அதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2

ARV Loshan
17


இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றிய செய்திகள்,ஆய்வுகள்,கணிப்புக்கள் பல வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஆசிய ஆடுகளங்களில் இந்த உலகக் கிண்ணம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ள அணியாகப் பந்தயக்காரர்களால் (உத்தியோக பூர்வ/அங்கீகரிக்கப்பட்ட) வரிசைப்படுத்தப்பட்டுள்ள அணிகள்..

Outright World Cup 2011 Odds - Click To Bet

PaddypowerBoylesportsBet365TotesportWilliamhillVCBet
India3311/411/411/45/2
Sri Lanka49/29/29/255
Australia511/211/259/211/2
South Africa11/25511/29/211/2
England513/26656
Pakistan8815/2789
New Zealand201620201620
West Indies201620162022
Bangladesh334040335050
Zimbabwe200200250100200200
Ireland5005005005005001000
Canada100010002000100010002000
Holland75010002000100010002000
Kenya100010002000100010002000


ஆடுகளத் தன்மைகள், கால நிலைக்கும் வெப்ப தட்பத்துக்கும் ஏற்ப தம்மைப் பழக்கப்படுத்தல், நாணய சுழற்சிகள், சுழல் பந்துவீச்சு, அதிரடித் துடுப்பாட்டங்கள் என்று பல விஷயங்கள் இம்முறை ஒவ்வொரு அணிக்குமான வெற்றி வாய்ப்புக்களைத் தீர்மானிக்கும் விடயங்களாக சொல்லப்படும் நேரத்தில், என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணிகளின் துடுப்பாட்ட வலிமையுடன் அந்தந்த அணிகளின் சமநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு தான் வெற்றிகள் தீர்மானிக்கப்படப் போகின்றன என்ற அடிப்படை அம்சத்தில் தான் நான் நோக்குகிறேன்.அந்த வகையில் இந்த உலகக் கிண்ண வெற்றியாளரையும் ஒவ்வொரு போட்டிகளில் அணிகளின் வெற்றிகளையும் பெருமளவில் தீர்மானிக்கப் போகின்ற காரணி என நான் நினைப்பது அணிகளின் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் தான்.

அணியொன்றில் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான பாலமாக அமைந்து அணிக்கான ஓட்ட வேகத்தை அதிகரிப்பது அலது விக்கெட்டுக்கள் சரியும் வேளையில் அணியைப் பாதுகாப்பது என்ற முக்கியமான கடமைகள் மட்டுமல்லாமல், வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கையில் ஒருநாள் போட்டிகளில் பரவலாகப் பேசப்படும் விடயமான முடித்துவைத்தல்(Finishing) என்பதையும் சரியாக நிறைவேற்றவேண்டிய கடப்பாடும் இந்த ஏழாம் இலக்க வீரருக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்புக்களாகின்றன.

ஏழாம் இலக்க வீரர் சகலதுறை வீரராக அமைவது ஒவ்வொரு அணிக்கும் மேலதிக வளம்+பலம்.

தரவுகள் ரீதியாக இதனை நிரூபிக்க எனது அன்புக்குரிய அனலிஸ்ட்டின் உதவியை நாடினேன். (தன் பெயரை அவர் வெளியிட வேண்டாம் என்று கேட்டதனால் பெயரைக் குறிப்பிடவில்லை.)

ஒரு நாள் சர்வதேச வரலாற்றில் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்களின் மொத்தப் பெறுபேறுகள்..
Overall figures
overall7961971-201130994922115880333139*21.3410653775.408252395

Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அணிகளின் ஏழாம் இலக்கப் பெறுபேறுகள்

