உலகக் கிண்ண வெற்றி - விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்

ARV Loshan
28

கொஞ்சம் பெரிய உலகக் கிண்ணப் பதிவு வர இருக்கு.. அதுக்கு முன்னதாக ஒரு மாத அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டு ஒரு குட்டிப் பதிவு..

விக்கிரமாதித்த ஊகங்களாக ஒரு குட்டிப் பதிவு..



இன்றைய கால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெல்கிறது..
வெல்லவேண்டும்..
ஆசிய அணி.. நிறைய திறமை இருந்தும் ஜெயிக்க அதிர்ஷ்டமும் வீரர்களின் ஒற்றுமையும் இல்லாமல் தவிக்கும் அணி..
பாகிஸ்தான் வென்றால் தான் அரையிறுதி சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அத்துடன் பாகிஸ்தான் வென்றால் தானே கொழும்பில் வைத்து ஆஸ்திரேலியாவின் தொடர்வேற்றியை நிறுத்திய பாகிஸ்தானை நம்ம ஆஸ்திரேலியாவால் பழிவாங்க முடியும்.

நாளைய காலிறுதியில் ஆஸ்திரேலியா வெல்லவேண்டும்.. வெல்கிறது..
காரணம் எனக்குப் பிடித்த இரண்டாவது அணி :)
சுழல் பந்துவீச்சு ஆடுகளங்களிலும் கலக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பரிசாக இந்த வெற்றி கிடைக்கும்.
(எனக்கு ஐந்து பிட்சாக்களும் கிடைக்கும்)

ஆஸ்திரேலியாவின் மீது இருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக இந்தியாவின் பின்வரிசைத் துடுப்பாட்டம் மீது இப்போது இருக்கிறது.
அஹ்மதாபாத் ஆஸ்திரேலியாவின் கோட்டையாகிறது நாளை.

நியூ சீலாந்து - தென் ஆபிரிக்க காலிறுதியில் தென் ஆபிரிக்கா இலகுவாக வென்றுவிடும். வேகப் பந்துவீச்சு, சுழல்பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று சகலதுறைகளிலுமே நியூ சீலாந்தை விட தென் ஆபிரிக்கா விஞ்சி நிற்கிறது.

அத்துடன் நியூ சீலாந்தை ஏற்கெனவே இலங்கை அணி மரண அடி அடித்திருப்பதால் செத்த பாம்பாக இல்லாமல், புதிய பாம்பாக அடிக்கலாமே..

இங்கிலாந்தை கொழும்பில் வைத்து அணியில் உள்ள அத்தனை சுழல் பந்துவீச்சாளர்களையும் மொத்தமாக உள்ளே இறக்கி ஒட்டுமொத்தமாக உருட்டித் தள்ளி இலங்கை வென்றுவிடும்.
இங்கிலாந்து தட்டுத் தடுமாறி இதுவரை வந்ததே பெரிய விஷயம்.


அரையிறுதிகள்...

அசுற்றலியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொள்ளும்..
மொஹாலியில் 96ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளை வென்று இறுதிப் போட்டிக்கு வந்த ராசி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது.

இலங்கை கொழும்பில் வைத்து தென் ஆபிரிக்காவை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்த மாதிரியே அரையிறுதியுடன் வீட்டுக்கு பார்சல் பண்ணிவிடும்.
தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து அணிகள் அரையிறுதிக்கு மேல் சென்றால் அவர்களுக்கும் ஆகாது.. கிரிக்கெட்டுக்கும் ஆகாதாம் என்று சுவாமி வந்தியானந்தா என்ற உலகப் பிரபல நாடி ஜோசியர் சொல்லியுள்ளார்.

எனவே இறுதிப் போட்டி 1996, 2007 இறுதிப் போட்டிகள் போலவே அமையும்..

ஆஸ்திரேலியா - இலங்கை

ஆனால் கடந்த உலகக் கிண்ண இறுதியில் கில்க்ரிச்ட்டாலும் இருளாலும் தோற்கடிக்கப்பட்டமைக்கு இம்முறை மும்பையில் ஆசிய அமோக ஆதரவோடு இலங்கை பழி தீர்த்துக்கொள்ளும்.

இது ஊகம் என்பதை விட விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்..
இப்படியே அனைத்தும் நடந்தால் சந்தோசம்.

இது எல்லாம் நடக்காவிட்டாலும் அநேகமானவை நடக்க வாய்ப்புள்ளது.
யாராவது இல்லை என சொல்பவர்கள் என் மூக்குக்கு சேதாரமில்லாத பந்தயத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
சாதக பாதகங்கள் பார்த்து விக்கிரமாதித்தன் பந்தயத்தில் இறங்குவார்.




Post a Comment

28Comments

Please Select Embedded Mode To show the Comment System.*