போலி சாமியார்கள்,மயக்கமான பக்திகள் பற்றி எழுதினால் ஒரு சிலரின் (அல்லது ஒருவரின்)அனானிப் பின்னூட்டங்கள் வேறொரு திசையில் கருத்தோட்டத்தை இழுத்து செல்லப் பார்க்கின்றன. பரவாயில்லை.. இதெல்லாம் வலையுலகில் சகஜம் தானே..
சமயங்கள் பற்றி எப்போது எழுதினாலும் சச்சரவு,சர்ச்சை தான்.. அதுக்காக உண்மையை எழுதாமல் இருப்பதா?
படு துவேஷமாக வந்த இரு பின்னூட்டங்கள் தவிர (ஒன்று இந்து சமயத்துக்கெதிராக,இன்னொன்று இஸ்லாம் மார்க்கத்துக்கெதிராக) ஏனைய எல்லாவற்றையும் பிரசுரித்தேன்.
எனினும் இன்று அனாமதேயமாக இரு தடவை ஒரே பின்னூட்டம் மிக அக்கறையாக வேறொரு பதிவுக்கு வந்திருந்தது.
Anonymous has left a new comment on your post "நாளை விடியலில்.. கடவுள்களும்,அவதாரங்களும்":
லோஷனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் வரோ,கோபி போன்றவர்களுடன் பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரைக்கு செல்வது போன்ற செயற்பாடுகளை அவர்கள் புகைப்படங்களாக தமது பதிவுகளில் போடுவதன் மூலம் உங்களை போன்ற சமூகத்தால் நன்கு அறியப்பட்ட பொறுப்பு மிக்க ஒரு நபர் கடற்கரையில் பெண்களை பார்த்து கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவது போலவும் ,உங்களை ஒரு தவறான முன்மாதிரியாகவும் காட்ட முயல்கிறார்கள்.தயவு செய்து இதற்க்கு துணை போகாதீர்கள் உங்கள் பங்கு சமூகத்தில் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.அவர்களின் இப்படிப்பட்ட பதிவுகளை நீக்க முயற்சி எடுங்கள்.
இது தான் அது.
வழமையாக இவ்வாறு மற்றவர்களது பெயர்களையும் குறிப்பிட்டு அனானிப் பின்னூட்டங்கள் வந்தால் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு.
யாராயிருக்கும்,என்ன காரணமாயிருக்கும் என்று..
மேலே சொன்னது போல என்னைத் தவறாகவோ,எனது சமூக அந்தஸ்தை(!?) கேலி செய்தோ எந்தவொரு பதிவும் வந்ததாகவும் தெரியவில்லை.
சில வேடிக்கைகள்,நகைச்சுவைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும் என நினைப்பவன் நான்.
படப்பதிவுகளில் கூட அப்படியொன்றும் பின்னூட்டத்தில் சொன்னது போல பெண்களைப் பார்ப்பது போலவோ,வேறெந்த ஆபாசமாகவோ எதுவும் இல்லை. எனது பதிவுலக நண்பர் வட்டத்தின் நாகரிக எல்லை,சமூகப் பொறுப்புணர்வு எனக்கும் தெரியும்.
எனவே, அட என்ன கொடும சார் இது என யோசித்துக் கொண்டே...
இப்படி ஒரு அநாமதேயப் பின்னூட்டம் வந்தது பற்றி குறித்த பதிவர்களுக்கும்,சக குழுமப் பதிவர்களுக்கும் அறியத் தந்தேன்..
மின்னஞ்சல் அரட்டையில் ஒவ்வொருவரது ஆதங்கங்களும் இப்படி ....
கண்கோன் கோபி - ஆகா....
எல்லாத்திலயும் நான் வாறனே....
கதைக்காம பேசாம இருந்தாலும் வாறாங்கள்... அவ்வ்வ்வ்...
// நபர் கடற்கரையில் பெண்களை பார்த்து கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவது போலவும் //
எனக்குத் தெரிந்து அப்பிடியான பதிவுகளை யாரும் இடவில்லை...
அதுசரி, கடைசிச் சந்திப்புப் பற்றி யார் யார் பதிவிட்டீர்கள்?
வரோ, பவன்? சதீஷ் அண்ணா? வேறு யார்?
