சேவாக் 99 Not out + ரண்டீவ் No ball

ARV Loshan
7 minute read
118
ரண்டிவ்- சேவாக்- 99 not out - நோ போல் விவகாரம் சூடு இன்னும் ஆறாமலே இருக்கிறது..


நேற்று முழுக்க எக்கச் சக்க பிசியாக இருந்ததால்(அலுவலகத்துக்கும் போகவில்லை.. இரவு பத்து மணிவரை இணையமும் பார்க்கவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள்) இரவுக்குப் பிறகு இப்போது வரை தான் இந்த விவகாரம் பற்றி முழுக்க வாசித்து அனைத்துப் பக்கக் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டுள்ளேன்.


எனது தனிப்பட்ட கருத்தை அறிந்துகொள்ளப் பலர் ஆர்வம் காட்டியதைப் பார்த்தேன்..


என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஆனது விதிகளுக்குட்பட்டு,அதன் மான்மியம்,மேன்மைகளுடன் விளையாடப்பட வேண்டியது..எப்படி வேண்டுமானாலும் என்பதல்ல,இப்படித் தான் விளையாடப்பட வேண்டும் என்று எப்போதும் விரும்புபவன்.
சுராஜ் ரண்டிவ் அன்று செய்தது அவர் வேண்டுமென்றே தெரிந்தே செய்திருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது.
கிரிக்கெட்டில் கண்ணியமாக விளையாட வேண்டியதும் Fair play என்பதும் இருக்க வேண்டும்.
ரன்டிவை வேறு யாராவது தூண்டி விட்டிருந்தால் அவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே..




இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தான் சூத்திரதாரி என்று வாய் கிழியப் பாய்ந்து பாய்ந்து கத்திய இந்திய ஊடகங்கள் இன்று டைம்ஸ் நாளிதழினால் மூக்குடைபட்டு நிற்கின்றன.
அது டில்ஷானாம்..
ஹர்ஷா போகலே தனது ட்விட்டரில் அவசரப்பட்டு சங்காவைக் குற்றம் சுமத்திய இந்திய ஊடகங்களை மன்னிப்புக் கோருமாறும் ஹர்ஷா கோரியுள்ளார்.
  
times now saying dilshan was the instigator.so what about the allegations against sangakkara?am waiting for an apology from indian media.
indian media quick to level allegations. can they look inwards? is it fair to haul an honourable man over the coals? evidence unnecessary? 
there was a time when accuracy and decency were the hallmarks of journalism.now speed and disregard for people. 
the performance of the media that insinuated against sangakkara was far worse than what randiv did. randiv apologised. can we?


ஆரம்பத்தில் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று கூறிய சேவாக்(பரிசளிப்பில்) பின்னர் குய்யோ முறையோ என்று முறையிட்டதும், கட்டாக் மைதானத்தில் சச்சினை அடிக்க விடவில்லை.. இலங்கை அணியில் பலருக்கும் நான் சதம் அடிப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
(கட்டாக் போட்டியில் சச்சினை சதம் அடிக்க விடாமல் தடுத்தது தினேஷ் கார்த்திக்கா அல்லது லசித் மாலிங்கவா? நல்லத் தேடிப் பாருங்கப்பா.)


அதுவும் ரண்டீவ் மன்னிப்புக் கேட்டதாக அவரே தனது ட்விட்டரில் சொன்ன பிறகு.. 
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும் சங்கக்காரவும் பெரிய மனசுடன் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
செவாக்கோ தோனியோ இப்போது அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டபிறகும் இன்னும் சில விமர்சனப் புண்ணாக்குகள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பது எரிச்சலாயும் வேடிக்கையாயும் இருக்கிறது.


 விதி மீறல் இல்லை எனும்போது மன்னிப்பு தான் இங்கே முடிவாக அமைகிறது..


சேவாகிற்கு சதம் அடிக்க முடியாமல் போனதற்கு ரண்டிவ் நோ போல் மட்டுமல்ல.. ICC விதிகளும் ஒரு காரணமே.. 
நோ போல் பந்தின் ஒரு ஓட்டத்துடன் வெற்றி கிடைத்தால் அந்தப் பந்தில் பெறப்பட்ட சிக்சர் செல்லாது என்ற விதி பத்தாண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிவரும் செவாகிற்கே தெரியாத போது இப்போது தான் விளையாட ஆரம்பித்திருக்கும் ரண்டீவுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. 


ரண்டீவ் மன்னிப்புக் கோரியதன் மூலம் தான் வேண்டுமென்றே செய்ததை ஒத்துக் கொண்டவராகிறார்.அவரைக் கண்டிக்கிறேன்.