View overall figures [change view]
Start of match date greater than or equal to 1 Oct 2008 remove greater than or equal to 1 Oct 2008 from query
Totals in terms of batting team switch totals
Ordered by matches won (descending)
Page 1 of 1Showing 1 - 17 of 17First pageFirst Previous pagePreviousNext Next page Last Last pageReturn to query menu
Cleared query menu
Overall figures
Australia2009-2011714523031.9536.105.25350131investigate this query
India2008-2011684123041.7838.015.6741488investigate this query
Sri Lanka2008-2011573420031.7032.515.18411115investigate this query
South Africa2008-2011433013002.3040.315.77399119investigate this query
Bangladesh2008-2010512427000.8828.364.73320124investigate this query
England2008-2011512427000.8830.555.23347117investigate this query
Zimbabwe2008-2010542133000.6325.844.6835144investigate this query
New Zealand2008-2011552029060.6827.455.12336103investigate this query
Ireland2008-201027198002.3730.754.77325147investigate this query
Pakistan2008-2011471927010.7027.065.0038575investigate this query
Netherlands2009-201018108001.2529.194.56304125investigate this query
West Indies2008-2011451030050.3326.995.04319128investigate this query
Afghanistan2009-20101697001.2827.734.6229588investigate this query
Canada2009-201019711010.6325.974.56288108investigate this query
Kenya2008-201033626010.2322.434.39285112investigate this query
Scotland2009-201017611000.5424.414.23286104investigate this query
Bermuda2009-2009202000.0035.715.00259-investigate this query

Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகளின் ஏழாம் இழக்க வீரர்களின் பெறுபேறுகள்..


Start of match date greater than or equal to 1 Oct 2008 remove greater than or equal to 1 Oct 2008 from query
Batting position equal to 7 remove equal to 7 from query
Grouped by team remove team from query
Ordered by runs scored (descending)
Page 1 of 1Showing 1 - 17 of 17First pageFirst Previous pagePreviousNext Next page Last Last pageReturn to query menu
Cleared query menu
Overall figures
Australia132009-2011715314126463*32.41132795.2503111110investigate this query
Zimbabwe142008-20105447710238625.57137274.560827720investigate this query
Pakistan82008-201147447980109*26.48856114.481337539investigate this query
New Zealand142008-20115546993575*25.27116580.250457318investigate this query
Sri Lanka142008-2011574178046623.64103177.98052599investigate this query
India122008-201168431480310527.6891088.241446127investigate this query
Bangladesh92008-201051411477664*28.74106872.650325510investigate this query
England122008-201151421072460*22.6285684.570115116investigate this query
West Indies92008-2011453856536219.7870392.880124821investigate this query
South Africa102008-201143351256857*24.6959196.100143312investigate this query
Kenya72008-2010332925415820.0370576.730354510investigate this query
Ireland82008-2010271954386031.2859973.12021364investigate this query
Afghanistan62009-2010161222206022.0028377.73022195investigate this query
Scotland72009-2010171422044617.0039751.3800291investigate this query
Canada112009-2010191411724913.2327961.6400373investigate this query
Netherlands82009-2010181311682914.0026164.3600276investigate this query
Bermuda22009-20092212321*23.002592.0000030investigate this query


Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஏழாம் இலக்கத்தில் ஓட்டங்கள் குவித்த வீரர்கள்..


