஏதோ சர்ச்சைகள் போய்க்கொண்டிருப்பதை அவதானித்தாலும் இது பற்றித்தான் என்று அப்போது அறிந்திருந்திருக்கவில்லை.
படத்தில் வரும் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் அனூப் சத்யன்.
அதுபற்றித் தான் இப்போது கொதித்துப் போயிருக்கிறார்கள் பலரும்.
அதுபற்றித் தான் இப்போது கொதித்துப் போயிருக்கிறார்கள் பலரும்.
பெயரோடு விட்டால் பரவாயில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளர் துல்கரும், இயக்குனரும் போட்ட பதிவுகள் தான் அதிகமாக கோபத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
துல்கர், அனூப் சத்யன் இருவரது சமூக வலைத்தளங்களும் தமிழர்களின் வசவுகளாலும் மலையாளிகள் பலரது பதில் கலாய்த்தல்களாலும் (சிலர் தமிழரையும் தலைவர் பிரபாகரனையும் உச்சபட்சமாகக் கேவலப்படுத்துகின்றனர்)
நிறைந்துபோய்க் கிடக்கிறது.
நிறைந்துபோய்க் கிடக்கிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பாளர் என்ற நிலையில் சமாதான விளக்கம் கொடுத்து, இப்போது மன்னிப்பும் கோரிவிட்டார்.
கேரளாவில் மிகப் பரவலாக அறியப்பட்ட பெயர் இது என்றும், 80களின் படத்தின் பிரபலமான வசனம் ஒன்றையும் காட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.
கேரளாவில் மிகப் பரவலாக அறியப்பட்ட பெயர் இது என்றும், 80களின் படத்தின் பிரபலமான வசனம் ஒன்றையும் காட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.
எனினும் நான் வாசித்தவரை மலையாளப் படங்களில் வழக்கமாகவே தமிழரைக் கேவலமாகச் சித்தரிப்பது போலவே இப்போதும் நடந்துள்ளது என்று பலர் கோபப்பட்டுள்ளனர்.
ஈழப் போர், தமிழீழம் தொடர்பாக மலையாளிகளின் நிலைப்பாடும், அவர்கள் இந்தியாவின் தலையீடுகளில் காட்டிய செல்வாக்கும் நாம் அறியாதது அல்ல.
அவ்வளவு ஆழமாகச் சென்று இந்தத் திரைப்படத்துக்கு விளம்பரம் கொடுக்காமல் (படமாக நல்லா இருக்கு - ஷோபனாவும் இருக்கிறார் - அது வேறு கதை) திரைப்பக்கமாகப் பார்ப்போம் என்றால்,
அவ்வளவு ஆழமாகச் சென்று இந்தத் திரைப்படத்துக்கு விளம்பரம் கொடுக்காமல் (படமாக நல்லா இருக்கு - ஷோபனாவும் இருக்கிறார் - அது வேறு கதை) திரைப்பக்கமாகப் பார்ப்போம் என்றால்,
தமிழ்ப் படங்களில் நாயர் என்றும் மலையாளி என்றும் செய்யாத நக்கலா?
ஆனால் கடந்த 20,25 வருடங்களாக மலையாளப் படங்கள் பார்ப்பவன் என்ற வகையில் - மலையாளப் படங்களில் தமிழுக்குக் கொடுக்கப்படும் சிறப்பும் தனித்துவமும் தமிழில் வேறெந்த மொழிக்கும் இருப்பதில்லை.
சில படங்களில் தமிழில் பாத்திரங்கள் பேசுவது மட்டுமில்லை, பாடல்களும் முழுமையாகத் தமிழிலேயே இருக்கும்.

இந்த Varane Avashyamund கூட முழுக்க நடப்பது சென்னையில்.
நேற்றைய CIA யில் கதாநாயகன் துல்கருக்கு உதவுவது ஒரு ஈழத் தமிழர்.
அவரது நிக்கரகுவா வீட்டில் தலைவர் பிரபாகரனின் படத்துக்கு பொட்டு வைத்து விளக்கேற்றியிருப்பார்கள்.
நேற்றைய CIA யில் கதாநாயகன் துல்கருக்கு உதவுவது ஒரு ஈழத் தமிழர்.
அவரது நிக்கரகுவா வீட்டில் தலைவர் பிரபாகரனின் படத்துக்கு பொட்டு வைத்து விளக்கேற்றியிருப்பார்கள்.
பின்னர் அவர் இலங்கை என்று அறிந்தபிறகு போராளியா எனக் கேட்பார்.
அருள் என்ற அந்தப் பாத்திரம் தியாகம் செய்வதாக முடியும்.
Comrade in America - மலையாளப் படத்தில் வந்த குறித்த காட்சி :
CIA (Malayalam) Movie - Prabhakaran Scene | Dulquer Salman
ஆனால் இதையெல்லாம் பார்த்தோ, இல்லாவிட்டால் தலைவரின் படம், பெயர்களைப் படங்களிலும் படைப்புக்களிலும் பெருமைப் படுத்துவதைப் பார்த்தோ புளகாங்கிதம் அடையும் நிலையை நான் கடக்கும் முதிர்ச்சியைக் கண்டுவிட்டேன் என நினைக்கிறேன்.
ஆமைக்கறியும் அரசியலும் எம்மை அந்த நிலையில் தெளிவுபடுத்தியுள்ளன.
ஆமைக்கறியும் அரசியலும் எம்மை அந்த நிலையில் தெளிவுபடுத்தியுள்ளன.
அதேபோல இந்த நாய் பெயர் விவகாரம் போன்றவை எம்மைச் சிறுமைப்படுத்தும், இதன் மூலம் எம் வரலாறு கீழ்மையடையும் என்று நினைப்பதில் இருந்தும் நான் தெளிவாக விலகி நிற்கிறேன்.
நம்மவரில் பலரே தினசரி வேலையாக இதைச் செய்யும்போது, இன்னும் சிலர் சில குறித்த நாட்களில் விஷமேற்றும் வேலை செய்யும்போது, எங்கேயோ ஒரு வேற்றுமொழிப் படத்தின் சில காட்சிகள் என்ன செய்துவிடப் போகின்றன ??
(அதுசரி, பெப்ரவரி ஆரம்பத்தில் வந்த படம் திடீரென இப்போது Netflixஇல் Trending ஆகியிருப்பதும் இப்போது பேசப்படுவதற்கும் பின்னணி ??)