ஆனால் 2002 ஆம் ஆண்டு கண்டியில் டெஸ்ட் போட்டியொன்றில் கங்குலி சதம் அடிப்பதை இலங்கை தடுத்தது என்று சொல்வதும்,1986 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்ட்டில் அசாருதீனை 199 ஓட்டங்களில் LBW மூலம் இலங்கை ஆட்டமிழக்க செய்திருக்கக் கூடாது என்று சொல்வதும் ரொம்பவே ஓவர்...


அப்படிப் பார்த்தால் சனத் ஜெயசூரிய ஒரு முறை இந்தியாவுக்கெதிராக 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா கண்டிக்கப்படவேண்டிய செயலாகிறது.. 
அதே போல சனத் ஜயசூரியவை அப்போதைய உலக சாதனையை ஏற்படுத்த விடாமல் 340 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் தவராகிறதே..




இன்னொரு முக்கியமான தகவல்..


இதுவரை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் நின்றவர்கள் பத்துப் பேர்..
தங்கள் அணி இலக்கை எட்டும் போது ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களோடு நின்றோர் சேவாக்கை விட மேலும் நான்கு பேர்.. 


இவர்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள்???


இன்னும் சில சுவாரஷ்யங்களைப் பதிவில் பகிர்ந்துகொள்ள எண்ணினேன்..
இவை பல்வேறு தளங்கள்,ட்விட்டர்களில் கண்டெடுத்தவை..


ரண்டீவ் செய்தது பிழை என இலங்கை அணியின் தீவிர ரசிகர்களே ஒத்துக் கொண்ட பிறகும் பொதுமைப் படுத்தி இலங்கையரையும் இலங்கையின் ஒட்டுமொத்த அணியையும் பலர் தாக்குவது கண்டே இந்த மொக்கை போடலாம் என்று எண்ணம் வந்தது.


மொக்கைக்குள்ளும் சில முக்கிய உண்மைகள் சுட்டால் நான் பொறுப்பல்ல..


அதே ரண்டிவ் ஓவரில் முதல் பந்தை சங்கா பிடிக்கத் தவறி பை ஓட்டங்கள் நான்கு கிடைத்ததும் சங்கா வேண்டுமென்றே செய்ததாம்.. சிலர் சொல்கிறார்கள்.. இவனுங்களை என்ன செய்வது?
அடுத்த இரு பந்துகளும் ரண்டிவினால் சேவாக்கை ஓட்டம் பெறாமல் செய்த நல்ல பந்துகள் தானே?
அந்த இரண்டு பந்துகளையும் கூட அவர் நோ போல்களாகவோ,வைட்களாகவோ போட்டிருக்கலாமே? (ஒரு தர்க்கத்துக்காக)


ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே தவறாகப் பார்த்துவிட முடியாது..


கங்கோனின் ஒரு தர்க்க நியாயப் பதிவை வெகுவாக ரசித்தேன்..
ரந்தீவின் நோ போலும் என் கருத்துக்களும்...


ஆதரவாகவும் எதிராகவும் வந்த பின்னூட்டங்களும் பல விஷயங்களை(நாம் அறியா விஷயங்களையும்) தெளிவுபடுத்தியுள்ளன.


* ரோஸ் டெய்லர்,சங்கா தயவு செய்து சேவாக்கை சதம் அடிக்க விடுங்கப்பா.. இல்லேன்னா ஊடகவியலாளர் மத்தியில் அழுதிரப்போறார்..
*மிஸ்டர்.சேவாக் பங்களாதேசைப் பார்த்து Ordinary team என்று சொன்னபோது அவர்களுக்கும் இப்படித் தானே வலித்திருக்கும்?
*ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்று சொன்னானாம்..
டோனி தம்புள்ளை பயிற்சி ஆடுகளங்கள் ஆபத்தானவை என்று அழுதார்..
இப்போது சேவாக் சதம் அடிக்க விடல என்று அழுகிறார். 


Pretty lame on the part of the bowler to pull a stunt like this, but good on him for having the decency to come forward and apologize.


சச்சின் இவர்கள் அணியில் இருப்பது பெரிய ஆச்சரியம்.
*ICC இனியொரு விதி கொண்டுவரவேண்டும். யாராவது துடுப்பாட்ட வீரர் சதம் அடிக்காமல் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தால் பந்துவீசிய பந்துவீச்சாளர் மன்னிப்புக் கேட்கவேண்டும்..



