இல்லை இவையெல்லாம் தவிர்ந்த இன்னொரு அணியா?
இது தான் இப்போது கால்பந்து ரசிகர்கள் அத்தனை பேரினதும் முக்கிய கேள்வி.
உலகின் அத்தனை முக்கிய கால்பந்து நட்சத்திரங்களும் ஒரே இலக்கை நோக்கி இன்று முதல் போராடப் போகிறார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பார்க்கும் ஒரு பிரம்மாண்ட உலக விளையாட்டு நிகழ்வு இது.
இது பற்றிய அடிப்படை ஆரம்பத் தகவல்களை அறிய தம்பி அசோக்பரனின் முன்னேடுத்தலோடு நானும் இணைந்துள்ள தமிழில் கால்பந்து உலகக் கிண்ணம் தளத்தையும் பார்வையிடுங்கள்.
தமிழில் கால்பந்து உலகக் கிண்ணம்
அப்படியும் இல்லை..
இந்த உலகக் கிண்ணம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரா?
அப்படியெனில் முதலில் ஆங்கிலத்தில் ரொம்பவே அடிப்படைத் தகவல்களை வாசித்து இது தான் உலகக் கிண்ணக் கால் பந்து என்று தெரிந்து கொள்ளலாம்.
Beginners’ Guide to the World Cup 2010
இதெல்லாம் நமக்கு ஒரு விளம்பரமும், கால்பந்துக்கு நான் செய்யும் சேவையுமாகும் என்பதைப் புரிந்து கொள்க.
-----------------
இன்று முதல் மாலை,இரவுகளில் கால்பந்து பார்ப்பதோடு நாம எல்லோரும் பிசியாகப் போகிறோம். எனவே இன்றே இந்தமுறை உலகக் கிண்ணம் தொடர்பிலான சில சுவாரஸ்யமான,சுவையான, கோக்கு மாக்கான, கோணங்கித் தனமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமென இந்தப் பதிவு..
நேற்று இரவு உலகக் கிண்ண ஆரம்ப விழாவில் இசையுலகின் பிரபலங்கள் கலந்து கலக்கியுள்ளார்கள்.
இடுப்பாட்டும் இலவம் பஞ்சு (நமீதா இல்லீங்கோ) ஷாகிரா, Black Eyed Peas, Alicia Keys ஆகியோரே அந்தப் பிரபலங்கள்.
மிக பிரம்மாண்டமாக வாணவேடிக்கைகள்,கவர்ச்சி நடனங்கள்,தென் ஆபிரிக்க பாரம்பரிய நடனங்கள்,இசை அம்சங்கள் என்று ஒரு மிகச் சிறந்த ஆரம்ப விழா, மைதானம் நிறைந்த ரசிகர்களுடன் நடந்து முடிந்தது.
எல்லோரையும் விட உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பாடலான WAKA WAKA வை ஷாகிரா தனது தனித்துவ இடுப்பு அசைவுகளுடன் பாடியபோது மைதானமே ஆர்ப்பரித்தது.
படங்களைப் பார்த்தாலே தெரியுதில்ல..
------------------------
போர்ச்சுக்கல் அணியின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ தென் ஆபிரிக்காவின் தந்தை,கறுப்பு காந்தி நெல்சன் மண்டேலாவை சந்தித்து ஆசிகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் மண்டேலாவுக்கு தனது அணியின் பரிசாக மண்டேலாவின் பெயர் ,அவரது வயதான 91ஐ இலக்கமாகப் பொறித்த போர்ச்சுக்கல் அணியின் டி ஷேர்ட் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
எனினும் மண்டேலா இன்று முதலாவது போட்டிக்கு வர முடியாத சோக நிகழ்வு ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.
அங்குரார்ப்பன இசை நிகழ்ச்சியின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மண்டேலாவின் 13 வயது பூட்டப் பெண் கார் விபத்தொன்றில் கொல்லப்பட்ட துயரச் செய்தியே இது.
மண்டேலாவின் குடும்பம் மட்டுமல்லாமல் தென் ஆபிரிக்காவையே இந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் மேலும் வேதனையான விஷயம் ஜிநீகா என்ற அந்த சிறுமியின் 13வது பிறந்த நாள் நேற்று முன்தினம்.
----------------------
பயிற்சிகள் பலவிதம்.. ஒவ்வொரு பயிற்றுவிப்பாளரும் தத்தம் அணி வீரர்களை தமக்கு எது வெற்றியைத் தேடித் தரும் வழி எனக் கருதுகிறார்களோ அந்த வழியில் போட்டு உருட்டி எடுத்தோ,வறுத்தேடுத்தோ ஒரு வகையாக விளையாட வைக்கிறார்கள்.
இம்முறை பல பேராலும் கவனிக்கப்படுகிற ஆர்ஜென்டினப் பயிற்றுவிப்பாளர் டீகோ மரடோனா தமது அணி வீரர்களுக்குக் கொடுக்கிற பயிற்சி+தண்டனையைப் பாருங்கள்.
