குரங்கு + குடிகாரன் + கங்கோனின் காதல்

ARV Loshan
22
குரங்கு




ஒரு மிருகக்காட்சி சாலையிலிருந்து குரங்கு ஒன்று ஒருநாள் தப்பிவிட்டது.
பல்வேறு இடங்கள் சுற்றியலைந்து தெரியாத் தனமாக ஒரு திரையரங்குக்குள் நுழைந்து விட்டது.
அங்கே ஒரு பிரபல ஹீரோவின் படம் ஓடிக் கொண்டிருந்தது.
திரையில் ஹீரோவின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள்;கண்ணீர் விடுகிறார்கள்(கருமாந்திரமே என்று);கொட்டாவி விடுகிறார்கள்;வெளியே எழுந்து போகலாமா என்றும் யோசிக்கிறார்கள்.


ஆனால் நம்ம குரங்கார் மட்டும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக,உற்சாகமாக கை தட்டி பயங்கரமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.


என்னடா இது இந்த ரோதனை பிடிச்சவனின் படம் இந்தக் குரங்குக்குப் பிடிச்சிருக்கே என்று ஆச்சரியப்பட்ட நம்ம கஞ்சிபாய் "இந்தப் படத்தை எப்பிடி இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறீங்க?" என்று கேட்டார்.


குரங்கு சொல்லிச்சாம் " இதை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும். என்னுடன் சேர்ந்து எஸ்கேப்பாகிய என் அண்ணனைக் காணலை என்று தேடிக் கவலையுடன் இங்கே வந்தேன்.. ஆனால் பாருங்க என் அண்ணன்  எப்பிடியெல்லாம் பாடுறான்,ஆடுறான்,சண்டைப் பிடிக்கிறான்,சிரிக்கிறான். அது தான் பெருமையா இருக்கு"


என்ன படம்,யார் ஹீரோ என்று அறிய விரும்புபவர்கள் கஞ்சிபாயைத் தொடர்பு கொள்ளவும்..

தனது 22 வது பிறந்தநாளை பத்து வருஷங்கள் தாமதமாகக் குழந்தை,குட்டிகளோடு(பக்கத்து வீடு+உறவினர்கள்) கேக் வெட்டிக் கொண்டாடிய சதீஸ் ட்ரீட் தராததனால் அவரை சீண்ட வந்த ஜோக் என்று யாராவது எண்ணினால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். 
சொல்லிப்புட்டேன்..




குடிகாரன்




வெளிநாட்டில் இருக்கிற நம்ம நண்பர் ஒருத்தர் பயங்கர நல்லவர்.. ஐ மீன் ரொம்ப நல்லவர்னு சொல்லவந்தேன்..
பச்சைத் தண்ணியும் சூப்பும் மட்டும் குடிக்கிற அளவுக்கு அப்பாவி..
பார்ட்டிகளுக்குப் போனாலும் இவரது நண்பர்கள் அடித்தாலும் குடித்தாலும் அப்பாவியா இருந்திட்டு வரும் அம்பி.
வாசனையிலேயே நொக் அவுட் ஆகிவிடும் நோஞ்சான்.


ஆனாலும் நாமும் இவரது குடிகார நண்பர்களும் உசுப்பேற்றி "ஒரு நாள் எப்பிடியாவது இன்று இரவு பார்ட்டியில் மட்டையாகிற அளவுக்கு மூக்கு முட்டக் குடிச்சிட்டுத் தான் மறுவேலை" என்று எமக்கு மெயில் அனுப்பியிருந்தார்.


பிறகு நடந்தவை..


நம்ம நண்பர் கச்சேரியில் இணைந்திருக்கிறார்.. கையில் அவரது நண்பர்கள் கொடுத்ததையெல்லாம் வாங்கி வாங்கி கண்ணை,மூக்கை மூடிக் கொண்டு குடித்திருக்கிறார்.
பார்ட்டி முடிந்தது..


நண்பரின் அலப்பறை தாங்க முடியவில்லை.. கத்துகிறார்..குழறுகிறார்.. தடுமாறி விழப்பார்க்கிறார்.
"இரண்டிரண்டாத் தெரியுது,.. மிதக்கிற மாதிரி இருக்கு" அப்படியெல்லாம் புலம்பிய அவரை அவரது அறையிலே சேர்க்கும்போது மற்ற நண்பர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டதாம்..


அடுத்த நாள் காலையில் நண்பர்கள் எல்லோருக்கும் தொலைபேசியில் தன்னுடைய முதல் நாள் இரவு கூத்துகளுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.


அதுக்கு எல்லோரும் சொன்னது " டேய் போத்தல் கணக்குல குடிச்ச நாங்களே அடக்க ஒடுக்கமாக இருக்கையில்,பச்சைத் தண்ணியை கிளாஸ் கணக்கில் குடிச்ச நீ ஏன் அப்படி ஆட்டம் போட்டு சீன் காட்டினாய்?"


அப்போ தான் நம்மவருக்கு விளங்கிச்சாம் கிளாஸ் கணக்கில் தனக்கு ஊற்றித் தந்து வெறும் தண்ணீர் என்று.
அடடா மாம்சுக்கு மறுபடி சொ.செ.சூ?




கங்கோனின் காதல் 




புதுசாக் காதல் கோட்டை கட்டும் நம்ம கங்கோன் மூன்று வருடங்களாக ஒரு பெண்ணைக் (இலங்கையில் தான் தடை எடுக்கலியே.. அதனால் பெண்ணையே தான்) காதலித்து வருகிறார்.
ஆனால் எட்ட முடியாமலே இருக்கு காதல்..
என்னடா இது ஒவ்வொரு நாளும் சந்திக்கிறான்.. gift கூடக் கொண்டு போய்க் கொடுக்கிறானாம்.. அப்போ ஏன் காதல் மட்டும் பின்நவீனத்துவ சிக்கலாய்க் கிடக்கிறது என்று எனக்கு சந்தேகம்.


சரி ஒரு நாள் அவனுக்குப் பின்னாலேயே போய்ப் பார்க்கலாம் என்று பின் தொடர்ந்தேன்.
ஒரேயொரு லெமன் பப்(lemon puff) பிஸ்கெட்டோடு அந்தப் பெண்ணை சந்தித்து சிரித்துக் கொண்டே காதலை சொன்னான்.பிஸ்கெட்டைக் கொடுத்தான்.
சொல்லிக் கொஞ்ச நேரத்தில் சடாரென்று அந்தப் பிஸ்கெட்டைப் பறித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான்..


என்னடா இதுவென்று திகைத்துவிட்டேன்.




இதே மாதிரி இரண்டு,மூன்று நாள்..


பொறுக்க முடியாமல் ஒரு நாள் கேட்டேன்.. "ஏன் கங்கோன் பிஸ்கெட்டைக் கொடுத்துப் பின் பறிக்கிறாய்?"


"இல்லை அண்ணே அன்றொரு ஆங்கிலத் தளத்தில் படித்தேன்.. காதல் என்றால் கொடுப்பதும் எடுப்பதுமாம்"
என்றான் கங்கோன் கூலாக..


இப்ப ஒத்துக் கொள்கிறேன்.. உன் சொ.செ.சூ குருவுக்கு நீ நல்லதொரு சீடன் தான் ;)




இவை மூன்றும் இன்று காலை 'விடியல்' நிகழ்ச்சியில் நான் சொன்னவை.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டுக்களுடன் இங்கே..


  

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*