இலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...

ARV Loshan
6

நாளை காலி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முரளிதரன் விளையாடமாட்டார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக அவரை விளையாடாமல் ஓய்வெடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வெளியிட்டுள்ளது.

முரளி - மென்டிஸ் இணை அசத்தலில் பாகிஸ்தானை பயமுறுத்தலாம் என்று எண்ணி இருந்த இலங்கை அணியின் கணக்குகள் இப்போது குழம்பி இருக்கின்றன.

முரளிக்கு பதிலாக அவசர அவசரமாக இன்னொரு சுழல் பந்துவீச்சாளரை இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டியுள்ளது.

ரங்கன ஹேரத் அல்லது சுராஜ் மொகமடுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியின் முதல் பந்து வீசப்படு முன்னரே வெற்றிக்கான வழியொன்று கிடைத்திருக்கிறது.

ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்தவர் என்ற காரணத்தால் புதுமுகமான சுராஜை முந்திக் கொள்வார் என்று கருதலாம்...

ரங்கன ஹேரத்

இலங்கை அணிக்கு துரதிர்ஷ்டம் வீரர்களுக்கு காயம் வடிவத்தில் துரத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதலில் விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்த்தன.. இப்போது முரளி...

அணித்தேர்வில் புதுமுக விக்கெட் காப்பாளர் கௌஷால் சில்வாவுக்கு வாய்ப்பளிப்பதா இல்லை சங்ககார தானே விக்கெட் தரப்பில் ஈடுபடுவதா (டில்ஷானும் விக்கெட் காப்பு செய்யக் கூடியவர்) என்ற குழப்பத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு தலையிடி..

அதுவும் இப்போது இலங்கை அணியின் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் முக்கியமான துரும்புச் சீட்டை (Greatest match winner)இழந்துவிட்டு நிற்கிறது.

மென்டிஸ் தான் நாளை அத்தனை பெரும் பொறுப்பையும் தாங்க வேண்டியுள்ளது.

இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால்கள்...

சங்ககார தலைமையில் முதலாவது டெஸ்ட்..
ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி அனுபவம் குறைவு..
ஆரம்ப வேகப் பந்து வீச்சு ஜோடியின் அனுபவமும் போதாது..
நிரந்தர விக்கெட் காப்பாளர் இல்லை..

இப்போது முரளி, வாஸ் என்ற இரண்டு அனுபவம் பெற்ற பந்து வீச்சாளர்களுமே இல்லை..

உலகக் கிண்ணத் தோல்விக்கு பதிலடி கொடுப்பாங்கன்னு பார்த்தா இப்படி பல்லு போய் நிக்கிறாங்களே..

இன்றாவது கிரிக்கெட் பதிவொன்னு போடாம இருக்கலாம்னு பார்த்த முரளி விட்டாரா.. ;)

Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*