மீண்டும் வரி வரியாக​ ​​- ட்விட்டடொயிங் - Twitter Log

ARV Loshan
1
முன்பெல்லாம் மனதில் உதிக்கின்ற அந்தந்த நேரத்தின் உணர்வுகளை மனதுக்குள்ளேயே வைத்து சேமித்து, அதில் மறந்தது பாத், மறக்காததது மீதி என்று எப்போது நேரம் கிடைக்கிறதோ,  சேர்த்துக் கோர்த்துப் பதிவாக இடுகின்ற ஒரு காலம் இருந்தது.
அதைத்தான் அன்றைய காலத்தின் பதிவர்கள், இப்போது பிசியாகிப் போய் தங்கள் வலைப்பதிவுகளைப் பாழடைய விட்டுள்ள முன்னாள் பதிவர்கள் 'பதிவுலகின் பொற்காலம்' என்பார்கள்.

எப்போது கைகளில் smart phoneகளும், அதில் தமிழில் தட்டச்சக் கூடிய இலகு வசதிகளும் கிடைத்தனவோ அப்போதெல்லாம் இந்த மனதில் சேமித்து சேர்த்து வைத்து உணர்வுகளைக் கொட்டும் இடுகைகள், ட்வீட்ஸ் ஆகவோ Facebook status ஆகவோ மாறி மனதின் குரலை எதிரொலிக்கும்.

இடுகைகள் பொதுவாகவே இப்போது எல்லாப் பதிவர்களிடமும் குறைந்துபோக இந்த இலகுவான, நேரம் குறைவான குமுறல் கொட்டும் வழி ஒரு காரணமாக இருக்கலாம்.

எனினும் அந்தந்த நேரம் போட்டுவிடுகிற இந்த status வகையறாக்களை பின்னர் ஒரு தடவை ஏதாவது ஒரு தேவைக்கு (நம்ம status எல்லாம் மற்றவரால் மேற்கோள் காட்டுமளவுக்கு நாங்களும் வளரவில்லை; கருத்துக்களும் சிலரால் பகிரப்படுவதோடும் இன்னும் சிலரால் தங்கள் படைப்புக்களாக மாற்றப்படுவதோடும் சரி) தேடினால் உடனே கிடைக்காது.
வருங்காலத்திலே என்னுடைய கருத்துக்களை  தான் (முதலில்) எழுதினேன்/சிந்தித்தேன் என்று சொல்லவாவது எனது ட்வீட்சைக் கோர்த்து ட்விட்டடொயிங் - Twitter Log
எனும் பெயரில் முன்னர் இடையிடையே பதிவேற்றிவந்தேன்.

கொஞ்ச நாள் வேலை மும்முரங்களால் விடுபட்டுப்போயிற்று.

மீண்டும் தொடரலாம் என்று எண்ணம்.

சில அந்தந்தக் காலகட்டங்களுக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம்; சில பின்னணி தெரிந்தால் மட்டும் ரசிக்கலாம்.

 இந்த வருட ஆரம்பத்திலிருந்து எனது ட்வீட்ஸ் மற்றும் Facebook இடுகைகளில் தெரிந்தெடுக்கப்பட்டவை...

வரி வரியாக ஜனவரி முதல் செப்டெம்பர் வரை.




ஹர்ஷுவுக்குத் தமிழ் எழுத்துக்களை சொல்லித்தரும்போது தான் தமிழராய் வாழ்க்கையில் எத்தனை வளைவு,நெளிவுகளைக் கடந்து வருகிறோம் என்று புரிகிறது



10:55 PM - 2 Jan 13



முதுகுக்குப் பின்னால் கதைப்பவர்களை முகத்துக்கு நேரே பார்க்கையில் கிடைக்கிற திருப்தி ஒரு தனி சுகம்...
Feel it you will love it :)

6:45 PM - 12 Jan 13


ஏற்கும்போதே இப்படித்தான் இறக்கப்படுவோம் என அறிந்துகொண்டால் பின் வரும் துன்பங்கள் பெரிதாகத் தோன்றா... #CJ பற்றி யோசித்தபோது தோன்றியது

