எச்சரிக்கை - வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் அகிம்சையையே மனதில் கொள்ளுங்கள்..
யாரும் அதிரடியா,கொலைவெறியா ஆட்டோ,கீட்டோ, அரிவாள், பொல்லு என்று தேடிப் புறப்படக்கூடாது.. ஆமா..
ஒரு ஊரில அப்பிடி, இப்பிடின்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் அப்பிடி, இப்பிடியைப் பார்த்து "எப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு இப்பிடி "எப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
அப்பிடி"இப்பிடி சொன்னா எப்பிடி? அப்பிடி இருக்கேன் இல்லை இப்பிடி இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே இப்படிக்கு அப்படியொரு கோபம் வந்திட்டு.. "டே அப்பிடி, நான் எப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அப்படி "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று இப்பிடியை சமாதானப்படுத்தினார்.
அப்பாடா, எப்படியோ அப்பிடியும் இப்பிடியும் மறுபடி நட்பாகிட்டாங்க..
அப்புறம் நீங்க எப்பிடி?
காலையிலேயே விடியலில் பலரைக் கடித்து ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது..
எப்பூடி? ;)