பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

ARV Loshan
26

முன்பொரு நாள் 'விடியலில்' ( எனது காலை நேர வானொலி நிகழ்ச்சி ) கொஞ்சம் வித்தியாசமாக புதுமொழிகளை உருவாக்கலாம் என்று எங்கள் நேயர்களோடு சேர்ந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான புதுமொழிகளில் சில ...

நீங்கள் சிரித்தாலும், ரசித்தாலும் நம் நேயர்களையும் சேர்த்தே பாராட்டுங்கள்....


ஏன்யா நீங்க எல்லாம் இப்பிடி?


எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.

பூனை இளைச்சா எலிக்கு மச்சான் முறை.

குயிலுக்கு அழகான உருவம் இருந்தா மயில் தூக்கில் தொங்குமாம்.

மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.

பல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீரில் பல்லு விளக்குமாம்.

யானைக்குத் தும்மல் வந்தால் எறும்புக்கு சூறாவளியாம்.

கழுதைக்கு காலம் வந்தா கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்.

Aussiesக்கும் அடி சறுக்கும்.

சிங்கம் எப்பவும் சிங்களா தான் இருக்கும் பன்னிங்க தான் Relationshipல இருக்கும்.

கேக்கிறவன் கேனயன இருந்தா கஞ்சிபாயிட மச்சான் வாஜ்பாய் என்று சொல்லுவாங்களாம்.

வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?

இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.

ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.

நாய் சிரிச்சா மண் ரோடு – கழுதை சிரிச்சா மெயின் ரோடு.

நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.

பன்னிக்கு POWER வந்தா பச்ச தண்ணியில் பலகாரம் சுடும்.

பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதையாக இருக்கு.

அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.

ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.

ஆமை ஆத்திரத்தில் சாமியாராக தவளை தந்திரமாக காணியை தனதாக்கிக்கொள்ளும்.

Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.

நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.

மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.

வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.

உருட்டிப் போடுற Ballக் கூட பிடிக்க முடியாதவன் gullyல fielding கேட்டானாம்..

விடிய விடிய கிரிக்கெட். விடிஞ்ச பிறகு David Hussey, Mike Husseyகு மாமா முறையா? மச்சான் முறையான்னு கேட்டானாம்.

நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்.

காசிருந்தா கரட்டானும் கடவுளுக்கு Hai சொல்லும்.

ஆமைக்கு வாழ்வு வந்தா ஆமதுருவிற்கே சிப்பு கொடுக்குமாம்.

யானைக்கு காதல் வந்தா காடெல்லாம் பூ பூக்கும்.

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடுற மாட்டை பட்டினி போட்டுக் கறக்கணும்.

பாம்பைக் கண்டா படையே நடுங்கும். நுளம்பைக் கண்டா ஊரே நடுங்கும்.

பல்லிக்கு வால் முளைச்சா நாய்க்கே வால் காட்டும்.

கோயில் மூடினாலும் மணி ஆட்டம் நிற்காது.

அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும்.

கண்டி மழையையும், Campus காதலையும் நம்பவும் முடியாது; சொல்லவும் முடியாது.

கையிலிருந்து நூல் வந்தா தான் Spiderman..

பொக்கவாய் கிழவனைப் பார்த்து சிரிச்சாளாம் பல் set போட்ட கிழவி.

கல்யாணம் வந்தா காதலும் பல்ட்டி அடிக்கும்.

எலி பிடிச்ச பூனை அதோட எடை குறைவு என்று கவலைப்பட்டதாம்.

பசுக்கு பசி வந்ததால புல் கேட்காம full கேட்குதாம்.

ஒற்றுமை இல்லாவிட்டால் Australia கூட வெளியில் தான்.

நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.



இதுக்கே சிதம்பர சக்கரத்தைப் பார்த்த மாதிரி ஆயிட்டா எப்படி? இன்னும் கொஞ்சம் இருக்கில்ல? அதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.. வர்ட்டா?

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*