ஸ்பெய்னின் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கிண்ண வெற்றி இப் பதிவில் படங்களாக விரிகிறது..
நேற்று ஸ்பெய்னின் வெற்றியை நானும் சந்தோஷமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த காரணத்தால் இன்று இப்பதிவு.
அழகான ஜொஹன்னஸ்பேர்க் Soccer City அரங்கம் - இறுதிக் களம்
கண்கவர் விளக்குகளின் மின் விளக்கு அலங்காரத்தில் நிறைவு விழா
நெல்சன் மண்டேலா துணைவியாரோடு - ஆபிரிக்காவின் சின்னம்
உற்சாகமாக ஸ்பெய்ன் வீரர்கள் மைதானம் புகுகிறார்கள்
நம்பிக்கையுடன் நெதர்லாந்து வீரர்கள்
மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகக் கிண்ணத்தைத் தொட முற்பட்ட ரசிகர் - பின் தண்டனைக்கு உள்ளானார்
சீறிப் பாய்ந்த வியா அடித்த பந்தை அபாரமாக தட்டி விட்ட நெதர்லாந்தின் கோல் காப்பாளர்
ஆரம்பம் முதலே ஆவேசமாக நடந்த போட்டியில் அதிக முரட்டுத்தனம் காட்டி நடுவரைக் கடுப்பேற்றிய நெதர்லாந்து வீரர்கள்
நடுவரோடு நெதர்லாந்து வீரர்கள் வாக்குவாதம் + ஸ்பெய்ன் வீரர்கள் முறைப்பாடு
இப்படியும் உதைக்கலாம்..
De Jong's Karate Kick..
பந்தையல்ல.. எதிரணி வீரர்களின் நெஞ்சை.
சபி அலோன்சொவை உதிக்கும் டீ ஜொங்.. மஞ்சள் அட்டையுடன் தப்பித்தது அதிசயம்.
தலைவரின் பாய்ச்சல்..
இதனால் தான் கசியாஸ் உலகின் தலைசிறந்த கோல் காப்பாளராக மதிக்கப்படுகிறார். எதிரணியின் அடியைப் பாய்ந்து பிடிக்கிறார்.
போச்சே..
நெதர்லாந்து தவறவிட்ட மிகப் பெரிய மிகச் சிறந்த வாய்ப்பு.. ரோப்பன் அடித்த கோல் நோக்கிய பந்தைக் காலால் தட்டிவிடும் கசியாஸ்..
இன்னொரு விக்கிரமாதித்தன்..
ஸ்பெய்னின் டேவிட் வியா..
ஆனால் இதுவும் கோலைத் தரவில்லை.
உயிரைக் கொடுத்துத் தடுக்கும் ஒரேஞ் வீரர்கள்.
வெளியே போ..
முரட்டுத் தனத்தின் எல்லை மீறினால் சிவப்பு அட்டை தானே?
நடுவரினால் வெளியேற்றப்படும் நெதர்லாந்தின் ஹைடிங்கா.
வெற்றிக்கான அடி.. நெத்தியடி..
இனியெஸ்டா கோலடிக்கிறார்
நெஞ்சைத் திறந்து காட்டுறேன்..
முன்பே எழுதி வைத்த T shirt வாசகம்
"Dani Jarque is always with us".
இவருடன் முன்பு 2002 இல் U-19 உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெய்ன் அணியின் சக வீரர்.இப்போது உயிருடன் இல்லை.
*தவறைத் திருத்திய நண்பர்களுக்கு நன்றிகள்.
இறுதியின் ஹீரோ இனியெஸ்டா
வெற்றி நிச்சயம்..
ஒரு கோல் வெற்றிகளின் உச்சம்.
தலையில் இறங்கிய இடி..
மூன்றாவது தோல்வி..
1974,1978 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதியில் தோற்றது நெதர்லாந்து.
எத்தனை நாளைக் காத்திருந்தோம்..
சிவப்பின் உவப்பு..
சிவப்பின் உயிர்ப்பு.
ஸ்பெய்னின் உச்சம்..
முதலாவது உலகக் கிண்ணம்
உலகக் கிண்ண இறுதிப் போட்டி+ ஸ்பெய்னின் வெற்றி பற்றிய விரிவான பதிவொன்றை அடுத்துத் தரலாம் என்று இருக்கிறேன்.
அதற்கிடையில் இந்தப் படப் பதிவு..
ஒக்டோபசை எல்லாம் தூக்கி ஓரமாய்ப் போடுங்கள்..
அழகாக,நேர்த்தியாக,நேர்மையாக,சிறப்பாக,நுட்பமாக விளையாடிய ஸ்பெய்னுக்கு வெற்றி.. சொன்னது நடந்தது
விக்கிரமாதித்தனுக்கு மீண்டும் வெற்றி.. ;)
(இலப்ங்கை எதிர் இந்தியா தொடர் ஆரம்பிக்குது. மூக்கைக் கவனமாக வைத்துக் கொள்ளவேண்டும்)