8:50 PM - 15 Jan 13
 
ஆயிரம் மேடைகள் ஏறினாலும் படித்த பாடசாலை மேடை தரும் தெம்பும் பெருமையும் திருப்தியும் தனி.
#felt #ProudToBeAHinduite

11:39 PM - 19 Jan 13


பேசித் தீர்க்கிற பிரச்சினைகளும் உண்டுபேசாமல் தீர்கிற பிரச்சினைகளும் உண்டு.
#அனுபவம் #கண்டதும்_கணித்ததும்

10:22 PM - 23 Jan 13



தவறுகள் உணரப்படும்போது மன்னிக்கப்படுகின்றனமறைக்கப்படும்போதும் நியாயப்படுத்தப்படும்போதும் துரோகங்கள் ஆகின்றன.
#Fact #cheater


9:18 PM - 26 Jan 13




எங்கேஎப்படிஎதனால் ஆரம்பிக்கிறதோ அங்கேயேஅதனாலேயேஅப்படியே முடிவடையும் என்பது நியதி.
கத்தியெடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது போல


12:59 PM - 27 Jan 13





மகிழ்ச்சியான மனது அழகானதுஅழகான மனது மகிழ்ச்சி தரக்கூடியது.
மனதில் அன்பும் ஆதரவும் இருந்தால் எந்நாளும் இந்நாள் போல் நன்னாளே :)



10:47 PM - 5 Feb 13





சில விஷயங்கள் பற்றிப் பேசுவோரை விட பேசாமல் இருப்போரை வைத்தே அவர்களின் மனவியல்புகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
நானும் அடங்கலாக
#அவதானிப்பு


12:02 AM - 8 Feb 13





விலைவாசி கூடக்கூட செந்து ஃபுட்ஸ் சமோசா அளவு வரவர சிறுக்குது.
அவனவன் கவலை...


9:27 AM - 8 Feb 13





வாழ்த்துக்கள் நிறையவே வாழ்க்கையில் கிடைப்பதனால்சாபங்களும் வரங்களாகவே வாய்ப்பதும்வரங்கள் சாபங்களாக மாறுவதும் சகஜமாகவே போகிறது
#Loshanism



4:05 PM - 12 Feb 13



'இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறதுஎன்று யாராவது சொல்லஎழுத ஆரம்பிக்கும்போதே ஒரு ஆர்வம் இயல்பாகத் தொற்றிவிடுகிறது.
#அவதானிப்பு

7:39 AM - 22 Feb 13


ஆதி-பகவனில் அறிவுமதியின் அருமையான வரிகளைக் கொலை செய்த உதித் நாராயணனை விட நம்ம நாட்டு ஜனாதிபதி நல்லா தமிழ் பேசியிருப்பாரே @Raja_Yuvan

23 Feb 13



வாசிப்புமறு வாசிப்பு,தேடல்,அறிவியல்இலக்கியமும் கூட...
தமிழில் எங்கள் சிறுவயது அகராதி,அரிச்சுவடி-அமரர் சுஜாதா நினைவு தினம்.
#Sujatha



27 Feb 13



ஒவ்வொரு பயணமுமே என்னை உற்சாகப்படுத்துகின்றனதூரமோ கிட்டவோ விமானமோ வாகனமோ அளவுகள் கூடலாம்உற்சாகமும் எதிர்பார்ப்பும் தொடரும்.



5:43 AM - 11 Mar 13

 

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குக் காணிக்கையான கணக்கில்லாத தேங்காய்கள்
price of a #coconut Rs.40/= @… http://instagr.am/p/Wttc7nk1id/
11 Mar 13





தண்டனை வேறு மன்னிப்பு மறுதலிப்பு வேறு
தெரிந்தவர்களுக்குத் தெரியாததும் அறிந்தவர்கள் புரியாததும்
#clarification & #justification

11 Mar 13





நீண்ட இரவுப் பயணத்தின் மிகப் பெரிய துணைகள்- பிடித்த இசைநல்ல பேச்சுத் துணைகொஞ்சம் சந்தோஷ நினைவுகளின் மீட்டல்கனத்த நினைவுகளின் கலத்தல்

14 Mar 13





எல்லோரும் எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லைஅது நாளின் தவறில்லைநம் பங்கு அதில் என்ன என்பதை அறிவதில் தான் எம் நிம்மதி தங்கியுள்ளது

18 Mar 13





திருந்திறவன் ஒரு தடவை தான் மன்னிப்புக் கேட்பான்ஒவ்வொரு தடவையும் மன்னிப்புக் கேட்பவன் திருந்தவேமாட்டான்.