வந்தியத்தேவன் -
அரசியலில் இதெல்லாம் சகஜம்.
ஆனாலும் என்னை விட்டுவிட்டு கோல் பேஸ் போனது சரியில்லை.
இந்த வசனம் தான் இவரை சிக்க வைத்தது.. ஆகா அகப்பட்டார் என்று பிடித்துக் கொண்டோம்..
சுபாங்கன் - நீங்களும் எங்களை விட்டுட்டு லண்டனுக்குப் போனது சரியில்லைத்தானே?
கண்கோன் கோபி -
வந்தியண்ணா! என் மேல அப்பிடி என்ன கோவம்? :P
லோஷன் - ஒரு வேளை அன்று தானே நான் கங்கோனை புதிய வந்தி என்று அறிவித்தேன்.. அது தான் காரணமோ? ;)
(வந்தியரின் கல கல வெற்றிடத்தை அண்மைக்காலமாக பதிவுலக,ட்விட்டர் அரட்டைகளில் கொஞ்சமாவது போக்கி வருவது கலக்கல் பதிவர் கங்கோன் தான்)
சுபாங்கன் - க.க.க.போ. அன்று இதை நான் ஸ்கைப்பில் சொன்னபோது அவரது பதில் - சில நாட்களில் நான் திரும்பவும் பதிவெழுத வந்துவிடுவேன். இப்பதான் பிசி. இதிலேருந்து என்ன தெரியுது?
கண்கோன் கோபி - ஹா ஹா ஹா....
அதேதான்...
குத்துக் கல்லாட்டம் தானிருக்கேக்க தனக்கு போட்டியா ஒருத்தன களமிறக்கிற கோவம் போல?
வந்தியண்ணா! அந்தப் பதவிய நான் இன்னும் ஏற்கேல...
ஆகா அகப்பட்டார் அக்கறையுள்ள அனானி என்று ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னு முடிவெடுத்து உடனேயே நம்ம நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டிட்டுத் தான் ஆரம்பித்தேன்.
வந்தியும் கோபிக்க மாட்டார் என்ற நம்பிக்கயுடன். அவரின் பதில் தான் இன்னும் வரவில்லை.
கோபித்தாலும் என்ன லண்டனில் இருந்து இதுக்காக மினக்கட்டு இலங்கை வரவா போகுது மனுஷன்.. ;)
ஆனால் ஒன்று நான் தான் 'புதிய வந்தி' என்று சொன்னாலும் கூட அதை தம்பி கங்கோன் கோபி ஏற்றிருக்கக் கூடாது தான்.. என்ன சொல்றீங்க?(அப்பாடா சுபாங்கன் சொன்னதை செய்தாச்சு)
ஆனாலும் அரட்டையில் இதைப் பரபரப்பாகக் கிளப்பி பற்ற வைத்ததால் பெட்டி சுபாங்கன் இன்று முதல் பரட்டை (பத்த வைத்ததால்) சுபாங்கனாக தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படுவார் என்று சொல்லிவிட சொன்னார் தம்பி பவன்.
பி.கு- இது வெறும் வேடிக்கைக்காக மட்டுமே.உண்மையில் என் மேல் உள்ள அன்பினாலும்,அக்கறையினாலும் அந்தப் பின்னூட்டத்தை யாரோ ஒரு நண்பர் அனுப்பி இருந்தால் அவரை நான் எவ்விதத்திலும் புண்படுத்தவில்லை.
ஆனாலும் எந்தவொரு பதிவரும் என்னைப் பற்றி அப்படியொன்றும் தவறாக சித்தரிக்கவில்லை என்பதை அனானி நண்பருக்கு உணர்த்தவே இந்தப் பதிவு.
இல்லாவிட்டால் வேறு ஏதாவது காரணமாக அந்தப் பின்னூட்டம் அனுப்பப்பட்டிருந்தால், என்ன கொடுமை இது என்று சிரித்துக்கொண்டே விட்டு விட வேண்டியது தான்..
இனி வந்தியரின் என் உளறல்கள் அடிக்கடி கேட்கும் என நினைக்கிறேன்.. :)
(ஆனால் படிப்பையும்,பெண் - மனைவியை சொன்னேனப்பா பார்ப்பதையும் தொடருங்கோ மாமா)