Argentina - Pain in practice
தோல்வியடைந்தால் ரசிகர்கள் இதைத் தான் உங்களுக்குத் தருவார்கள் என்று செயன்முறையாகக் காட்டுகிறாரோ?
---------------------
பராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லூகோ தங்கள் நாடு இத்தாலிக்கு எதிராக விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக நாட்டின் அத்தனை பொது சேவை ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கியுள்ளார்.
ஜெர்மெனிய நாட்டில் தொழிலாளர்கள் தத்தம் வேலைத்தளங்களில் வேலைக்கோ,தொழில் தருனருக்கோ இடையூரில்லாமல் போட்டிகளைப் பார்த்துக் கொண்டே வேலை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ம்ம்ம்.. கொடுத்து வைத்தவர்கள் என்று தோணுதா?
----------------------
ராசி,அதிர்ஷ்டம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை கொண்டவரான மரடோனா இம்முறை உலகக் கிண்ணம் தம் நாட்டுக்கே எனும் உற்சாகத்தில் இருக்கிறாராம்.
தனக்கு அதிர்ஷ்டம் தரும் ரகசியக் காரணி என்று மரடோனா சொல்கிற அவரது பேரக் குழந்தை பெஞ்சமின் தென் ஆபிரிக்கா வந்திறங்கியுள்ளான்.
ஒரு வயது கூடப் பூர்த்தியாகாத இந்தப் பேரன் (பிரபல ஆர்ஜெண்டீன வீரர் செர்கியோ அகுவேராவின் மகன்) தன்னுடன் இருந்தால் வெற்றிகள் வந்துசேரும் என்பது துடிப்பான தாத்தா மரடோனாவின் அசையாத நம்பிக்கை.
----------------------
ஜெர்மெனிய பின் கள வீரர் ஜெரோம் போடேங் ஒரு சகோதர யுத்தத்துக்கு தயாராகிறார்.கானாவில் பிறந்த போடேங் ஜெர்மெனிய குடியுரிமை பெற்று ஜெர்மெனிக்காக விளையாடுகிறார்.
ஆனால் அவரது சகோதரர் கெவின் பிரின்ஸ் தாய் நாடு கானாவுக்கே விளையாடப் போகிறார்.
இவ்விரு அணிகளும் D பிரிவு போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கும் போது அண்ணனும் தம்பியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளவுள்ளார்கள்.
குழப்பகரமான குடியுரிமைகள் எத்தனை குடும்பங்களில் மோதலைத் தருகின்றன.
-------------------------
கொள்ளை,கொலை,பாலியல் வந்செயல்களுக்குப் பெயர் போன தென் ஆபிரிக்காவில் எவ்வளவு தான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும் கால்பந்து வீரர்களும் தப்பவில்லை.
மூன்று கிரேக்க அணி வீரர்களின் பணம் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளிலிருந்து களவு போயுள்ளது.
-------------------------
தென் ஆபிரிக்காவின் பாரம்பரிய இசைகருவியான நீண்ட ஊது குழல், இதன் பெயர் வுவுசெலா(VUVUZELA).எந்தவொரு போட்டியிலும் இதன் சத்தம் காதுகளைப் பிளக்கும்.
அதிக சத்தம் காரணமாக செவிப்புலனுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வந்த நிலையில்,இதனை ஊதும்போது தடிமல் மற்றும் இதர வைரஸ் நோய்களும் பரவலாம் என்று லண்டன் மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்களாம்.
ஆனாலும் ஊதிய வாய்கள் சும்மா இருக்குமா?
-------------------------
சூழல் பாதுகாப்பைப் பேணுவதை வலியுறுத்தும் வகையில் பிரேசில்,நெதர்லாந்து,போர்ச்சுக்கல் முதலிய அணிகள் இம்முறை பழைய பிளாஸ்டிக் போத்தல்களில் இருந்து மீளுருவாக்கம் செய்து உருவாக்கப்பட்ட சீருடைகளை அணிந்து விளையாடவுள்ளன.
Environmentally friendly jerseys made from recycled plastic bottles)
தைவானில் செய்யப்பட இந்த ஒவ்வொரு ஜெர்சீக்கும் எட்டு பிளாஸ்டிக் போத்தல்கள் தேவைப்படுகின்றன.
வழமையான ஜெர்சீயை விட எடை குறைவாக இருப்பதால் அதை விட இலகுவாகவும் விரைவாகவும் வியர்வையை வெளியேற்றி விடுகின்றதாம்.
அது சரி இந்த ஜெர்சி போட்டு விளையாடுகிற அணிகள் எப்படி விளையாடுகின்றன என முதலில் பார்க்கலாம்.
உலகக் கிண்ண அணிகளின் ஜெர்சீகள் பார்க்க ஆசையா?
ஒவ்வொரு பிரிவாக இங்கே கிளிக்குங்கள்.
பிரிவு A
பிரிவு B
பிரிவு C
பிரிவு D
பிரிவு E
பிரிவு F
பிரிவு G
பிரிவு H
இன்னும் விஷயம் இருக்கு.. ஆனா ரொம்ப நீளக் கூடாது இல்லையா?
பிறகு பார்க்கலாம்..