இலங்கையின் மிகப்பெரிய விளம்பரப் பதாதை என்று ( நான் பார்த்த வரைக்கும் என்று சொன்னாலும் பரவாயில்லை) குறிப்பிட்டு அண்மைய தேர்தல் விளம்பரப் பதாதை ஒன்றை போட்டுப் பதிவிட்டிருந்தேன்.
என்னுடைய நண்பரும், சிறந்த ஒரு இளம் இசையமைப்பாளருமான ஸ்ரீ சியாமளாங்கன் தற்போது டுபாயில் இருக்கிறார் (பிரபல இலங்கை கர்நாடக சங்கீதப் பாடகி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் மகன்) உலகின் மிக நீளமான அல்லது பெரிய விளம்பரப் பதாதை – Advertisement Banner என்று கருதப்பட்ட விளம்பரப்படம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
அம்மாடி.. என்னா உயரம்.. எவனாவது கழுத்து வலிக்க இதை முழுமையாகப் பார்த்திருப்பானா?
எமிரேட்ஸ் (Emirates) விமான சேவையின் விளம்பரமான இதுவே உலகின் மிகப் பெரிய அல்லது நீளமான விளம்பரம் என்று முன்னர் சொல்லப்பட்டு வந்தபோதிலும் இதனை விட அப்பனான விளம்பரங்கள் எல்லாம் இருக்கிறது என்று பின்னர் தான் தெரியவந்ததாம்.
நன்றி - ஸ்ரீ.
அந்தப் பென்னாம் பெரிய விளம்பரம் பற்றித் தெரிந்தவர்கள் ... அந்தப்படம் கிடைத்தவர்கள் எனக்கு மின்னஞ்சலாம்.