#வாசித்ததில்-பிடித்தது

19 Mar 13





நாக்குத் தள்ள மிதி மிதியென்று சைக்கிளை மிதிப்பவனை ஒரே மிதியின் அழுத்தலில் காரினால் முந்துவது தான் வாழ்க்கை
#TravelingThoughts

23 Mar 13





சொந்த ஊரின் செம்பாட்டு மண்ணிலும் உறவுகளின் அன்பிலும் இன்னும் கம்பீரமாக எழுந்து நிற்கும் அப்பா கட்டிய வீட்டிலும் இணுவிலின் இயற்கை அழகு 

24 Mar 13





இருபது ஆண்டுகளுக்குப் பிறகு போன ஊர்த் திருவிழாகாலத்தைப் பின்னோக்கி இழுத்து மீண்டும் என்னைப் பத்து வயது சிறுவனாக்கி விடுகிறது.

25 Mar 13





எனது முதலாம் வகுப்பு ஆசிரியையை முப்பது ஆண்டுகளின் பின்னர் முதலாம் வகுப்பு படிக்கும் என் மகனோடு சந்தித்தேன்
#காலவோட்டம்

25 Mar 13





இந்த யாழ் சலூன் கடைக்காரர் புண்ணியத்தில் நீண்ட காலத்தின் பின் கேட்ட இனிய பாடல்களில் ஒன்று - "தென்றலோ தீயோ தீண்டியது நானோ" #சுகானுபவம்

26 Mar 13





சில அறிவித்தல் பலகைகளில் 'நயினாதீவுபலவற்றில் 'நாகதீபம்' -தமிழில்.ஏனிந்தக் குழப்பம்?யாரும் சுட்டிக்காட்டவும் இல்லையா
#jaffna #tamil #lka

28 Mar 13





முறிகண்டி கோவிலில் வரிசையாக ஒலிக்கும் 'பக்திபாடல்கள் ஓம் சிவோஹம்நான் கடவுள்ஓம் நமச்சிவாய சலங்கை ஒலி 
#அரோகரா

29 Mar 13







முல்லைத்தீவுமுள்ளிவாய்க்கால்புதுக்குடியிருப்புபுதுமாத்தளன்.... 
பெருமூச்சுபெருவியப்புநீண்ட கேள்விக்குறியுடனான ஆழ்ந்த அமைதியுடன்..

29 Mar 13





எனக்காக சிந்திக்கும்செயற்படும்தெரிவுசெய்யும்தீர்மானிக்கும் உரிமையை என்னிடமே விட்டுவிடுங்கள்அதை விட்டுக்கொடுக்க முடியாது.

7 Apr 13





முரளி விளையாடவில்லை.. அட சென்னையில் நடக்குது ஆட்டம்.
பெட்டியால் இல்லாமல் போனோர் பலர்இவர் பேட்டியால் இல்லாமல் போனவர் ;)

#IPL #CSKvsRCB

13 Apr 13





சச்சினா தோனியா ஆடுறாங்க என்பதையும் தாண்டி அம்பானியா ஸ்ரீனியா ஆட்டிவைக்கிறார்கள் என்று குழம்பி குழம்பி #ipl பார்ப்பது கூட thrill தானே ; )

21 May 13





ஸ்ரீனி,குரு,இன்னும் பிடிக்காத மூஞ்சிகள் இருந்தும் மும்பாய் அறப்படித்த கேசுகளை விட CSK looks okay ;) at least for Hussey, Badhri & Harshu ;)