Overall figures
Mahmudullah (Ban)2008-20103328862664*31.3086072.79031448investigate this query
JR Hopes (Aus)2009-20103024462163*31.0562599.36020652investigate this query
Shahid Afridi (Pak)2008-2011252324836523.00373129.490123920investigate this query
YK Pathan (India)2008-20112317640710537.00357114.001312923investigate this query
E Chigumbura (Zim)2008-2010151523696428.3844882.36030374investigate this query
AD Mathews (SL)2008-20111912129052*26.3639573.41031183investigate this query
KA Pollard (WI)2009-2010121202666222.16266100.000111811investigate this query
RA Jadeja (India)2009-2010221422525721.0039563.79012192investigate this query
JK Kamande (Kenya)2008-2010131102425822.0028684.61011206investigate this query
P Utseya (Zim)2009-201098323868*47.6030079.33030128investigate this query
SPD Smith (Aus)2010-20111110323546*33.5725891.08001182investigate this query
LJ Wright (Eng)2009-20101813122348*18.5829775.08001175investigate this query
JF Mooney (Ire)2009-20108722115442.2030668.95010212investigate this query
Kamran Akmal (Pak)2008-2010109120867*26.00190109.47020139investigate this query
MV Boucher (SA)2008-201076518957*189.00149126.8401098investigate this query
BJ Haddin (Aus)2009-20109831796335.80178100.56010122investigate this query
DJG Sammy (WI)2009-201110911744021.7521282.07001126investigate this query
JDP Oram (NZ)2008-201185117075*42.5020483.33020107investigate this query
GD Elliott (NZ)2009-20109731675941.7523670.76011122investigate this query
J Botha (SA)2009-2011121011634418.1121177.2500070investigate this query
S Matsikenyeri (Zim)2009-20095401578639.2516197.51010103investigate this query
Abdul Razzaq (Pak)2010-2010441156109*52.00134116.411001010investigate this query
DR Lockhart (Scot)2010-201010811544622.0027057.0300170investigate this query
GJ Hopkins (NZ)2009-20107711504525.0018083.33001132


Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் strike rate இன் அடிப்படையில் ஏழாம் இலக்க வீரர்கள்

Overall figures
Shahid Afridi (Pak)2008-2011252324836523.00373129.490123920investigate this query
YK Pathan (India)2008-20112317640710537.00357114.001312923investigate this query
Kamran Akmal (Pak)2008-2010109120867*26.00190109.47020139investigate this query
KA Pollard (WI)2009-2010121202666222.16266100.000111811investigate this query
JR Hopes (Aus)2009-20103024462163*31.0562599.36020652investigate this query
D Ramdin (WI)2008-2010139310228*17.0010696.2200091investigate this query
SPD Smith (Aus)2010-20111110323546*33.5725891.08001182investigate this query
JK Kamande (Kenya)2008-2010131102425822.0028684.61011206investigate this query
TM Odoyo (Kenya)2009-2010109211852*16.8514382.51013102investigate this query
E Chigumbura (Zim)2008-2010151523696428.3844882.36030374investigate this query
DJG Sammy (WI)2009-201110911744021.7521282.07001126investigate this query
J Botha (SA)2009-2011121011634418.1121177.2500070investigate this query
LJ Wright (Eng)2009-20101813122348*18.5829775.08001175investigate this query
AD Mathews (SL)2008-20111912129052*26.3639573.41031183investigate this query
Mahmudullah (Ban)2008-20103328862664*31.3086072.79031448

Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகள் வெற்றி பெறுகையில் ஏழாம் இலக்க வீரர்களின் பெறுபேறுகள்

overall1192008-2011325207744425109*33.27454397.4011811353113


Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகள் தோல்வி அடைகையில் ஏழாம் இலக்க வீரர்களின் பெறுபேறுகள்

Overall figures
overall1152008-201132532136581010520.38779874.501223041297


இதிலிருந்து அணியின் வெற்றியில் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்களின் முக்கியமான பங்காற்றுகை தெளிவாகத் தெரிகிறது அல்லவா?
அணிகள் வெற்றி பெறுகையில் ஏழாம் இலக்க வீரர்களின் சராசரிகள் & strike rates உயர்வாக இருப்பதையும் தோல்வி அடைகையில் ஏழாம் இலக்க வீரர்கள் மிக மோசமாக விளையாடி இருப்பதையும் கவனிக்கலாம்.


