இலங்கையின் மழை, இந்தியாவின் முக்கிய வீரர்கள் நியூ சீலந்துக்கு எதிராக விளையாடாமை, ஆஸ்திரேலிய வீரர்கள் ஒழுங்காக விளையாடாமை என்று பல விஷயங்களால் கிரிக்கெட் கொஞ்சம் அலுத்திருன்தது.
நாளை மீண்டும் பரபர கிரிக்கெட் ஆரம்பிக்கிறதே.. அதான் மனதில் இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள..
இலங்கை
2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையின் முப்பது வீரர்கள் கொண்ட முன்னோடி வட்ட கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட, அண்மைக் காலமாக சிறப்பாக விளையாடிவரும், இளம் வீரர்களுடன் வருவார்களா இல்லையா? என்ற எதிர்பார்ப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திய இருவரும் பெயரிடப்பட்டுள்ளார்கள்.
அந்த இருவர் !!
வாஸ் மீண்டும் அணியில் இணையப் போகிறார்;மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராக ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் விளையாடப் போகிறார் என்றும் நம்பகமான விஷயங்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் சனத் ஜெயசூரிய மீண்டும் வருவார் என்பதற்கான நம்பகமான வாய்ப்புக்கள் இருக்கவில்லை.அரசியல் அழுத்தம் காரணமாகவே இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது என்பது தெளிவு.
இரண்டு இளைய வீரர்களுக்கு இந்த இடங்களைத் தேர்வாளர்கள் வழங்க முடியாமல் செய்த சூழ்நிலை எது என்று ஓரளவுக்கு அநேகருக்குத் தெரியும்.
சனத் என்ன form இல் எப்படி இருக்கிறார் என்று அவர் பயிற்சி பெரும் மைதானத்தில் விளையாடும் கழக அணி வீரர் சிங்களத்தில் சொன்னது "கஹனவா.. ஹையேன் என போலேவலட்ட ஐயா நிகம்ம மாட்டுவேனவா நே" (அடிக்கிறார்.. வேகமாக வரும் பந்துகளுக்கு அண்ணர் மாட்டுப் படுறாரே)
வாசின் அனுபவம் வேண்டுமானால் உப கண்ட ஆடுகளங்களில் உபயோகப்படலாம். இங்கிலாந்தில் பிராந்திய போட்டிகளிலும் வாஸ் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் வேகம்? இப்போது வாஸ் வீசும் பந்துகளின் வேகத்தை விட ரண்டீவின் பந்துகள் வேகமாக இருக்கலாம்.
சனத்தின் பொற்காலம் கடந்துவிட்டது.அவருக்குப் பந்துவீச்சாளர்கள் பயந்த காலம் கடந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள முப்பது பேரில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உலகக் கிண்ணம் வென்ற வேளையில்(1996) அணியில் இருந்த மூவர் உள்ளார்கள்.முரளி,வாஸ்,சனத்.
தேர்வாளர் குழுத் தலைவர் அரவிந்தவும் இவர்கள் கூட விளையாடியவரே.
நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வாஸ்,சனத்தின் தெரிவு பற்றி அரவிந்த பிடி கொடுக்காமலேயே பேசி இருந்தார்.
திறமை,பெறுபேறுகளுடன் அனுபவமும் சேர்ந்தால் ஒரு நல்ல அணியைத் தெரிவு செய்ய முடியும் என்பதே அவரது கருத்தின் சாராம்சம்.
நான் என்ன செய்வது?
நான் மட்டும்?
ஜனவரியில் தேர்வு செய்யப்படவுள்ள பதினைந்து வீரர்களுக்கான என் சிபாரிசுகள் -
குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, T.M.டில்ஷான், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், சாமர கபுகெதர, சாமர சில்வா,எஞ்சேலோ மத்தியூஸ்,திசர பெரேரா, முத்தையா முரளிதரன்,சுராஜ் ரண்டீவ், அஜந்தா மென்டிஸ், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, டில்ஹார பெர்னாண்டோ.
தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்களோ?
வாஸ் வந்தால் குலா வெளியே? சனத் வரவேண்டுமாக இருந்தால் தரங்க /சாமர சில்வா வெளியே?
மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் விளையாட வந்து, மழை பெய்யாமல் இருந்தால் விளையாடும் form மூலமாவது பார்க்கலாம்.. ம்ம்ம்ம்
உலகக் கிண்ணத்துக்காக இலங்கையில் தயார் செய்யப்பட்டுள்ள மைதானங்களின் தன்மைகள் பற்றி இலங்கை அணிக்கே இன்னும் தெரியாதது மற்றுமொரு சிக்கல்..
Home Advantage???
அப்பிடின்னா என்னாங்கோ?
#*# இன்னும் ஒரு அல்ல அல்ல இரு விரிவான கிரிக்கெட் அலசல்கள் இன்று இரவுக்குள் வரும் ..