ஷாருக்கின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விற்பனைக்கு !?

ARV Loshan
13

பட்ட காலிலே படும் என்பது போல – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எடுத்ததெல்லாம் தோல்வி!

விளம்பரங்கள், வித்தியாசமான (விபரீதமான??) ஐடியாக்கள், விலைகொடுத்து வாங்கிய வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள், உலகின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர் (என்று சொல்லப்பட்டனு சொல்லலாமா?) இப்படியெல்லாம் செலவளித்தும் வெற்றிகளைப் பெறத் தவியாய்த்தவித்து வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு முன்னால் For Sale பலகை தொங்கவிடப்பட இருப்பதாக காற்றோடு செய்திகள் பரவுகின்றன.

                          எல்லாருமா சேர்ந்து தலையில் கைவைக்கப் பண்ணிட்டிங்களே..


கொல்கொத்தாவின் தொடர்ச்சியான தோல்விகளை அடுத்து வெறுத்துப்போய் தென்னாபிரிக்காவை விட்டு இந்தியாவுக்குப் புறப்பட்டுப்போனார் ஷாருக். 'ஒரு போட்டியாவது வெல்லுங்கள்.. அதற்குப் பிறகு தான் போட்டியொன்றைப் பார்க்க தென்னாபிரிக்கா வருவேன்' என்று அறிக்கை வந்தது.

இதற்குள் கங்குலிக்கு ஆதரவான கொல்கத்தா பத்திரிகைகள் ஷாருக்கை வறுத்தெடுதத்தும் ஷாருக் மனம் வெறுத்துப் போக இன்னுமொரு காரணமாம்.

கடைசியாக நடந்த ரோயல் சலென்ஜர்சுக்கெதிராக போட்டியில் கொல்கத்தா பரிதாபமாகத் தோற்றுக் கொண்டிருந்த நேரம், ஷாருக் இந்தியாவில் தொலைக்காட்சியில் கூடப் போட்டிகளைப் பார்க்காமல் திருமண நிகழ்ச்சியொன்றில் பார்ட்டியில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்ததாக கொல்கத்தா பத்திரிகை ஒன்று எழுதிவிட, ஷாருக் கொதித்துப்போய் - 'என் அணி – எனது வாழ்க்கை.... என்ன வேணும்னாலும் செய்வேன்.... வாழ்த்தவும், தேர்தலில் வாக்குப் போடவுமே வந்தேன்' என்று பதிலுக்கு மும்பை பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருக்கிறாராம்.


இப்போது பரவலாகக் கசிந்து வரும் தகவல்களின் படி KKR அணியின் தனது மொத்தப்பங்குகளையும் விற்பது குறித்து மூன்று பெரிய நிறுவனங்களோடு ஷாருக்கான் பேசி வருவதாக அறியப்பட்டுள்ளது.

தொடர் தோல்விகளோடு அதிகரித்து வரும் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியாமல் ஷாருக்கானும் அவரது ரெட் சில்லீஸ் நிறுவனமும் (Red Chilies Entertainments ) தடுமாறி வரும் நிலையில் அண்மையில் ஆட்குறைப்புகள் அவசர அவசரமாக இடம்பெற்றன. 

முதலில் வீரர்கள் - பின்னர் அவசியமற்றதெனக் கருதப்பட்ட நான்கு பயிற்றுவிப்பாளர்கள்.

300 கோடி இந்திய ரூபாய்க்கு ஷாருக்கினால் வாங்கப்பட்ட KKR மட்டுமே கடந்த வருட IPL இல் பெரிய இலாபமீட்டியது என்று ஷாருக்கான் பெருமையயோடு அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.


                                    அந்த நாட்கள் அழகானவை ... அது ஒரு காலம்..

ஆனால் வெற்றி ஒன்றைப் பெறுவதற்கு நாய் படாப்பாடுபடுவதும், கங்குலியை மாற்றி மக்கலத்தைத் தலைவராகப் போட்டு நடாத்திய கூத்துக்களினாலும் ஷாருக் வெறுத்திருப்பதாகத் தெரிகிறது.

இனி போதும் - பொலிவூட்டுக்கே திரும்பலாம் - போட்டதெல்லாத்தையும் திருப்பி எடுத்தாலேபோதும் - அதிக ஆசை வேண்டாம் என SRK முடிவெடுத்திருக்கிறார் என்றுதான் தெரியவருகிறது.

நைட்ரைடர்ஸை விற்பது பற்றி பெரிய நிறுவனங்களை நோக்கியா, சஹாரா, அம்பானியின் ஒரு குரூப் (Nokia. Sahara, Ambani group) ஆகியோரிடம் ஷாருக் பேசியிருப்பதாக நம்பப்படுகிறது.

இப்போது இந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை விற்பதன் மூலம் ஷாருக் 100 முதல் 150 கோடி வரை இலாபமீட்டுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உங்களில் யாருக்காவது KKR ஐ வாங்கும் எண்ணமிருந்தால் என்னை அணுகி SRKஐத் தொடர்பு கொள்ள முதல் சில விஷயங்கள்

ஒரு வருடச் செலவு 75 கோடி இந்திய ரூபாய்.......

கொல்கத்தா நகரசபைக்கு வரியாக 50லட்ச ரூபாய் வருடாந்தம் செலுத்த வேண்டும்.

போட்டிகள் அடுத்த வருடம் இந்தியாவில் நடந்தால் கொல்கத்தா ஈடன் காடன்ஸில் போட்டிகள் நடக்கும்போது பாதுகாப்பு வழங்கும் பொலிஸாருக்கு 1கோடி ரூபா வழங்கவேண்டியிருக்கும்.

எனினும் முமுசு ஒழுங்காக விளையாடி ஜெயித்தால் அனுசரணையாளர், அப்படி இப்படியென்று வருடாந்தம் இந்த எல்லா செலவுகளையும் தாண்டி 50கோடி வரை இலாபமீட்டலாம்.

ஏதாவது ஐடியா இருந்தா வாங்க..... ஷாருக்கிடம் பேசலாம்....(அது சரி புதிய உரிமையாளர் மீண்டும் 'தாதா'வைத் தலைவராக்கினால் ஜெயிக்குமா?)



Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*