நேற்று அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி 64 ஆண்டுகள் கடந்த நாள்.. உலகில் மனிதனால் ஒரே நாளில் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அந்த அழிவைப் பார்த்த பிறகும் நாம் திருந்தினோமா?
இன்னுமொரு அணுகுண்டு வீசப்படாதது மட்டும் தான் மிச்சம்..
அதுவும் வீசப்பட்டிருக்கும்.. ஈராக்கிலோ,ஈரானிலோ,பலஸ்தீனத்திலோ,வட கொரியாவிலோ, வன்னியிலோ..
ஆனால் யார் செய்த புண்ணியமோ அப்படியொரு அவலம் நடக்கவில்லை..
கீழே உள்ள காணொளியை பாருங்கள்.. இது பார்த்த பிறகும் இன்னொரு அணுகுண்டு வீச யாருக்காவது எண்ணம் வருமா?
யுத்த எச்சங்கள் நிறைந்த பூமியிலிருந்து பேசுவதால் எம் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் நன்றாகவே புரியும்.. அணுகுண்டு வீச்சை மட்டுமே எம்மவர் இன்னமும் சந்தித்திருக்கவில்லை..
உலகம் திருந்துமா?
இன்னும் அணுவாயுதத் தடை ஒப்பந்தம் என்று மாறி மாறிப் பேசியும் தடை கொண்டுவருவது,எச்சரிக்கை விடுவது பற்றிப் பினாத்துகிறார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யக் காணோம்...
நாம் எப்போது திருந்தப் போகிறோம்...
Post a Comment
10Comments
3/related/default