26 May 13





குருநாத்தைப் பிடிச்சும்,அந்தநாள் சூதாடி என்று தெரிஞ்சும்,சென்னைடா CSKடா என்று துள்ளிக் குதிக்கிறவங்கட மனநிலையைப் புரிஞ்சுக்க முடியலடா. #IPLடா

26 May 13





எட்டு போச்சு... தோற்கலாம்னு எதிர்பார்த்தேன்ஆனால் இப்பிடி மரண அடி கிடைக்கும்னு நினைக்கலையே... ஏழரைச் சனி உச்சத்தில் போல #iplfinal

26 May 13





புத்தருக்கு ஒரே நாளில் ஞானம் கிடைச்சிட்டாம்அதுக்காக ஏன்டா நாலாவது நாளா லவுட் ஸ்பீக்கரில் காதைக் கிழிக்கிறீங்க
#NoisePollution #Vesak

28 May 13





மரணச் செய்திகளை அல்லது அவலச் செய்திகளை Facebookஇல் தெரிவிக்கும்போது அந்த செய்திக்கும் Like செய்யும் நண்பர்களுக்கு...
நீங்கள் அந்த செய்தியின் மீதான ஆர்வம் மற்றும் நீங்கள் அதை வாசித்ததைக் காண்பிப்பதற்கு
Like செய்கிறீர்கள் என்று தெரிகிறது.
யாரும் இறப்புக்களை ரசிக்கும் குணம் கொண்டவர்களில்லை என்பது தெரிந்ததே
.
ஆனாலும் அனர்த்தம் மற்றும் இறப்புப் பற்றிய தகவல் குறிப்புக்களுக்கு
Like செய்வதைத் தவிர்த்திடுங்கள்...
30 May 13





எனக்கு மட்டும் தான் இளையராஜாவை சில படங்களில் பார்க்கிற நேரம் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மாதிரி இருக்குதா?
#doubt

1 Jun 13





பள்ளி உடைப்பு..இப்போது கோவில் உடைப்பு..உஷ்கேட்க முடியாது யாரும்கொத்துகொத்தாய் செத்து மடிந்தவருக்கே கணக்கில்லை.இது பெரிசா? #srilanka

3 Jun 13





எவ்வளவு தான் விமர்சித்தாலும் இளையராஜாவைக் கடந்தே எமது இளமை இனிதாகப் பயணித்து வந்துள்ளது என்பதை இந்த இரவின் பாடல்களும் மீண்டும் சொல்கின்றன

3 Jun 13





இளநீர்க் கடையில் 'தேவதாசு கதையைப் போல என் கதையாச்சுபாடல்.இளநீர் சீவும் போது யாருடைய தலையைச் சீவுவது போலவே ஆவேசம் காட்டும் பையன்.

9 Jun 13





காணாமல் போன மீனவரைத் தேடிவிடாமல் search operation. பல்லாண்டுகளாகக் காணாமல்போனதமிழர் பற்றி no action. 
#srilanka #lk

9 Jun 13





நம்பிக்கைகள்கடமைகள்நட்புபாசம் என்று உதவிகளுக்கான காரணங்கள் இருக்க,காலம்நிச்சயத்தன்மை &எல்லைகளை எவராலும் உறுதியளித்திட இயல்வதில்லை.

9 Jun 13





கற்றுத் தந்தவை பெற்றுத் தந்தவைக்கு நன்றி சொன்னால் போதாது.அவை இப்போது நான் தந்தையாக இருக்கையில் எனக்கான பாடங்கள்.வாழ்த்துக்கள் #அப்பா

16 Jun 13





அனுபவங்கள் கற்றுத் தராத பாடத்தை யாராலும் கற்றுத் தர இயலாதுவயதில் மூத்திருந்தாலும் வாழும் வழியை உணராவிடில் எவர் உதவியும் வாரா #ethics

3 Jul 13





இளையராஜா+கார்த்திக் கூட்டணியின் அண்மைய இரு பாடல்கள் மனதை அள்ளி மேலும் எதிர்பார்க்கவைக்கின்றன.
என்னோடுநீதாஎபொவ
என் தேவதை-நாடி துடிக்குதடி

7 Jul 13





19 ஆண்டுகளுக்கு முன்னர்ரசிகனாக மட்டுமல்லாமல் ஒரு ஏகலைவனாக..

