சில வேடிக்கையான புதுமொழிகள்..
முன்பொரு நாள் எனது விடியல் காலை நிகழ்ச்சியில் நானும் நேயர்களும் சேர்ந்து உருவாக்கியவை..
என்று பகுதி ஒன்று வந்தது..
இப்போது பகுதி இரண்டு...
சிரியுங்கோ.. நல்லா வாய் விட்டு சிரியுங்கோ..
(நேயர்களின் பங்களிப்பு இருந்தாலும் நிகழ்ச்சியை நடத்தியவன் என்ற அடிப்படையில் copy rights எனக்கே இருக்கிறது)
அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;
அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.
எத்தனை பழமொழி sms பண்ண ஆசைப்பட்டாலும் phoneல credit இருந்தால் தான் அது deliver ஆகும்.
நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.
Hand Phone மலிவானால் ஆவி கூட Phone bill கட்டும்.
ஓசில Iron Box கிடைத்தால் Under wearஜயும் பண்ணி போடுவாங்களாம்.
Duckworth Lewisம் Doctors எழுதுவதும் புரிகிறவர்களுக்குத் தான் புரியும்.
படுத்துகிட்டு தூங்குவானாம் good man
பறந்துகிட்டு தூங்குவானாம் Bat man
விஷாலுக்கு Comedy வராதுன்னு zooல பன்னிக்குட்டிக்கும் தெரியும்.
Power play நேரமே runs எடுத்துக்கோ.
இளிச்சவாயனுக்கு வாழ்வு வந்தா இங்கிலாந்து போய் இடியப்பம் சாப்பிடுவானாம்.
பிச்சைக்காரன் வீட்டுப் பந்திக்கும் முந்து.
Hero கமல் என்றால் heroineக்கு உதட்டில் காய்ச்சல் வரும்.
எறும்புக்கு காலம் வந்தா எருமைக்கிட்ட கூட gameஅ கேட்கும்.
சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்.
பாம்பிற்கு காலம் வந்தா பாவனாவ வச்சு படம் எடுக்கும்.
ஆயிரம் ரூபாய்க்கு Trouser வாங்கினாலும் பத்து ரூபா zip தான் மானத்தை காப்பாற்றும்.
குருவி மட்டும் வெள்ளையா இருந்தா கொக்கு கூட தோற்றுப்போகும்.
வல்லவனுக்கு முடியுமா வழுக்கை மண்டையில் போவதற்கு?
பசித்த வயிற்றுக்கு வடித்த கஞ்சியும் பிரியாணி.
சிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.
எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.
கஞ்சனின் சேமிப்பில் வைத்தியருக்கு பிரியாணி.
எலிக்கு காய்ச்சல் வந்தால் ஜ.நாவிற்கு தலைவலி.
ஓவரா ஆடுனா Australian team கதி தான் உனக்கு.
நேரம் நல்லாயிருந்தா நெத்தலி மீன் கூட நீந்தி விளையாடும்.எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.
வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.
தொர சோறுக்கு பிச்சை எடுத்தாராம், தொர சாமி கோதுமை மா ரொட்டி கேட்டாராம்.
பி.கு - நயன்தாரா பெயர் & படம் பார்த்து வந்து கடுப்பாகிப் போனவர்களுக்காக இன்னொரு போனஸ் நயன் படம்.. கொஞ்சம் அதிக கிளு கிளுவாய்..