கஞ்சிபாயிடம் இருநூறு ரூபாய் இருக்கிறது.
ஆனால் அவருக்கு நான்கு நண்பர்கள். ரொம்பவே நல்லவரான கஞ்சிபாய் அந்த நாலு பேருக்குமே ஆளுக்கு நூறு ரூபா வீதம் அதைப் பகிர்ந்து கொடுத்ததாக எனக்கு சொன்னார்.
இருந்த இருநூறு ரூபாயை எப்படி ஆளுக்கு நூறு ரூபாயாக நான்கு பேருக்குக் கொடுக்க முடியும்?
அது எப்படி சரியாகும் என்று நம்ம கஞ்சிபாயிடம் கேட்டேன்..
கஞ்சிபாய் சொன்னது " நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை லோஷன்"
டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங் டொன்ட்ட டொய்ங்...
கமல் மாதிரி நான் ஓவென்று வாயைத் திறந்து அழ ஆரம்பித்தேன்..
------------------------
கஞ்சிபாயும் சிங்கப்பூர் சீலனும் சேர்ந்து அப்பாவி லோஷனின் ஆயிரம் ரூபாவை ஆட்டையைப் போட்டுட்டாங்க.
சிங்கப்பூர் சீலன் கஞ்சிபாயிடம் சொன்னார் "இதை நாங்க ரெண்டு பெரும் பிப்டி பிப்டியா எடுத்துக் கொள்ளுவம்"
கஞ்சிபாய் சந்தேகமாகக் கேட்டார் "சரி பிப்டி பிப்டி போனா மிச்ச தொள்ளாயிரம் ரூபா?"
-----------------------------------
கஞ்சிபாயும் மனைவியும் ஒருநாள் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்..ஒரு மூலையில் ஒரு குடிகாரன்..
அவனைக்காட்டி..
கஞ்சிபாயின் மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவர் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னசொல்லிட்டேன். பாருங்களேன் அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.
கஞ்சிபாய் : அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிக் கொண்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
-----------------------------
கஞ்சிபாய் எனக்கு சொன்ன ஒரு விஷயம்
கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்றுகாரணங்களே இருக்க முடியும்.
1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
******
சிரிக்க முடிந்தால் சிரித்துக்கொள்ளுங்கள்..