உரையாடிய ஒரு மணி நேரம் வாழ்நாளின் உன்னதமான நேரத் துளிகளாக...
அப்போது உண்மையாக இவரது பாடல்கள் தான் என்னுடைய தொழிலின் இன்றியமையாத ஆயுதங்களாக இருக்கப்போகின்றன என எண்ண ஒரு துளி வாய்ப்பில்லை
.
காலவோட்டத்தில் இன்றும் நாளாந்தம் வைரமுத்துவின் பாடல்களோடே என் வாழ்க்கை வானொலிப் பயணம்.

13 Jul 13





வைரமுத்துவின் பிறந்த நாள் என்றவுடன் தான் 17 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்துவின் அரிய பாடல்களைத் தேடி காசு குடுத்து ஒலிப்பதிவு செய்து வைத்த கசெட்டை எடுத்துப் போய்த் திருப்பித் தராதநண்பனாயிருந்து காணாமல் போன ஒருவன் ஞாபகம் வருகிறான்.
இப்பவாவது அனுப்பி வையடா...

13 Jul 13





ஹர்ஷு-தந்திரமான மிருகம் ஒண்டு சொல்லுங்கப்பா 
நான்நரி 
ஹர்ஷு-இன்னொன்று
நான்-இன்னொரு நரி 
ஹர்ஷு-அய்யோ அப்பா... ஒண்டு நரிமற்றது குள்ள நரி

21 Jul 13


'தங்க விலை நிர்ணயிக்கும் குழுவுக்கு விடுமுறை என்பதால் இன்று தங்க விலையில் மாற்றமில்லை' -Polimer செய்திகள்.
நல்லா செய்தி சொல்றாங்கடா ;)

21 Jul 13





ஒரு முழுநாளை officeக்கு ஒப்படைத்துஅத்தனை வேலையையும் மிச்சமின்றி முடித்துஉடலும் மனதும் ஓய்வுக்குக் கெஞ்சும் நிலையில் அப்படியொரு திருப்தி.

23 Jul 13





பொதுவில் பவதாரிணியின் குரல் பிடிக்காவிட்டாலும்,அருண்மொழியுடன் சேரும் இப் பாடல் ரசிக்கக் கூடியதே.'என் வீட்டு ஜன்னல்on air @SooriyanFMlk

30 Jul 13





நெல்சன் மண்டேலாஇப்போது கனகா... ஊடகங்களின் நம்பகத்தன்மைக்கும் செய்தி பரப்பல் பரம்பலுக்கும் மீண்டும் reality check. 
#media #news #கனகா

30 Jul 13





குடிகாரபுகைபிடிகார அன்பர்ஸ் இதையெல்லாம் விட்டுத் தொலைத்துத் தலைமுழுக நல்லதொரு சந்தர்ப்பம்.
சிகரெட்,மதுபானம்,பியர் விலைகள் அதிகரிப்பு

31 Jul 13





கடந்து வந்த பாதையும் கற்றுக்கொண்ட கசப்பான பாடங்களும் மறந்தும் மறக்கப்பட்டக் கூடாதவை
#life #அனுபவம்

2 Aug 13





கனவு மெய்ப்பட வேண்டும்கைவசமாவது விரைவில் வேண்டும்.
கிடைப்பன கிடைக்கவும்விரைவாகக் கிடைக்கவும் வேண்டும் என்னும் பாரதி யதார்த்தவாதி தான்.

3 Aug 13





மொழியென்று வரும்போது மத வேற்றுமைகள் காணாமல் மறைந்துவிடும் என்பது மீண்டும் பெருமையுடன் நிரூபிக்கப்படுகின்றது
#தமிழ்
3 Aug 13

புதிய பட்டம்,நிறைய அன்பு,'முக்கியஆசி,புதிய ஊடக,சமூகப் பொறுப்பு,இன்னும் அதிக நட்புமறக்க முடியா நினைவுகளோடு விடைகொள்கிறேன்.
நன்றி மன்னார்

4 Aug 13





பொய்கள் பலூன் போல...
எவ்வளவு தான் உப்பிப்பெருத்தாலும் கொஞ்ச நாளில் காற்றுப்போக சப்பென்று சுருங்கி அடங்கிவிடும்
#JustThought

7 Aug 13

 

மனிதர்களை வாசிப்பது சுவையானது.
காலையில் விரைவாகப் பரபரக்கும் மனிதர்கள்,மாலையில் களைத்து கடுகடுத்து விரையும்போது வேறாகத் தெரிகிறார்கள்.