இம்முறை விளையாடக் கூடிய அணிவரிசைகளை ஊகித்து ஏழாம் இலக்க வீரர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், (14 உலகக் கிண்ண அணிகளில் ஒன்பது முக்கிய அணிகளையே நோக்குகிறேன்)

ஆஸ்திரேலியா - ஸ்டீவன் ஸ்மித்
ஏனைய அணிகளின் ஏழாம் இலக்க வீரர்களுடன் பார்க்கும்போது இவர் மிகவும் அரை குறையாகத் (bits and pieces cricketer )தெரிகிறார்.(எனக்கு முன்பிருந்தே ஸ்மித் என்ற இந்த 'சகலதுறையாளரை 'ப் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அண்மையில் இங்கிலாந்துடனான சில போட்டிகளை ஓரளவு வென்று கொடுக்க இவரது பந்துவீச்சும் கொஞ்சம் அதிரடியான துடுப்பாட்டமும் காரணமாக அமைந்ததென்னவோ உண்மை தான். இன்னும் தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டி இருக்கும் இவருக்கு இந்த உலகக் கிண்ணம் நல்ல களமாக அமைகிறது.
ஆஸ்திரேலியாவின் இரண்டாம் சுழல் பந்துவீச்சாளராக சராசரியாக ஆறு ஓவர்களையாவது வீசுவார் என நம்பலாம்.(டேவிட் ஹசியும் இருப்பதனால்)

சில போட்டிகளில் தன்னை ஒரு வெற்றிகர அதிரடி வீரராகத் (pinch hitter) தன்னை நிரூபித்துள்ள மிட்செல் ஜோன்சனுக்கு துடுப்பாட்டப் பதவியேற்றம் கிடைத்தால் ஸ்மித் எட்டாம் இலக்க வீரராகவும் விளையாடவேண்டி வரலாம்.

பங்களாதேஷ்
பங்களாதேஷ் அணியின் வரிசை நிறைய சகலதுறை வீரர்களைக் கொண்டுள்ளதால் யார் ஏழாம் இலக்கம் என்பதை சரியாக ஊகிக்க முடியாது. ஆனாலும் அவர்களின் துடுப்பாட்ட வரிசையில் ஆறு,ஏழு,எட்டு ஆகிய மூன்றுமே (அண்மைக் காலத்தில் முஷ்பிகுர் ரஹீம், மகமதுல்லா மட்டும் நயீம் இஸ்லாம்) சுழற்சியாக மாறினாலும் அதிரடியாக ஆடுவதால் ஆராய வேண்டியதும் இல்லை;சாதக பாதகங்கள் மாறப்போவதுமில்லை.

இங்கிலாந்து -  மைக்கேல் யார்டி

இங்கிலாந்தின் வியூகம் ஒரு சுழல் பந்துவீச்சாளருடன் இருக்காது எனும் நம்பிக்கையில் ஸ்வானுடன் யார்டியும் விளையாடுவார் எனக் கருதுகிறேன்.
மோர்கனின் காயம் இங்கிலாந்தின் சமநிலையைக் குழப்பி இருப்பதால் சில ஆடுகளங்களில் இங்கிலாந்தின் ஏழாம் இலக்கம் யார்டியிடம் இருந்து லூக் ரைட், போபரா அல்லது கொள்ளிங்க்வூத் ஆகியோரில் ஒருவருக்கும் செல்லலாம் என நிலைமை இருந்தாலும் யார்டி இங்கிலாந்தின் ஒருநாள் அணியின் முக்கியமான ஒருவராக அண்மைக் காலமாக விளங்கிவருகிறார்.

நம்பகமான பந்துவீச்சும், நம்பி இருக்கக் கூடிய துடுப்பாட்டமும் நீண்ட காலத்துக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுழல் பந்துவீசும் சகலதுறை வீரரை வழங்கியுள்ளது.யார்டியை இந்த உலகக் கிண்ணத்தில் ஸ்வானைப் போலவே இங்கிலாந்து நம்பி இருக்கலாம்.