Just got the news that Dilhara Fernando going all around the cricketers' rooms to apologize for his no balls. :D 


To avoid suspicion in the future SLC has ordered bowlers a no ball every 2 overs #NoBallSaga


SLC to probe about Virat Kohli and Rohit Sharma got only 0 runs. If this pre-planned, action likely against bowlers. #NoBallSaga 


What? Tharanga missed a century in the last match? Got only 0? Why they didn't bowl easy balls to him? #IamFromIndianMedia


Why indians didn't bowl easy balls to these people? http://bit.ly/9LBSsj #SehwagWants100 #IamFromIndianMedia


Indians should've bowled easy balls to help them reach 100. #SehwagWants100 


India denied century to Mahela (94*) in Dambulla, to Kandamby (93* & 91*), Mahanama (92*) by not bowling easy balls. #SehwagWants100 


*முதல் இரு பந்துகள் நல்லபடி வீசிய பிறகே ரண்டீவ் நோ போல் பந்தை வீசியுள்ளார். எனவே சேவாக்கின் இயலாமைக்கு என் சுராஜ் ரண்டீவ் குற்றவாளியாக்கப் படவேண்டும்?


*சுராஜ் ரண்டீவை தண்டிக்கச் சொல்கிறார்.. பேடி.. இவருக்கென்ன அருகதை இருக்கிறது? Sportsmanship பற்றிக் கதைக்க?
உலகின் மிகச் சிறந்த சாதனையாளரை ஏற்றுக் கொள்ள முடியாத எரிச்சல்காரர் தானே பேடி..


*ரண்டீவ் தன மீது தவறு இருக்கிறதோ இல்லையோ மன்னிப்புக் கேட்டார். ஆனால் அம்லா விவகாரத்தில் சேவாக் மன்னிப்பும் கேட்கவில்லையே?


*கட்டாயம் சதம் அடிக்க இலகுவாகப் பந்து போட்டிருக்கனுமா?எதிரணியின் வீரர்கள் பெரும் ஒவ்வொரு மைல் கல்லும் கூட எதிரணியின் வெற்றியாக அமைவதால் அதையும் கொடுக்கக் கூடாது என்பதே வீரர்களின் நோக்காக இருக்கவேண்டும்.
எனவே ரண்டீவ் செய்தது சரியே.




பவனின் எரியாத சுவடிகளில் இருந்து.. 


I DONOT THINK ITS A BIG DEAL!!!! SEHWAG CANT SAY THAT SRILANKA DID NOT WANT HIM TO GET THAT 100!!!JUST BECAUSE HE'S IN FORM DOESN'T MEAN THAT IT'S COMPULSORY TO GET HIS 100!!!!IT WOULD BE A STRANGE THING IF EVERY TEAM SHOULD ALLOW ONE OF THE OPPOSITION'S PLAYERS TO GET A 100 IF THERE ON 95 OR MORE.


அடித்தால் ஓட்டம் எடுத்து விடுவான்(சேவாக்) என சங்கா சொல்வதாக வீடியோவில் குரல் பதிவாகியுள்ளது.
அப்படிஎனினும் நோ போல் போடுமாறு சங்கா சொல்லவில்லையே?
அடிக்க முடியாதவாறு கஷ்டமான பந்தை வீசுமாறு சொல்லி இருக்கலாமே.


UDRSஐ இந்தியா முதலில் ஏற்கட்டும் அதன் பின் Sportsmanship பற்றிப் பேசட்டும்..


Dear Aravida & SLC. Please ban Randiv at least 1 year and strip the captaincy of Sanga. Both Sanga & Randiv sould be responsible & both should be punished. This is shame and ridiculus. Sanga got now Aussie attitude. He criticized India after the second test saying India had a bad/negative attitude. Thereafter SL lost 3rd test and the ODI. Who got the bad attitude by bowling a No Ball purposely? India or SL. If these two are not punished, I will never support SL cricket.


This is a joke. Randhiv apologizing for Sehwag's inability to score the century. SLC has no backbone. It wasnt intentional. If it was why did Randhiv bowled to legal deliveries to him before the no ball. ICC must make a rule - every bowler must apologize to the batsman if he fails to score a century. Grow up Sehwag


சச்சின் என்ற கண்ணியவான் எத்தனை தடவை சதங்களை மற்றவர்களால் தவறவிட்டும் எப்போதும் யாரையும் குறை சொன்னதில்லையே.. (கட்டாக் உட்பட) இவர் மட்டும் என் இப்படி ?


I think the reason behind alleging sanga directly may be that he just replaced sehwag in the icc test top batsmen?


BCCI to probe on Ojha and Ishant's resistance when Murali was trying to get 800 wickets, says it's not sportsmanship. #NoBallSaga


வேறு யார் செய்திருந்தாலும் இதைக் கணக்கெடுக்காமல் இருந்திருக்கலாம்.. இலங்கையிடமிருந்து இப்படியான கீழ்த்தரமான செயலை நாம் எதிர்பார்க்கவில்லை.


பவனின் எரியாத சுவடிகளில் இருந்து..