7 Aug 13





விஜய் ஒரு அசத்தல் அரசியல்வாதியாக வருவார்.. பின்னேபடத்தின் பெயரிலேயே போட்டியாளரை வான்னு அன்பான அழைக்கிறாரே.. 
'தலவா ;) #தலைவா:p

7 Aug 13

 

ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்று முன்னமே
Hollywood காரன்களுக்குத் தெரிந்திருந்தது.
Almighty படங்களில் கறுப்பர் தான் கடவுள்.

8 Aug 13





இரண்டாம் உலகம் trailer & இதுவரை கேட்ட இரு பாடல்கள் @selvaraghavan எனும் புதுமை விரும்பி ஏதோ 'புத்தம்புதிய'அனுபவத்தைத் தருவார் என்கின்றன.

8 Aug 13





தண்ணீருக்கான கண்ணீரும் செந்நீரும் எங்கள் அண்மைய வரலாறுகளின் நீர் சார்ந்த திருப்பங்களையும் நினைவுபடுத்துகின்றன. மாவிலாறு & நந்திக்கடல் :(
9:24 PM - 8 Aug 13






3வது நாளாகவும் மனத்தின் மையத்தில் விஜய்பிரகாஷ்  "விண்ணைத்தாண்டிபாடிக் கொண்டிருக்கிறார்பழகிய மெட்டாக இருந்தும் வைரமுத்துவின் வரிகள் ரசனை.

9:08 AM - 9 Aug 13


காரோடும் வீதியெங்கும் தேரோடும் ;
இந்த கலாசாரம் , பண்பாடுசமய பாரம்பரியங்களை வெளிப்படுத்தவும் வலியுறுத்தவும் வளர்க்கவும் வேறு வழிகள் இல்லையா?

10 Aug 13





ஒரு கோட்டினை சிறிதாக்க பெரிய கோட்டினை வரைவது பழையது.
பழைய பிரச்சினையை மறக்கடிக்க புதுசா புகை மூட்டிக் குளிர் காய்தல் புது
'ராஜ'தந்திரம்.
11 Aug 13





சிறுவயதின் சில ரசனைகளும் விருப்பங்களும் காலம் கடந்தாலும் மாறுவதில்லைஸ்ரீதேவிக்கு 50 வயதாம்நம்ம வயசும் ஓடுகிற வேகம் நம்பமுடியவில்லை.
13 Aug 13





சினிமா, இலக்கியங்கள்சஞ்சிகைகள் வழியாக பேச்சு,எழுத்து தமிழகத்துடன் நெருங்கிஇணங்கிப் போவது ஏற்கலாம்
ஆனால் Aug 15 சுதந்திர தினமுமா? #அவ்

13 Aug 13





நாளின் இன்ப,துன்பங்கள்லாப,நட்டங்கள்,பகை,நட்புக்கள் என்று கூட்டல்,கழித்தலின் ஐந்தொகை சமப்பட்டால் மட்டுமே தூக்கம் வற்புறுத்தல் இன்றி வரும்

14 Aug 13

 

மாசம் கடந்தும் மறக்காம Birthdayக்கு இன்றைவரை ட்ரீட் கேட்கும் நண்பர்கள்சே என்னையும்'எப்படிப்பட்ட சமூகபுலம்பல் போடவச்சிட்டீங்களேடா #அவ்

15 Aug 13



Good க்குப் பதில் superனு சொல்லும் பழக்கம் என் முன்னைய CEOவிடமிருந்து எனக்குத் தொற்றி,இப்போது அலுவலக சகாக்கள்,ஏன் ஹர்ஷுவிடமும் வந்திட்டுது.
17 Aug 13



ஞாயிறு சோம்பல் நாள் என்று எவன் சொன்னது? வழமையை விட சுறுசுறுப்பாக இருக்கவேண்டி இருக்கு
#familyDay

18 Aug 13





Sunday shopping போகணும்னு மனைவி சொல்கிற நேரம் ஹர்ஷு கேட்டான்"எந்தக் கடைக்கு அப்பா?"

