ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறவேண்டுமானால், தன்னிறைவு காணவேண்டுமாக இருந்தால் எந்தக் காரணி மிக முக்கியமானது எனக் கருதுகிறீர்கள்?
இதற்கு விடைகள் வருவதன் மூலம் எம்மவர்கள் இப்போது நாடு பற்றி நினைப்பது என்னவென அறியலாம் என்றும் அவர்கள் சொன்ன விடைகளை கணக்குப் பண்ணி வைத்துக் கொண்டேன்.
அதிகமாக சொல்லப்பட்ட காரணிகள் வரிசையாக..
உழைப்பு/கடின உழைப்பு
கல்வியறிவு வளர்ச்சி
ஊழலற்ற ஆட்சி,சீரான ஆளுகை,சிறந்த தலைமைத்துவம் + அரசியல் பற்றிய etc etc etc
உள்நாட்டு உற்பத்தி
ஒற்றுமை
மனித வளப் பூரணப் பயன்பாடு
அதிகாரப் பகிர்வு
நம்ம நேயர்களாகிய மக்கள் தெளிவாத் தான் இருக்காங்க..
ஆனால் வாக்களிக்கும்போது இவங்கல்லாம் எங்கே போயிடுறாங்க என்ற கேள்வியும் வருகிறது.
உழைப்பில் எம்மவர் கடுமையாகவே ஈடுபடுகிறார்கள். நாட்டிலே எடுத்ததுக்கெல்லாம் விடுமுறைகள் கொட்டி இருந்தாலும்..
கல்வி மீதான அக்கறை முன்பை விட இப்போது நிறையவே உண்டு.
கல்வியில் பின் தங்கிய,புறக்கணிக்கப்பட்ட மலையகமும் இப்போது விழித்துள்ளது.
உள் நாட்டு உற்பத்தி அதன் வளர்ச்சியும் பற்றியும் இப்போது அக்கறைப்படுகிறோம்..
ஆனால் இந்த அனைத்துக் காரணிகளும் பிரதானமாகத் தங்கியிருப்பது அரசியல்,அரசியல்,அரசியலில் தான்..
அரசியல் பற்றி????
நான் என்ன சொல்வது?
நீங்களே தேடிப் பாருங்கோ..
--------------------------------
இலங்கை இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தான நாடாக மாறிவருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து பாலியல் வல்லுறவுகள்,ஒரு சில வழிப்பறிகள்,கொள்ளைகள் & இரு கொலைகள்.
இவை அனைத்தும் இடம்பெறுவது தென் பிராந்தியங்களிலேயே.
பணமும் வெள்ளைத் தோல் மீதான ஆசையுமே காரணம்.
நேற்றும் 63 வயதான ஜெர்மன் பிரஜையொருவர் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்மையில் உல்லாச விடுதியொன்றில் பெற்றோரோடு வந்திருந்த 14 வயது மட்டும் நிரம்பிய பிரித்தானிய சிறுமியொருத்தி அந்த விடுதி உரிமையாலராலேயே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறாள்.
இவனெல்லாம் மனித ஜென்மமா?
இந்த இழிசெயலுக்கெல்லாம் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறதா?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றனவா என்பது பற்றித் தகவல்கள் இல்லை.
ஏற்கெனவே உண்ணாவிரதம்,பிடிவாதங்களால் வெளிநாடுகளில் கிழிந்து கிடக்கும் பெயரை ரிப்பெயர் செய்ய சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை அரசு படாத பாடுகள் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவையெல்லாம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.
ஐபா வைத்து ஐயோ அம்மா சொன்ன கசப்பான அனுபவத்திலிருந்து இன்னும் மீளாத அரசுக்கு எப்போது ஐ.நா ஆப்பு அடிக்க என்று பார்த்திருக்கும் நிலையில் தத்தம் உல்லாசப் பிரயாணிகளுக்கு மேலை நாடுகள் 'இலங்கை உல்லாசப் பிரயாணிகளுக்கு ஆபத்தான நாடு' என்று முத்திரை குத்தினால் அவ்வளவு தான்.
யுத்தம் நடந்தபோது அந்தப் பகுதிகளில் ஏற்படாத ஆபத்து எல்லாம் யுத்தமே நடக்காத காலத்தில் தென் பகுதியில் நடக்குது..
யோசியுங்கோ..
--------------------------
நாளை காலி போகலாம்.. (இதுவும் தென் பகுதி தான்.. ஆனால் நான் தான் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணி இல்லையே)
முரளியின் இறுதி டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நாளைப் பார்க்கலாம் என்று ஆசியோடு திட்டம் போட்டால், இந்தியா கவித்திடும் போல இருக்கே..
சகல விக்கெட்டுக்களையும் முதலாவது இன்னிங்க்சில் இழந்துவிட்டது..
276.
244 ஓட்டங்களால் இலங்கை முன்னணியில் உளது..
முரளி ஐந்து விக்கெட்டுக்கள்..
இன்னும் மூன்றே மூன்று..
இது முரளியின் 67 வது ஐந்து விக்கெட் பெறுதி.
இன்று பழைய முரளியின் பெரிதாகத் திரும்பும் பந்துகள் பலவற்றைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவும் இனி இந்தப் பந்துகளைப் பார்க்க முடியாது என்று ஏக்கமாகவும் இருக்கிறது.
இந்தியாவுக்கு இலங்கை follow onஐப் பிரயோகிக்கப் போகிறது. இன்றே இந்தியா சுருண்டுவிடுமா? அல்லது நாளை காலை நான் காலி மைதானத்துக்குப் போகும் வரை போராடுமா? ;)
அட்லீஸ்ட் கடைசி விக்கெட்டையாவது முரளி மிச்சம் வையப்பா..
நான் வந்து மைதானத்தில் கை தட்டி ஆரவாரப்படனும்..
ஆகா.. கம்பீர் GONE....
மீண்டும் மாலிங்க.....
இந்தியா O FOR 1.
முரளிக்கு இன்னும் மூணு மிச்சம் வையுங்கப்பா..
பிற்சேர்க்கை..
ஒரு வெறித்தனமான stat விரும்பி(நம்ம கங்கோன் இல்லை என நம்புகிறேன்) Cricinfo இல் சொன்னது - "I would like Murali to finish with 799 wickets. Looks cooler than 800+ wickets. Like the Don's 99.94 figure.."
ஏன்யா இப்படி ஒரு stat வெறி???