இந்தியா - யூசுப் பதான்

இந்தியாவின் ஏழாம் இலக்கம் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு ஏழரைச் சனியாக ரவீந்தர் ஜடேஜாவின் வடிவில் இருந்தது. ஆனால் இப்போதோ Lucky 7 என்பது போல யூசுப் பதானின் அவதாரத்தில் அதிர்ஷ்டமாகக் கொட்டுகிறது. எந்தவொரு போட்டியையும் தனி நபராக மாற்றக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ள பதான் பிரமிக்க வைக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை போட்டியின் இடை நடுவில் அல்லது இறுதிப் பகுதியில் வந்து துணையே தராத கடைநிலைத் துடுப்பாட்ட வீரர்களுடன் சேர்ந்து போட்டிகளின் முடிவைத் தமது அணிக்கு சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களாக முன்பிருந்த ஜாவேத் மியன்டாட், மைக்கேல் பெவான், லான்ஸ் க்ளூஸ்னர் ஆகியோருக்குப் பிறகு இப்போது பதானும் பாகிஸ்தானின் அப்துர் ரசாக்கும் மட்டுமே குறிப்பிடக் கூடியவர்கள் என்பேன்.

தென் ஆபிரிக்க ஆடுகளங்களிலேயே அடித்து நொறுக்கியவருக்கு இந்திய ஆடுகளங்கள் ஜுஜுபியாக இருக்கும்.
இவரிடமிருந்து குறிப்பிட்ட நல்ல ஓவர்களையும் இந்தியா எதிர்பார்க்கும்.ஆனால் இன்னும் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் மர்ம ஆயுதம் எனலாம்.

  
நியூ சீலாந்து - ஜெகொப் ஓராம்

அண்மைக் காலத் தோல்விகள் நியூ சீலாந்தின் தோல்விகள் நியூ சீலாந்தின் துடுப்பாட்ட வரிசையை மாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இதனால் காயத்திலிருந்து மீண்டுள்ள ஓராம் ஏழாம் இலக்கத்தில் விளையாடுவார் என எதிர்பார்த்தாலும் பிரெண்டன் மக்கலம், நேதன் மக்கலம், டேனியல் வெட்டோரி, ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகிய நாலவ்ரில் ஒருவர் கூட இந்த இடத்தில் இடப்படலாம் - ஆடுகளத்தின், அணியின் சமநிலையைப் பேணும் விதத்தின் அடிப்படையில்.

ஆனால் இந்த ஐவரிடமும் உள்ள மிகச் சிறப்பான ஒற்றுமை சகலதுறையாற்றலால் தனித்துப் போட்டிகளை மாற்றக் கூடியவர்கள்.

ஓராம் பூரண உடற் தகுதியோடு இருந்தால் நியூ சீலாந்தின் மூன்றாவது/நான்காவது வேகப் பந்துவீச்சாளராகவும் மிக உபயோகமாக செயற்படக் கூடியவர் ஓராம்.
இவரையே போல வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான பிராங்க்ளின் இப்போது நம்பகரமான துடுப்பாட்ட வீரராக மாறியுள்ளார்.

ஆசிய ஆடுகளங்கள் என்பதால் இரண்டாவது சுழல் பந்து வீச்சாளராக நேதன் மக்கலம் விளையாடும் பட்சத்தில் அண்மைக்காலத்தில் வேட்டோரிக்கு முன்னதாக அவர் துடுப்பெடுத்தாடுவது போல ஏழாம் இலக்கத்தில் அவர் வந்தாலும் ஆச்சரியமில்லை.

சரியாக வியூகம் அமைத்தால் இந்த நியூ சீலாந்தும் ஆபத்தான அணியே.


பாகிஸ்தான் - ஷஹிட் அப்ரிடி

பாகிஸ்தானின் பூம் பூம் அப்ரிடி சரியான Formஇல் இருந்தால் பாகிஸ்தானுக்கு அன்று திருவிழா என்பது சிறு குழந்தைக்குமே தெரிந்தது. பாகிஸ்தானின் சம பலத்தை அப்ரிடி ஏழாம் இடத்திலும் அப்துர் ரசாக் அவருக்கு அடுத்ததாகவும் வந்து காப்பாற்றி வருவதோடு அண்மைய பல போட்டிகளை ஆச்சரியமாக மாற்றிக் காட்டியுள்ளார்கள்.

