இன்று வந்தேமாதரம் தளத்தில் ஒரு பதிவு வாசித்தேன்..
நல்ல பதிவு.
அண்மையில் நம்ம அப்பாவி ஜாக்கி அண்ணனும் (ஜாக்கி சேகர்) இப்படி ஒரு காப்பி அடி மன்னனால் பாதிக்கப்பட்டுள்ளார். விஷயத்தை வாசித்தபோது ஜாக்கி அண்ணனை நினைத்துப் பாவமாக இருந்தது.
வந்தேமாதரம் சசிக்குமார் பதிவுலகுக்கு நன்மையாக ஒரு பதிவைத் தந்துள்ளார் என்று இன்ட்லியில் ஒரு வாக்கும் குத்திவிட்டுக் கொஞ்சம் கீழே பார்த்தால்..
சிவப்பு வட்டமிட்டுக் காட்டியிருக்கும் பதிவின் லிங்க்..
எங்கேயோ வாசித்த தலைப்பாயிருக்கே என்று வாசித்தால்..
அட..
இதைக் கொஞ்சம் பாருங்களேன்..
படங்கள் கூட மாற்றாமல்.. நான் இட்ட அடுத்த நாள் உங்கள் தளத்தில் இந்தப் பதிவு.. நல்ல காலம் நீங்கள் தமிளிஷ்,தமிழ்மணத்தில் பகிரவில்லை.
அண்ணே சசி..
//நாம் தினமும் கிடைக்கும் கொஞ்சம் ஒய்வு நேரங்களில் கூட ஒய்வு எடுத்து கொள்ளாமல் உடலை வருத்தி கொண்டு நம்மால் முடிந்த வரை சிறப்பான பதிவை எழுதுகிறோம். இதை நம் நண்பர்களும் வாசகர்களும் படித்து மகிழ்வார்கள். ஆனால் சில ஈன பிறவிகள் நாம் சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டு நோகாமல் நோம்பு கும்பிட்டு வந்தார்கள் ஆனால் இனிமேல் அப்படி எதுவும் அவர்களால் பண்ண முடியாது உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்தை கூட அவன் காப்பி செய்ய முடியாது.//
இப்படியெல்லாம் நீட்டி முழக்கி இருக்கும் உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா?
இவ்வளவு நாளும் நான் கவனிக்கவில்லை.
இப்படி இன்னும் என்னென்ன யார் யாருடையதை சுட்டு உங்களுடையதாக்கியுள்ளீர்களோ?
ஏன் இந்தப் பிழைப்பு?
குறைந்தபட்சம் ஒரு நன்றி?
அண்மையில் என்னுடைய எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பதிவையும் இதய பூமி என்ற இணையத்தளத்தில் விமலன் என்பவர் சுட்டுப் போட்டுள்ளார்.(அறியத் தந்த கங்கோனுக்கு நன்றி)
சிறு எழுத்துப் பிழை ஒன்று..அதுவும் மாறாமல் அப்படியே ஈயடிச்சான் கொப்பியாக..
அந்த இணைய நிர்வாகிக்கு இது குறித்து தகவல் அனுப்பினேன்.. ம்ஹூம்.. ஒரு பதில் இல்லை.
சசிக்குமாருக்கும் பின்னூட்டம் அனுப்பினேன். பிரசுரிக்கவில்லை.
ஊருக்குத் தான் உபதேசமா?
நண்பர்ஸ்.. உங்கள் பதிவுகளும் பத்திரம்..
வேடிக்கை - சசியின் இன்னொரு பதிவு 'காப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க'
சிரிப்பதா அழுவதா?
Post a Comment
20Comments
3/related/default