இதற்கு முந்திய பகுதிகள்...
கொலைக்காற்று - 01 தரங்கம் - சுபாங்கன்
கொலைக்காற்று - 02 எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03 சதீஸ் இன் பார்வை - சதீஸ்
கொலைக்காற்று - 04 நா - மது
இதோ....
கொலைக்காற்று
கட்டிலில்..
"ஜெனி கொலை செய்யப்பட்டிருக்கிறா.. அதுக்குப் பிறகு சேகர்.. உங்கட க்ளோஸ் பிரென்ட்.ஆனால் நீங்கள் கொஞ்சமும் அப்செட் ஆனா மாதிரித் தெரியேல்லையே.."
"அப்ப, என்னை நீ சந்தேகப்படுறியா வர்ஷா?"
"சொறி கௌதம்.. எனக்குக் குழப்பமா இருக்கு.." கண்கலங்கி,தலை குனிந்துகொண்டாள் வர்ஷா.
தளர்ந்துபோய் கலங்கி இருந்தவளை, நகர்ந்துசென்று கைகளால் முதுகை அணைத்து,ஆதரவாகத் தலையைக் கோதிக்கொண்டே,மெல்லிய குரலில்
"அப்செட் ஆகாமல் இல்லை டார்லிங்.. ஆனால் எனக்கு நெருங்கின இரண்டுபேரின் கொலைகள் என்டபடியால் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.. ஜெனி,சேகர் ரெண்டு பேரின் mobile போனுக்கும் நேற்று யோசிக்காமல் கோல் பண்ணிட்டேன். அது ரெண்டும் பொலிஸ்சிட்ட இருக்கும் எண்டு யோசிக்கேல்லை.நாளைக்கு எப்பிடியும் பொலிஸ் ஸ்டேஷன் போகவே வேணும்"
அறையின் ஏசிக் குளிருக்கு கௌதமின் அணைப்பு இதமாக இருந்தாலும், விது -பட விவகாரம் மனசில் கறையான்களின் அரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.கௌதமிடம் சொல்லலாமா? சொன்னால் தன்னை நம்புவானா? கௌதம் நம்பினாலும் விது பதிலடியாக என்ன செய்வானோ? என்று பலப்பல சிந்தனைகள் கலங்கடித்துக்கொண்டிருந்தன.
"என்ன மகாராணி இன்னும் சந்தேகம் போல இருக்கே..விட்டா கௌதம் கொலைகாரன் எண்டு நீயே பேப்பர்,ரேடியோ,டீவீக்கு நியூஸ் குடுத்துடுவாய் போல இருக்கே" சிரித்து சிரிக்க வைக்க முயன்றான் கௌதம்.
சிரிக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் இந்தநிலையில் சிரித்துவைக்காவிட்டாலும் கௌதம் மனம் நோந்துபோகும் என்பதற்காக மெல்லியதாக சிரித்துவைத்தாள் வர்ஷா.
"அடடா இதுக்கே சிரிப்பாய் என்று தெரிஞ்சிருந்தா குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறமாதிரி ஏதாவது ஜோக் சொல்லியிருப்பேனே" என்று அர்த்தபுஷ்டியோடு சொன்ன கௌதமின் பார்வை ஆசையோடு வர்ஷாவின் வளவள கழுத்தில் இருந்து கீழிறங்கி மேய ஆரம்பித்தது.
----------------------
கழுத்தா அது? கண்ணாடிக் குடுவை.தண்ணீர் அவள் குடிக்கும் நேரத்தில் வெளியே இருந்து வழுக்கி செல்வதைப் பார்க்கலாம் போல அவ்வளவு மென்மை.
பூமியில் உள்ள அழகிய பூக்கள் எல்லாம் சேர்ந்து திரட்டி பிரம்மன் செய்த பூப்பந்துகள் என்று வைரமுத்து வர்ணித்த அளவெல்லாம் இல்லை.ஆனாலும் பார்ப்பவர்களை மூச்சுமுட்ட செய்கிற அழகுகள் வர்ஷாவிடம் இருந்தன. பல்கலை நாட்களில் அவள் விளையாடும் வலைப்பந்தைக் காணக் கூடும் கூட்டமெல்லாம் பரிமாற்றப்படும் பந்தைப் பார்த்ததை விட அவள் நெஞ்சப்பந்துகளை வட்டமிட்டதை அவளும் அறிவாள்.
உடுக்கை இடுப்பு என்று தமிழிலும் Hour Glass என்று ஆங்கிலத்திலும் வர்ணிக்கப்படும் அம்சமான இடையும், உடலின் மேற்பாதியை சமன் செய்யும் வளைவு நெளிவுகளுடைய கீழ்ப்பாதியும் தக்கதொரு சிற்பியால் செய்த உயிருள்ள சிலையோ எனப் பார்ப்பவரை பார்க்க செய்யும்.
நினைவுகளும்,சூடான பெருமூச்சுக்களும் சேர்ந்துகொண்டே,
திருமணத்தின் பின்னர் புதிய அழகு பெண்களிடம் சேர்ந்துவிடுகிறது என்பது உண்மைதான். உடலெங்கும் புதிதாக தங்கமுலாம் பூசியதுபோல மினுமினுப்பாக இருந்த வர்ஷாவை மீண்டும் மனசில் ரீவைண்ட் செய்து செய்து மனத்தைக் கிளர்வுபடுத்திக்கொண்டு குளுகுளு ஏசி அறையின் மெதுமெது மெத்தையில் தனியாகப் புரண்டுகொண்டிருந்தான் விது.
