ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு....
ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனி என்று எதிர்வு கூறியிருந்த நான் உட்பட ஏராளமானோருக்கு விக்கிரமாதித்தன் மாபெரும் அதிர்ச்சியை இத்தாலியின் மரியோ பலோடேல்லி கொடுத்திருந்தார்.
ஜெர்மனியின் வெளியேற்றம் ஒரு மிக வித்தியாசமான இறுதிப் போட்டியைக் கொடுத்துள்ளது.
இதுவரை முக்கியமான தொடர்களின் இறுதிப்போட்டிகள் எவற்றிலும் ஒன்றையொன்று சந்தித்திராத இரு அணிகள் இன்று ஒன்றையொன்று சந்திக்கவுள்ளன..
வழமைபோலவே இந்த இறுதிப்போட்டி பற்றிய சில முக்கியமான முன் எதிர்வுகூறல்கள், சுவாரஸ்ய விடயங்கள் இன்னும் பல & அரையிறுதிகளின் முக்கியமான பார்வை ஆகியவை எல்லாம் பற்றி தமிழ் மிரரில் விரிவாக எழுதியுள்ளேன்...
வாசித்துக் கருத்திடுங்கள் என்று அன்போடும், உரிமையோடும் அழைக்கிறேன்....
விக்கிரமாதித்தனுக்கு எல்லாம் இன்று பயப்படுவதாக இல்லை நான் ;)
ஸ்பெய்ன் வெல்கிறது.
பயிற்றுவிப்பாளர் விசெண்டே டெல் பொஸ்கே attacking mode க்கு இன்று தன்னை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன்.
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய ஸ்பெய்ன் அணியை இன்று இத்தாலிக்கு எதிராகப் பார்க்க ஆசைப்படுகிறேன்.
டேவிட் வியாவையும் புயோலையும் ஸ்பெய்ன் இன்று அதிகம் miss பண்ணாமல் அதற்கேற்ப ஏனைய வீரர்கள் ஈடுகொடுத்து விளையாடுவார்கள் என நம்புகிறேன்.
ரமோஸ், அலோன்சோ, இனியெஸ்டா ஆகியோர் முன்னாலும், கசியாஸ் கோல் காப்பிலும் கலக்கினால் அது ஸ்பெய்னுக்கு தொடர்ச்சியான இரண்டாவது ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றுகொடுக்கும்.
இத்தாலியில் வயதேறினாலும் கலக்கிக் கொண்டிருக்கும் அன்ட்ரே பிர்லோ, இப்போது கோல்களைத் தொடர்ந்து அடித்துவரும் பலோடேல்லி, மற்றும் நம்பகமான கோல் காப்பாளர் புபோன் ஆகியோர் ஸ்பெய்னை அச்சுறுத்தக் கூடியவர்கள்.
ஸ்பெய்ன் - இத்தாலி மோதலை ரசிக்க முதல் இவ்விரு அணிகளுக்கிடையிலான இன்றைய இறுதிப்போட்டியின் இன்னும் சில முக்கிய, சுவாரஸ்ய விடயங்களைப் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பையும் சொடுக்கி வாசியுங்கள்..