நான் உங்கள் நெருங்கிய நண்பன். (இந்தப் பதிவுக்காவது அப்படி நினைச்சுக் கொள்ளுங்கப்பா)
ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரம்.
நீங்கள் மட்டும் வீட்டில் தனியாக..
வெளியே கடும் காற்றுடன் மழையும் வேறு..
வீட்டின் அழைப்பு மணி அடிக்கிறது..
நீங்கள் வந்து கதவைத் திறந்தால் நான் உடலெங்கும் இரத்தக் காயங்களோடு.. அலங்கோலமாக..
பதறியபடி எனக்கு என்ன நடந்தது என்று அக்கறையாக,நட்போடு விசாரிக்கிறீர்கள்..
இரத்தக் காயங்களோடு இருக்கும் நான்
"ஒரு பயங்கர விபத்தில் அடிபட்டு விட்டது.. உடலெல்லாம் காயம்.இப்படியே வீட்டுக்கு இந்த நேரத்தில் போக முடியாது..இன்றிரவு இங்கே தங்கிவிட்டுப் போகிறேன்" என்று நட்பின் உரிமையில் கேட்கிறேன்.
நீங்களும் சரி என்று எனக்கு முதல் உதவி செய்யவும் குடிப்பதற்கு நீர் எடுத்து வரவும் உள்ளே செல்கிறீர்கள்.
அந்த நேரம் பார்த்து பக்கத்து அறையில் உங்கள் தொலைபேசி அலறுகிறது.
எடுத்துக் கத்தில் நீங்கள் வைத்தால் மறுமுனையில் உங்களதும் எனதும் இன்னொரு நண்பர் சொல்கிற தகவல்....
பதினைந்து நிமிடத்து முதலில் நடந்த பயங்கர விபத்தொன்றில் நான் இறந்துவிட்டேன்.பிணம் இப்போது வைத்தியசாலையில்....
இப்போது எனது கேள்வி..
நீங்கள் அடுத்ததாக என்ன செய்வீர்கள்? உங்கள் மனவோட்டத்தில் என்ன தோன்றும்??
இன்று காலை எனது விடியல் நிகழ்ச்சியிலும் இதே தலைப்பையே கொடுக்கிறேன்.
www.vettri.lk
என் நேயர்களிடமிருந்து வரும் வித்தியாசமான பதில்களையும் பின்னர் உங்களோடு பகிர்கிறேன்..