பிரபல பதிவருக்கு டும் டும் டும்..

ARV Loshan
30


நீண்ட கால இளமைத் தேடலின் இனிமையான முடிவாக இந்த சர்க்கரை செய்தி.
இலங்கையின் இனிய பிரபல பதிவருக்கு மங்கல செய்தி வந்துள்ளது.வெகுவிரைவில் இதன் முழு முற்று தெரியவரும்.

அண்ணலுக்கும் அண்ணல் தேடிப் பார்த்த அந்த வங்கியில் பணிபுரியும் அழகிய மங்கைக்கும் இடையே மனப் பொருத்தம் உண்டாகினாலும், இரு வீட்டாரும் இன்னும் முழுமையாக பேச்சுக்களை முடிக்காததால் அண்ணலின் மூன்று முடிப்புக்கான தேதி இன்னும் முற்றாகவில்லை.

திருமணம் வெளிநாட்டில் என்றால் தனக்கு நெருங்கிய சில நண்பருக்கு பயணசீட்டு எடுத்து தருவார் என்று பட்சிகள் கூறுகின்றன.

இந்தப் பிரபல பதிவர் யார்?

இந்த டும் டும் டும் தகவலை எனக்கு தந்தவருக்கு வாக்கு கொடுத்ததற்கு இணங்க இவரது பெயரையோ, ஆளைக் கண்டுபிடிக்கக் கூடிய இலகுவான ஊகிப்புக்களையோ தராமல் சில சவாலான தரவுகள் தருகிறேன்.. முடிந்தால் கண்டுபிடித்துப் பின்னூட்டமிடுங்கள்..

தற்போதைய இருப்பிடம் - இலங்கை
வெகுவிரைவில் இறக்கை முளைத்துப் பறக்க இருக்கிறார்.
எந்நேரமும் இணையத்தில் இருக்கும் இவர் பழகுதற்கு இனியவர்.
தமிழிலும்,இசையிலும்,திரையிலும் தீராப் பற்று..
கலைகள் பல தெரிந்தவர்..அரசவம்சத் தொடர்புண்டு.
மிருதங்க சக்கரவர்த்தி..
பிஞ்சு மனசும், சிநேக சுபாவம், நகைச்சுவை நாட்டம், நாலா பக்கமும் நண்பர்கள்,
நயன்,நமீ என ரசிகர் மன்ற உடன்பிறப்புக்கள்..
மூஞ்சிப் புத்தகம்,மூழ்க வைக்கும் ட்விட்டர்,ஒர்க்குட் என்று ஒன்றுவிடாமல் அத்தனையிலும் சஞ்சரிப்பவர்..
சகலகலாவல்லவர்..
கணினியில் கரை கண்டவர்..
பின்னூட்ட சிகாமணிகளில் ஒருவர்..
இவரது தளமும் அலெக்சாவில் பிரபலமான மூன்று லட்சத்துக்குள் உள்ளது..
சாப்பாட்டுக்கு முன்னர் விருந்தகங்களில் அருந்தக்கூடியதற்கும் இவருக்கும் தொடர்பொன்று உண்டு..
நெருங்கிப் பழகியோருக்கு இவரைக் கடுகதியோடும் தொடர்புபடுத்துவதில் தனிசுகமுண்டு.

பல்துறை வித்தகர் இவருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்களை முதலில் சொல்வதில் எனக்கும் பெருமகிழ்ச்சி..

முந்தி இந்தத் தகவலையும்,இன்று பகல் வேளையில் தனது பிறந்தநாள் விருந்துப் பந்தியும் பரிமாறி சென்ற நண்பன் வந்திக்கு நன்றிகள்..


பி.கு - ஒரு சின்ன ஐடியா எங்கள் இரண்டாவது பதிவர் சந்திப்புக் காலகட்டத்திலே திருமணமும் நடந்தால் இன்னும் கொஞ்சம் களைகட்டும்.. ஜமாய்த்துவிடலாம்..

Post a Comment

30Comments

Please Select Embedded Mode To show the Comment System.*