அண்மையில் நண்பர் ஒருவர் தமிழகத்திலிருந்து என்னுடைய கிரிக்கெட் கட்டுரைகளை இப்போதெல்லாம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்று மடல் எழுதியனுப்பியிருந்தார்.
அடடா இன்னும் நம்ம வலைப்பதிவை நினைவுவைத்து வாசிக்கிறார்களா என்று கொஞ்சம் ஆச்சரியமும், நிறைய மகிழ்ச்சியும்..
எப்போதாவது முன்னைய வலைப்பதிவுக் காலத்து நண்பர்கள்/வாசகர்கள் சந்திக்கும்போதும் எழுத்துக்களை இந்தத் தளத்தில் காண்பதில்லையே என்று கேட்பதுண்டு.
அண்மைய இரண்டு வருடங்களாக வலைப்பதிவு பக்கம் எட்டிப்பார்க்காமலே இருந்திட்டோமே என்ற ஆதங்கமும் என் மேலேயே உள்ளது.
உங்களில் எத்தனை பேர் இப்போதும் இந்தப் பக்கத்தில் இணைந்துள்ளீர்களோ தெரியாது.
இனி மூலம் செய்தி அறிந்து வருவீர்களோ தெரியாது.
ஆனால் பார்க்கின்ற சிலருக்கு..
குறிப்பாக விளையாட்டு, கிரிக்கெட் அபிமானிகளுக்கு இந்த செய்தி..
(இதுவரை அறியாது இருந்தால்)
எனது Youtube பக்கம் ஒன்றின் மூலமாகத் தொடர்ச்சியாகவே கிரிக்கெட், விளையாட்டு மற்றும் எப்போதாவது ஏனைய விடயங்களையும் காணொளிப் பதிவுகளாக இட்டு வருகிறேன்.
என்னுடைய Youtube Channel : https://www.youtube.com/arvloshan
ஆர்வம் இருப்பவர்கள் பார்த்து, உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்.
இதை விட நான் ஒலிபரப்பாளனாகவும், பணிப்பாளராகவும் கடமையாற்றும் சூரியன் வானொலியின் பக்கம் மூலமாகவும் சில விடயங்களைப் பகிர்ந்து வருகிறேன்.
Sooriyan FM Youtube : https://www.youtube.com/user/SooriyanFMLK
பிடித்திருந்தால் இவற்றை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இடையிடையே எழுத்துக்களையும் இங்கே பதிகிறேன்.
அன்புக்கு நன்றி.