இன்று காலையிலேயே வந்தியின் எஸ்.எம்.எஸ் தான் எனது இரண்டாவது தூக்கத்தை நீக்கியது.(விடிகாலையிலேயே எழுந்து டயலொக் செய்திகளை ஒலிப்பதிவு செய்துவிட்டு மறுபடி தூங்கி இருந்தேன்)
தமிழ்மணம் பதிவுப் போட்டிகளில் எனது பதிவு விளையாட்டுப் பிரிவிலே இரண்டாம் இடம் பெற்றிருப்பதாகவும் வாழ்த்துக்களையும் சொல்லி இருந்தார்.
அப்படியொரு மகிழ்ச்சி எனக்கு..
எனது சச்சின் டெண்டுல்கர் 20 என்ற இந்தப் பதிவு உண்மையில் மிகத் தேடி எடுத்த தகவல்கள், படங்களோடு நான் இட்ட இடுகை. முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே இதை எடுத்துக் கொள்கிறேன்.
வாக்களித்து தெரிவு செய்த நண்பர்கள்,நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.
விருது வழங்கி ஊக்கப்படுத்தும் தமிழ்மணத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றிக்குக் காரணமான நாயகன் சச்சினுக்கும் நன்றிகளைக் கட்டாயம் சொல்லவே வேண்டும்.. :)
வெற்றிபெற்ற எல்லாப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
யாரெல்லாம் வெற்றி பெற்றார்கள், எனது பதிவை முந்தி முதலிடம் பெற்ற பதிவு எது என்றெல்லாம் வாசித்துப் பார்க்கலாம் என்று தமிழ்மணத்தைத் திறக்க முயற்சி செய்தால், தமிழ்மணம் சுட்டி இயங்குவதாகவில்லை..
என்ன கொடுமை இது தமிழ்மணமே..
எமக்கு விருது வழங்கிய நேரம் உனக்கே இப்படியா?
பிற்சேர்க்கை
18/01/2010 காலை 11.45
அப்பாடா இப்போது தமிழ்மணம் இயங்குகிறது.
தமிழ்மணம் விருதுபெற்றோரின் முழுமையான விபரங்கள்..