வர்றீங்க தானே?
இது ஒரு ஞாபகமூட்டல் பதிவு..
நாளை ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு என்ன வேலை இருந்தாலும் போட்டுவிட்டு ஓடி வந்து விடுங்கள்..
வருவீங்க என்று தெரியும்.. இருந்தாலும் ஒரு நினைவுறுத்தல் தான்..
எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி.. பங்கேற்பாளர்கள் (நீங்க தானே முக்கியம்) வந்து நிகழ்ச்சியைப் பூரணப்படுத்தி வெற்றியாக்குவது மட்டும் தான் மிச்சம்..
முதலில் வந்து முந்துவோருக்கு சொகுசான இருக்கைகள், புல்லட் வழங்கும் விசேட உணவுகள் கிடைக்கும்..உண்மையா.. நம்புங்கப்பா.. அட ச்சே இந்த புல்லட் பெயரைப் போட்டால் எதையும் யாரும் நம்புறாங்க இல்லை.. (அதுக்கு தானே ஆரம்பம் முதலே வருவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டு எண்ணிக்கை எடுத்தோம்)
விஜயகாந்த் ஸ்டைலில் சில புள்ளி விபரங்கள்..
இலங்கையைச் சேர்ந்த பதிவர்கள் பல நூறு.. ;) (இப்ப ஆயிரம் தாண்டும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்)
அதில் இலங்கையில் இருந்தே பதிவிடுவோர் சில நூறு..
நாம் சேர்ந்து அழைப்பு விட்டது எல்லோருக்கும்..
வாழ்த்து சொன்னவர்கள் பல பேர்..
வருவதாக சொன்னோர் பலர்..
ஒழுங்குபடுத்தலை ஆரம்பித்த அப்பாவிகள் நாலு பேர்..
இப்போ எங்களோடு ஆதரவாக இன்னும் ஒரு நாலைந்து பேர்.. ((பக்க பலமாக இன்னும் பல பேர் - வெளியிலருந்து ஆதரவு ;))
நாங்கள் வருவார்கள் என்று நினைத்தது முதலில் ஒரு 25.(அதுக்கே நொண்டியடிக்கும் என்று பார்த்தோம்.. ஆனா இப்போ.. :))
உறுதிப் படுத்தியோர் மட்டும் இப்போதைக்கு தாண்டியிருக்கிறது 80.
சொல்லாமல் கொள்ளாமல் வரும் அன்புள்ளங்களையும் அழைக்கிறோம்..
பல பயனுள்ள விடயங்கள் பகிரப்படும் ஒரு சந்திப்பாக மாற்ற வரும் உடன்பிறப்புக்களே.. (கட்சி பீலிங் வருதா?) நேரத்துக்கே வாருங்கள்..
நேரத்துக்கு ஆரம்பித்து ஒரு புதிய கூட்ட பரம்பரைப் பரிணாமத்தை ஏற்படுத்துவோம்..
மறந்துடாதீங்க இலங்கை நேரம் (கொழும்பு நேரம்) காலை ஒன்பது மணிக்கு..
கொழும்பு தமிழ் சங்கத்துக்கு வரும் வழி தெரியும் தானே?? தெரியாதவர்கள் வெள்ளவத்தையில் உள்ள உங்கள் உறவுகள் நண்பர்களிடம் கேளுங்கள்.. இல்லையெனில் ஆதிரையின் பதிவில் காட்டப்பட்டுள்ள வரைபடம் பாருங்கள்..
நிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..
Bloggerஇன் பத்தாவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியும் எங்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை சிறப்பு செய்து சரித்திரம் படைக்க வைக்கிறது..
எதிர்காலத்துக்கான் பெரிய முயற்சிகளுக்கான இந்த சின்ன முதலடியை நாளை சரித்திரபூர்வமாக்குவோம்..
குறுகிய காலத்தில் இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள்..
மீதி சந்தித்த பிறகு.. ;)
வர்றீங்க தானே?