கையில் இருந்த அந்தப் புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டே
"அதிர்ஷ்டக்கார கௌதம்.. இப்ப தூக்கத்தால் இடையில் எழும்பி எத்தனையாவது ரவுண்ட் போறியோ" மனதுக்குள் கருவிக் கொண்டே மீண்டும் நூற்றுப் பதினெட்டாவது தடவையாக பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
வர்ஷு என்ன செய்வாள்? மிரட்டலுக்கு இணங்கி நாளை தானாக வருவாளா? இன்னும் ஏதாவது தான் இறங்கி செய்யவேண்டி ஏற்படலாமா? யோசித்துக்கொண்டே ஒரு கையில் பற்றவைத்த சிகரெட்டை வாயில் அமர்த்திவிட்டு, தன் டொஷீபா லாப்டாப்பைத் திறந்து நோண்ட ஆரம்பித்தான்.
வர்ஷு என்ற folderஐத் திறந்து ரகசியமாக எடுத்த படத்தில் அரைகுறையாக ஆபாசமாகத் தெரிந்த வர்ஷுவைக் காமத்தோடு விழுங்கிக்கொண்டே,"எத்தனை பேரடி இப்பிடி ஆரம்பத்தில் டிமாண்ட் காட்டிவிட்டுப் பிறகு மடங்கி இருப்பீங்க? பார்க்கிறேனே.. இங்கே ரூமைச் check out பண்ண முதல் உன்னை check out பண்றேன்" என்று பழைய சத்யராஜாக குரல் கொடுத்துக்கொண்டே, இப்பவே நெட்டில் ஏற்றிவைக்கலாமா,பிறகு பார்த்து ஏற்றிக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டே இணைய இணைப்பிநூடாகத் தன் ஏதோவொரு fake profileஇல் loginஆகி இணையத்தில் எதோ ஒரு வம்பு வேலையைத் தொடங்கும் நேரம் அதிகாலை 3.55.
அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.
-------------------------------
காலை 7.45
'நீல வானம்... நீயும் நானும் ' கௌதமின் செல்பேசி கமலின் குரலை அறையெங்கும் பரவவிட்டு போர்வைக்குள் கலைந்து,களைத்துக்கிடந்த கௌதம்+வர்ஷாவை எழுப்பியது.
அலுத்துக்கொண்டே "ஹெலோ" சொன்ன கௌதமுக்கு மறுமுனையில் எடுத்த நண்பன் சொன்ன விஷயம்
- அதே ஹோட்டலில் அதிகாலை நேரம் பயங்கரமாக சுடப்பட்டு இறந்துபோன இளைஞன் பற்றி...
விது பற்றி எனக்கும் உங்களுக்கும் வர்ஷாவுக்கும் தெரிந்த அளவு கௌதமுக்குத் தெரிந்திருக்காது போலும்.. இளவயதிலேயே இறந்துபோனவனுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே
"என்ன இது நாங்கள் போற இடமெல்லாம் கொலை கொலையா நடந்துகொண்டே இருக்கு" என்று வர்ஷாவிடம் அலுத்துக்கொண்டே "வர்ஷாம்மா போலீசுக்குக் கோல் பண்ணி ஜெனி,சேகர் கொலைகள் பற்றிக் கேக்கப் போறேன்.எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லப்போறேன்.இனியும் லேட்டாக்கினா உன்னை மாதிரியே அவங்களும் என்னைக் கொலைகாரன் லிஸ்ட்டில் சேர்த்திடுவான்கள்"
--------------------
"ஒரு கிழமைக்குள்ள மூன்றாவது கொலை.. இவனும் ஒரு softwareகாரன். ஏதாவது தொடர்பிருக்கலாமோ?" இன்ஸ்பெக்டர் சூரியப்ரகாஷ் தன் மனதிலிருந்த சந்தேகத்தை கான்ஸ்டபிளிடம் கேட்டே விட்டார்.
"சார் கொலையுண்டிருக்கிறவன் நேற்றுத் தான் இங்கே வந்து தங்கி இருக்கிறான்.கண்மூடித்தனம சுடப்பட்டிருக்கிறான். அவனுடைய லேப்டாப் சிதறியிருக்கு.இறந்து போன விதுரன் என்றவன்ட வோலேட் (wallet) தவிர வேற தடயங்கள் இல்லை"
"இவனைப் பற்றி இன்னும் விசாரிக்கவேணும்.அதுசரி முதல் ரெண்டு கொலைகளின் கை ரேகை ரிப்போர்ட்டுக்களை மறுபடி பார்க்கணும்.அந்த மொபைல் நம்பர்களுக்கு வந்த கோல் யார்ட்ட இருந்து வந்ததெண்டு கண்டுபிடிச்சாச்சா?" கேட்டுக்கொண்டே இருந்த சூரியப்பிரகாஷின் செல்பேசி கிணு கிணுத்தது.
கான்ஸ்டபில் மேசையில் கொட்டிக்கொண்டிருந்த விதுவின் வொலேட்டிலிருந்து நான்கைந்து கிரெடிட் கார்டுகள்,சில விசிட்டிங் கார்டுகள்,சில்லறைகளுடன் முன்னைய பலகலைக்கழக அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை, ஐந்தாறு சிம்களுடன் இறுதியாக விழுந்தது ஒரு போட்டோ...
கொலைக்காற்று இனி ஆதிரை(ஸ்ரீகரன்)யின் தளத்திலிருந்து வீசும்.