"செலவு வச்சான் ஸ்டோர்ஸ்"என்றேன்.
address தேடுறான் பாவம்
18 Aug 13




Happy World Photography day to all amateur & pro photographer friends.

இந்த நாளில் எம்மை நேரில் இருப்பதை விட அழகாகக் காட்டும் அற்புதமான படப்பிடிப்பாளர்கள், எங்களை போட்டோ எடுக்கவென்றே அப்பாவிகளாய் அவதாரம் எடுத்த பலிகடாக்கள்நாம் பயன்படுத்த இணையத்தில் படங்களை உலவவிட்டுள்ள ரொம்ப நல்லவர்கள்நாம் தவறவிட்டாலும் தேடி எடுத்து எங்கள் அரிய படங்களை tag செய்தும்அனுப்பிவைக்கும் தீ.வே.செ.குமாருகள்எந்தப் படம் எடுத்தாலும்,என்ன கண்றாவியா அது இருந்தாலும் ஆயிரம் பேரை tag பண்ணிதேவையில்லாமல் எங்களையும் அதில் கோர்ர்த்துவிட்டுக் கடுப்பே ற்றிக் கூத்துப் பார்க்கும் கமெராத் தலைக் கனவான்கள் என்று அத்தனை பேரையும் வாழ்த்தி நன்றியுடன் நினைந்து கொள்கிறேன்.


19 Aug 13





விடுமுறை நாளின் உன்னதமான விடயம் பரபரப்பில்லாமல், casual dressஇல் relaxஆ எந்தவொரு meeting தொல்லையுமில்லாமல் வேலை செய்வதே. #LoveHolidayWorking

20 Aug 13





அரவிந்தன் to பிரியாணி சதம் அடித்துள்ள யுவன் இந்த நூறில் கமல் ரஜினிக்கு ஒரு படமும் இசையமைக்கவில்லை என்பது ஆச்சரியமே.
#Yuvan100 #Biriyani

21 Aug 13





'ளெளஎந்த சொல்லில் வரும்?இந்த எழுத்தில் வாற 2 ''வுக்கும் வேறு வேறு பெயரா?-இந்தப் பெரீய சந்தேகங்களை எழுப்பியவர் எங்க வீட்டுப் பெரிசு ஹர்ஷு
22 Aug 13



மோதிரக் கையால் குட்டு வாங்கினா நல்லா வரலாம். ஆனால் அன்பானவங்க கிட்ட அடிக்கடி திட்டு வாங்கினா 'ரொம்பநல்லா வரலாம்.
#அனுபவம் #அவ்வ்

23 Aug 13





வரிசையா வரி வரியாக் கூட்டுறாங்க.
வெங்காயம், உருளைக்கிழங்கு இறக்குமதித் தீர்வை ஏத்துறாங்க
தீர்மானிச்சிட்டாங்க.தீர்த்திட்டாங்க.
#lk

23 Aug 13

 

நண்பர் ஒருவரின் ஷங்கர்- சுஜாதா பற்றிய பகிர்வை நேற்று வாசித்தபிறகுசுஜாதா பற்றி ஞாபகம் வந்த ஒரு வரி -
"ரயில் புறப்பட்டதே தெரியாமல் எண்ணெய் போட்ட மின்னல் போல நழுவியது"
என்ன ஒரு அழகான சொல்லுவமை.
மின்னலின் வேகமும் எண்ணெய்யின் வழுக்கலும்.
வாத்தியார் வாத்தியார் தான்.

21 Aug 13







பகல் முழுக்கத் தூசி கிளப்பிப் பலர் தொந்தரவு செய்து துவம்சப்படுத்திய வீதி கேட்பாரற்று தனித்துக் கிடக்கிறது நிலவொளியில் நனைந்து.

