கவிப் பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளான நேற்று எங்கள் வெற்றி FM வானொலியில் எனது காலை நிகழ்ச்சி விடியலை 'வைரமுத்து சிறப்பு நிகழ்ச்சி'யாக மாற்றி இருந்தேன்..
வைரமுத்துவின் புதல்வர் மதன் கார்க்கி ட்விட்டர் (Twitter) மூலமாக நட்பு ஆனதனால் சுருக்கமான வாழ்த்து + பேட்டி ஒன்றைத் தொலைபேசி மூலமாகப் பதிவு செய்திருந்தேன்.
(கார்க்கிக்கும் எனக்குமான நட்பு உருவாகக் காரணமாக அமைந்த பதிவுக்கு நன்றி)
இரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்
அவரின் தந்தையார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி என்பதால் மதன் கார்க்கியின் இலங்கை வானொலி ஒன்றுக்கான முதல் பேட்டியாக இருந்தாலும் அவரைப் பற்றியதாக இல்லாது வைரமுத்து பற்றியே கேள்விகள் அமைந்தன..
மதன் கார்க்கி தனது முதலாவது தேசிய விருதை வெல்ல முதல் ஒரு நிறைவான பேட்டி காணவேண்டும்.
அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் பாடல்கள்..
அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை..
ஒலித்த இருபத்துநான்கு பாடல்களில் எதை எடுக்க, எதை விட என்பதில் தான் தடுமாறிப் போனேன்..
ஆனாலும் பொதுவாக ஜனரஞ்சகமான பாடல்களாக தெரிவு செய்திருந்தேன்.
(நேற்று நிகழ்ச்சியில் கதை கூடிப் போனதால் ஒலிபரப்பத் தவறிய இன்னும் முத்து, முத்தான பாடல்களை இன்று விடுமுறை நாளில் ஒலிபரப்பி அனுபவித்தேன்)
வேலை நாளில் காலையில் நேற்றைய நிகழ்ச்சியைத் தவற விட்டவர்களுக்காக மதன் கார்க்கியுடனான பேட்டியின் பகுதிகளை எமது வானொலியின் இணையத்தளத்தில் தரவேற்றியுள்ளோம்...
13ம் திகதி விடியலில் இடம்பெற்ற மதன் கார்க்கியுடனான நேர்காணல்
எனினும் காலை எட்டு மணி முதல் இடம்பெற்ற முழு விடியலும் கேட்க விரும்பும் நண்பர்கள்/நேயர்களுக்காக....
Part 1
Part 2
Part 3
Part 4
பொறுமையாக ஒலிப்பதிவு செய்து,தரவேற்றும் விதத்தில் தயார்ப்படுத்தித் தந்த அலுவலக சகாக்கள் பிரதீப், ஷமீல் + கன்கோன் கோபிக்கு நன்றிகள்..
வைரமுத்து பற்றி விளக்கமான, விலாவாரியான பதிவு ஒன்றை தம்பி ஜனகன் தந்துள்ளார்.. அதையும் வாசித்துப் பாருங்கள்..
கவிதையும் கவிதை சார்ந்த இடமும்…வைரமுத்து
மீண்டும் நான் ரசிக்கின்ற பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்துவுக்கு எனது வாழ்த்துக்கள்..
விரைவில் கவிஞருடன் முழுமையான விரிவான பேட்டி ஒன்றை எதிர்பார்த்துள்ளேன்..