மே 17
இன்றும் நினைவுகளின் இடுக்குகளில்
கறுப்பான தினமாக
நினைத்தாலே மனம் கனத்து
இதயத்துள் இரத்தம்
கசியும் நாள்..
இப்படி என்ன எழுதி
இனி ஆவது என்ன
கடவுள்கள் இல்லை என்று
கல்வெட்டுப் பொறிக்க நான்
முடிவு செய்த நாள் இது..
இந்த நாள் இறந்து போன
சகோதர,சகோதரிகளே, அன்பான உறவுகளே...
மன்னியுங்கள் எம்மை...
எம்மால் எதுவும் செய்துவிட முடியவில்லை..
மனதுக்குள் உடைந்து அழுது
மனதுக்குள்ளேயே வெடித்து வெம்புவதைத் தவிர..
எல்லாம் முடிந்து போன
இரு தினங்களாக
இன்றும் நாளையும்..
இன்னும் சொல்லத் தெரியவில்லை..
மேலும் பலவற்றை
எப்படி சொல்வது தெரியவில்லை...
சென்ற வருடத்தில்,
இன்றைய தினத்தில் எஞ்சியவை
இவை தான்..
முதல் இரு படங்கள் - நன்றி - வீரகேசரி