From the days of Ranatunga & Mendis the lankans have a hateful mentality towards Indians. Remember how Jayasurya & co. batted on for 900 odd runs in a test innings without declaring & how PM Rajiv Gandhi was attacked in lanka. The Lankans have taken us for granted & are not shying away from insulting us. The amount of money they are milking by playing India again & again is not a good gesture in their eyes & Indian players are not gaining anything by playing sub-standard competitors.Instead playing Australia will at least guarantee competitive cricket. Look at Pakistan, the moment India stopped playing with them, they are ruined financialy & their cricket is in disarray. Now is time to show the Lankan board & players their true place in the cricket heiarchy & let us show the weight of 1.25 billion people to them.


வளர்ந்து வரும் ஒரு வீரருக்கு இது அழகில்லை. ரண்டீவ் செய்தது தவறு என்ற தெரிந்த படியால் தானே சேவாக்கிடம் போய் மன்னிப்புக் கேட்டார்?


Randiv didn't want him to score a 100. Its simple as that. If a team is winning a match and one of their batsman is on 99, would you let him score 100 simply becoz u r going to lose anyway? I think Randiv did the right thing by preventing Mr Sehwag from scoring a 100 on a dead asian pitch.


இப்படியாக இரு பக்கக் கருத்துக்களும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன..
வாதம்,விவாதம் செய்யப் போனால் தர்க்கிக்க,தாக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.. 
யாருமே இங்கே கிரிக்கெட்டில் எல்லா நேரத்திலும் உத்தமர்கள் கிடையாது..


கிரிக்கெட்டின் வரலாற்றுப் புத்தகங்களை,அதன் கறுப்புப் பக்கங்களையும் சேர்த்தே புரட்டிப் பாருங்கள்..


இதைத் தான் கங்கோனும் இன்றைய கும்மியில் சொல்லி இருந்தார்..



ரந்தீவ் செய்தது வேணுமெண்டுதான், என்னைப் பொறுத்தவரை.
ஆனா திட்டமிடப்பட்டதல்ல...


அதுதான் என் கருத்து.


நீங்க விளையாடிக் கொண்டிருக்கும்போது சில விடயங்கள் உங்களை மீறி, உங்கட மனச்சாட்சி வேல செய்யாம நடக்கும்.


நான் ஒரு பதிவு எழுதினன் எண்டு நினைக்கிறன் நான் துடுப்பாட்ட வீரருக்கு பக்கத்தில நிண்டு ஒரு பிடிய பிடிக்கும்போது நிலத்திலயும் பந்து பட்டு பிடிச்சிற்கு ஆட்டமிழப்புக் கேட்டன் எண்டு.
அந்தக் கணத்தில ஒண்டுமே தெரியாது.
ஆட்டமிழப்புக் கேட்கும்போது எங்கள மீறினதுதான் நடக்கும்.
நடுவர்கள் அந்தப் பிடி சரியா எண்டு கதைக்கும்போதுதான் எனக்கு பந்து நிலத்தில பட்டது எண்டு நினைவுக்கு வந்தது, ஆனா எனக்கு (சுய)நினைவு வரும்போது என்னால சொல்ல முடியாது, ஏனென்டா நடுவர்கள் கதைச்சு முடிக்கிற கட்டம்.


இதுதான் கிறிக்கற்.


ரந்தீவிற்கும் இதுதான் நடந்திருக்கும்.
அந்தக்கணத்தில தன்னைத்தாண்டி அதச்செய்திற்று பிறகு அந்த மனநிலையில இருந்து வெளில வரேக்க மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவனுக்கும் தான் செய்தது பிழை எண்டு விளங்கும்.
வருத்தம் தெரிவிக்குமளவிற்கு ரந்தீவ் நல்ல மனதுக்காரர்.
என் மனதில நான் வேணுமெண்டு போட்டன் எண்டு எனக்கு மட்டும் தான் தெரியும்.


ஐசிசி கண்டுபிடிக்க முடியாது.


ஏன் பெரிய நோ போல் போட்டாய் எண்டு ஐசிசி கேட்டா இதுக்கு முதல் யாருமே பெரிய நோ போல் போட்டதில்லயா எண்டு தர்க்கரீதியா கதைக்கலாம்.


எனது கருத்தும் இதே..


கமல் விருமாண்டியில் சொன்னது போல.. 
மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன்.. மன்னிப்புக் கொடுக்கிறவன் பெரிய மனுஷன்..


ஆனால் ஒன்று இனிமேல் எந்தவொரு பந்துவீச்சாளரும் 99  ஓட்டங்களைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்ய துணியமாட்டார்..
அத்துடன் நோ போல் போடுகிற ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எல்லாரும் சந்தேகப்படப் போறாங்களே.. 


போடுவியா? இனிமேல் நோ போல் போடுவியா?
  

Post a Comment

118Comments

Please Select Embedded Mode To show the Comment System.*