அப்ரிடி இருப்பதால் மேலதிக சுழல் பந்துவீச்சாளர் தேவையும் இல்லை. தலைவராகவும் இருப்பதால் இன்னும் பொறுப்போடு பாகிஸ்தானின் ஏழு செயற்படும் என்று ரசிகர்கள் மலை போல நம்பி இருக்கிறார்கள்.

மேலேயுள்ள அட்டவணையில் அப்ரிடி ஏழாம் இலக்கத்தில் அடித்த அதிரடி வரலாறும் பதியப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்கா - ஜோஹான் போதா/ பப் டூ ப்லெசிஸ்

சமநிலை அணிகளில் முதன்மையாக இருந்த தென் ஆபிரிக்கா பௌச்சர்,கிப்ஸ் ஆகியோரை வெளியே அனுப்பிய பினர் ஆறாம்,ஏழாம் இலக்கங்களில் தடுமாறி வருகிறது.உறுதியாக இவர் தான் ஏழாம் இலக்க வீரராக விளையாடுவார் என்று குறிப்பிட முடியாமல் உள்ளது.
கலிஸின் காயம் காரணமாகத் தான் இந்தத் தொய்வு இந்தியாவுக்கெதிரான தொடரில் தெரிந்ததாக நாம் நினைத்தாலும் இப்போது கலிஸ் வந்த பிறகு யார் ஏழாம் இலக்க வீரர் என்று குழப்பம் நீடிக்கவே செய்கிறது.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் + இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் தென் ஆபிரிக்கா 
விளையாடினால் போதா , அல்லது கலிஸ் தான் ஐந்தாம் பந்துவீச்சாளர் என்றால் டூ ப்லெசிஸ் என்னும் ஊகம் தான் இருக்க முடியும்.
தென் ஆபிரிக்காவின் பலவீனமாக இருக்கப் போவது இது தான்.

இலங்கை - சாமர கபுகேதர 

அண்மையில் நடந்துமுடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஏழாம் இலக்கத்தை மாற்றி இருந்தாலும் சரியான வரிசையில் கபுவுக்கே இந்த இடம் என்பது ஓரளவு உறுதியானதே.
இரு சுழல் + இரு வேகம் என்ற வியூகத்தில் மத்தியூஸ்+டில்ஷான் ஐந்தாவது பந்துவீச்சாளரின் இடத்தை நிரப்புகையில் ஏழாம் இடம் கபுகேதரவினால் உறுதியாகிறது. இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் பலம் பெறுகிறது.
கபுகேதரவின் சிறப்பான களத்தடுப்பும் அதிரடித் துடுப்பாட்டமும் இலங்கைக்கு மேலதிக வலமாக அமையும்.
96 இல் இலங்கை உலகக் கிண்ணம் வென்றபோது ரொஷான் மகாநாம, ஹஷான் திலகரத்ன மாறி மாறி ஏழாம் இடம் வரை துடுப்பட்டத்தைப் பலப்படுத்தியதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகள் - டரன் சமி/கார்ல்டன் பௌ

இருவருமே ஆளுமையானவர்களாக தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகளின் வரிசைக்குப் பலம் சேர்ப்பவர்களாகத் தெரியவில்லை.தனித்து நின்று போட்டியை வென்று கொடுக்கும் ஆற்றலோ,கடைநிலைத் துடுப்பாட்ட வீரருடன் சேர்ந்து அணியைக் கட்டியெழுப்பும் ஆற்றலோ இவர்களிடம் இல்லை என்பதை அடித்துக் கூறலாம்.


நாளை முதல் ஆரம்பிக்கும் பயிற்சிப் போட்டிகளில் அணிகளின் இறுதி வியூகங்கள் பற்றி நாமும் அறிந்துகொள்ளலாம்; அணிகளும் தமது இறுதிப் பதினொருவரை உறுதிப்படுத்திக்கொள்ளும்.

இந்த அதிமுக்கியமான ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட இடங்களும் யாரெனத் தெளிவாகத் தெரியும்.




Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*