24 Aug 13





சாப்பிடுபவர்களை விட, சமைப்பவர்களுக்கே எவை எவற்றை எப்படி,எப்படி வாங்கவேண்டும் என்று சரியாகத் தெரிகிறது.
#அனுபவம் இல்லை #ஆராய்ச்சி

24 Aug 13





கொஞ்சம் நீண்ட தூரப் பயணம். என்னவோ 'சங்கராபரணம்பாடல்களைக் கேட்கவேண்டும் என்று ஒரு வித்தியாச ஆசைப்பட்டேன்.
எப்பவோ தரவிறக்கி Samsungஇல் போட்டுவைத்த அத்தனை சங்கராபரணம் பாடல்களையும் கேட்டுக்கொண்டே வாகனம் செலுத்தியது ஒரு சுகானுபவம்.

SPB சிலிர்க்க வைத்திருந்தார்.அர்த்தம் புரியாத சொற்கள்ஆனால் அந்த பாவமும் ராகமும் செவிவழியாக ஆன்மாவுடன் பேசியிருந்தன.

25 Aug 13

 

எனக்குப் பிடித்த 'தலைவர்போல இவரது இளமைத்தோற்றம் இருந்ததாலேயே சிறுவயதில் எனக்குப் பிடித்த ஹீரோக்களில் ஒருவர்.
action hero.

நடிகராக இருந்து தன் மகன் பெயர்பிறந்த நாள் அறிவிப்பு என்று அந்த நாளில் எங்களுக்குப் புல்லரிப்பூட்டிய பலரில் ஒருவர்.
விஜயகாந்த்.
இப்போது அவரது நடனம்ஆங்நாக்கு மடிப்புபின்னங்கால் சண்டைதிரைப்படங்கள்அரசியல் என்று எல்லாவற்றையுமே வைத்து எல்லோரோடும் சேர்ந்து நானும் கலாய்த்தாலும் அன்றிருந்த soft cornerஇல் கொஞ்சமாவது மிச்சம் இருக்கிறது.
திரையில் ஹீரோவாக இருந்து அரசியலில் கோமாளியாக மாறியிருந்தாலும் அன்றைய என்
action heroவுக்கு இன்றைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


25 Aug 13

 

நாளை என்பது எப்போதுமே அழகானது.
எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கையும் நிறைந்தது.
ஒரே நாள் ஆயுளாக இருந்தாலும் அந்த ஒரே நாளின் அர்த்தபூர்வம் முழுமையடைவதில் தான் வாழ்க்கை வரலாறு ஆகிறது.

-எங்கள் வீட்டுத் தோட்டத்தில் என் மனைவியின் செல்லங்கள் நாளை மலர்வதற்குத் தயாராக.

26 Aug 13





நண்பர்கள் சூழ் இவ்வுலகு அழகானது.

26 Aug 13





மூன்று வேறுபட்ட உலகங்களில் வாழும் மூன்று நண்பர்களை சந்தித்த இன்றைய நிமிடங்கள் தந்த சந்தோஷம் ஒரே விதம். வாழ்வின் அனுபவங்கள் பலவிதம். #life

26 Aug 13

 

தெற்காசியாவில் முதலிடம் பெற்றிட்டோம். இனி டிரெக்டா சர்வதேச முதலிடம் தான்.
செய்தி- 100 kg Heroin கைப்பற்றப்பட்டது
#ஸ்ரீலங்காடா

30 Aug 13





இரவிலும் அழகான இயற்கைகளிலொன்று எம் கிராமங்கள்.
அமைதியும் பசுமைக் குளுமையும் அப்பாவித்தனமும் வெளிப்படைத்தன்மையும் பாசமும் நிறைந்த மக்களும்...

1 Sep 13





வரலாற்றுப் பெருமை கொண்ட தம்பலகாமத்தில் கிராமங்களினுள்ளே தமிழ் மணக்கிறது; பிரதான வீதியில் நீண்டகாலத் திட்டமிட்ட குடியேற்றங்கள் உறுத்துகின்றன.
1 Sep 13




Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*