நேற்று இருந்த எல்லா வேலைகளையும் விரைவாக செய்து முடித்து அல்லது ஒத்திப் போட்டு விட்டு இலங்கை நியூ சீலாந்து Twenty 20 போட்டி பார்க்க முடிவு செய்து வீட்டிலே இருந்து பார்த்தேன். கடைசியாகக் கடுப்பாகி வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் எல்லாவற்றாலும் இலங்கை அணியை திட்டிக் கொண்டே தூங்கப் போனது தான் மிச்சம்.
அருமையாகப் பந்து வீசி நியூ சீலாந்து அணியை ஒரு சராசரி ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தி விட்டு நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கிய பொது, தொடர்ந்து இலங்கை மண்ணில் இரண்டு T 20 போட்டிகளைத் தோற்ற கறையை நியூ சீலாந்து அணிக்கெதிராக இலங்கை அணி கழுவிவிடும் என்று பார்த்தால், மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி..
டில்ஷான் அதிரடி ஆரம்ப ஆட்டம் ஆடியும் அத்தனையையும் விழலாக்கிவிட்ட இலங்கை அணியை என்னவென்று சொல்வது?
எப்படித் திட்டுவது?
(தொலைகாட்சி ஒரு கட்டத்தில் சேர்ட் அணியாத டில்ஷானைக் காட்டியது.. மனிதர் கிரிகெட்டில் உழைப்பதை எல்லாம் நகைகளாக செய்து கழுத்தில் போட்டிருப்பாரோ? அவ்வளவு தங்க செயின்கள்.. ஒரு நடமாடும் நகைக் கடை போல.. இவ்வளவும் போட்டுக் கொண்டு ஓடி,பாய்ந்து,விளையாடுகிறாரா?? )
ஷேன் பொண்டின் முதல் ஓவரிலே அருமையாக அடித்தாடி நான்கு பவுண்டரிகள்.. நினைத்துப் பார்க்கமுடியாத வேகத்தில் ஓட்டங்கள்.. இடையிடையே ஜெயசூரிய,ஜெயவர்த்தன ஆட்டமிழந்தாலும் டில்ஷான் இருக்கும்வரை ஏன் மத்தியூஸ் இருக்கும் வரை கூட நம்பிக்கை இருந்தது..
டில்ஷான் 23 பந்துகளில் அரைச் சதம்.. இலங்கை அணி 6 ஓவர்களில் அறுபது என்றிருந்தபோது யார் இலங்கை தோற்கும் என்று நினைத்தது..
ஒவ்வொரு துடுப்பாட்டவீரரும் ஆட்டமிழந்தது பொறுப்பற்ற கவனயீனமான துடுப்பாட்டப் பிரயோகத்தினால்.. இறுதியில் கூட விக்கெட்டுக்களை இழக்காமல் ஒவ்வ்வோன்றாக ஓட்டங்களை எடுங்கள் என்று மீண்டும் மீண்டும் சங்கா சொல்லி அனுப்ப அனுப்ப ஒவ்வொருவரும் பெரிய அடிகளுக்கு சென்று ஆட்டமிழந்ததை என்ன சொல்வது?
முரளியின் இறுதிநேர அதிரடியை நேற்று ரொம்பவும் இலங்கை மிஸ் பண்ணி விட்டது.
கடைசி இரண்டு பிடிகளும் நியூ சீலாந்துக்கு அதிர்ஷ்டப் பிடிகள்.. கொஞ்சம் விலகியிருந்தாலும் இரண்டு பவுண்டரிகள்.. இலங்கை வென்றிருக்கும்.. பண்டாரவும் குலசெகரவும் அடித்த வலு போதாது. (என்ன தான் சாப்பிடுறான்களோ??)
நியூ சீலாந்து அணி வீரர்கள் களத்தடுப்பில் வழமைக்கு மாறாக பல தவறுகள் விட்டும்கூட நியூ சீலாந்து வெல்கின்றதென்றால் இலங்கை அணியின் பொறுப்பற்ற ஆட்டம் தானே காரணம்?
அதும் அந்த உயரமாய் வளர்ந்து ஒண்ணுக்கும் உதவாது போல் வளம் வரும் ஓராம் hat trick எடுத்தது தான் ஆக ஓவர்.
எத்தனை தடவை இப்படி இதே பாணியில் தோற்றாயிற்று?
முன்பெல்லாம் அரவிந்த டீ சில்வா அடி அடியென்று அடித்துப் போனபிறகு ஒட்டுமொத்த அணியும் சரணடையும்;பின்னர் ஜெயசூரியவின் அதிரடியாட்டத்தின் பின்னர் இலங்கை அணி வெற்றி இலக்குக் கிட்ட வந்து சுருளும்.. இப்போது டில்ஷானின் ஆட்டங்களை அநியாயமாக்குகின்றார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் பெரும் வெற்றிகளை என் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கை அணியால் கொண்டுவர முடிகின்றதில்லை?
முன்பு ஒருநாள் போட்டிகளில் சூரர்களாக இருந்து டெஸ்ட் போட்டிகளில் சுருண்டார்கள்.. இப்போது நிலைமை தலைகீழ்.. சங்கக்காரவின் தலைமையில் இதில் மாற்றங்கள் வரவேண்டும்.
நேற்று பதினோரு பேரையும் மனதில் வைது விட்டு (பின்னே டில்ஷான் அவசரப்பட்டு ஆட்டமிழந்ததும் தவறு தானே) தூங்க செல்வதற்கு முன் இருந்த கடுப்பிலும் எரிச்சலிலும் சங்கக்காரவின் தனிப்பட்ட செல்பேசிக்கு ஒரு sms அனுப்பிவிட்டுத் தான் படுக்கப்போனேன்..
"Please ask your guys to play for victory or bat first.. so we can guess that u r going to lose"
நல்ல காலம் ஊடகவியலாளர் பாஸ் கிடைத்தும் நேற்று போட்டி பார்க்கப் போகாது.. வெறுப்பில் என்ன செய்திருப்பேனோ தெரியாது..
மவனுகளா நாளை போட்டி பார்க்க வாறன்.. மறுபடி ஏமாத்தினீங்க...
என்ன செய்யமுடியும்... ஏக்கத்தோடையும் கடுப்போடையும் இப்படி இன்னொரு பதிவு போடுவேன்..