முட்டாள்களே நில்லுங்கள்!

ARV Loshan
21
Loshan
இன்று முட்டாள்கள் தினமாம்.அதை இந்த உலகின் எல்லா முட்டாள்களும் கொண்டாடுகிறார்கள். 

யாரோ ஓரு முட்டாளோ ஒரு சில முட்டாள்களோ முன்னமொரு காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதியை முட்டாள்கள் தினம் -April Fools Day என்று அறிவித்து விட அதையே காலாகாலமாக முட்டாள்தினமாக நாம் பிறரை முட்டாளாக்கி மகிழ்ந்து இன்னமும் முட்டாள்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

தேவையா? 

எம்மிலேயே எத்தனை முட்டாள்கள்?

வாழ்க்கையிலேயே பெரும்பான்மை நாட்களை முட்டாளாக வாழ்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு பிறிதாக ஒரு தினம் முட்டாளாக்கவும் முட்டாளாகவும் வேண்டுமா? 

கண்ணை மூடிக் கருவறையில் பத்து மாதத் தவம் அதன்பின் -பிறக்கும் போதே முட்டாளாக ஆரம்பிக்கிறது எங்கள் வாழ்க்கைப் பயணம் 

உடம்பு புரட்டி தவழ்ந்து பலமுறை விழுந்து எழுந்து யார் யாரோ சொல்வதெல்லாம் செய்து பின் முட்டாளாகவே முழு வாழ்க்கையும்.

இடைநடுவே பரீட்சைகளில் முட்டாளாகித் தோல்வி –

காதலில் முட்டாள் தனம் - திருமண வாழ்க்கை – வேலை தொழில் - முட்டாள்தனமான தெரிவு அல்லது முட்டாள்தனத்தால் தோல்வி!

கணக்கில்லா முட்டாள் தனங்கள் - முட்டாள்களின் பிரதிநிதியாக நான் இங்கே முடியுமானவரை சிலவற்றைக் கொட்டப் போகிறேன்!

April fools day's Exclusive post-

 முட்டாள் தினத்தின் சிறப்புப் பதிவு –
 
எங்களுக்குள்ளே எத்தனை எத்தனை முட்டாள்கள் -

சில பொதுப்படையான முட்டாள் தனங்கள்

முட்டாள்களால் ஆளப்பட்டு இனி..இனி... இனிமேலாவது ஏதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்திருக்கும் முட்டாள்தனம்.

முட்டாள்களால் உருவாக்கப்பட்ட முழு மூடத்தனமான தேர்தல் என்றதொரு விடயமூலமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ மீண்டும் மீண்டும் முட்டாளாகிறோம்.

ஒரு முட்டாளை மாற்றி இன்னொரு முட்டாளைக் கொண்டுவந்தால் எம்மை மீண்டும் முட்டாளாக்கி சிரிப்பார்கள்.

புள்ளடியிடுவதற்கு நகத்தில் புள்ளியிட்டு முட்டாள் பட்டம் கொடுக்கும் நாள் தான் அடிக்கடி வருதே! (இலங்கையில் மேல் மாகாணத்தில் அடுத்த மாதம் - இந்தியாவிலும் விரைவிலே) பிறகேன் தனியாக

சாதி சமயம் இனம் மொழி என்று இன்னும் முட்டாள்தன மோதல்களுக்குப் பல வழி!

போர்,பொருளாதாரம்,உடன்படிக்கை,ஒத்துழைப்பு,கூட்டணி,விலைக்குறைப்பு,வரிகள்,வாக்குறுதிகள் என்று எங்கள் முட்டாள்தனத்தின் மூலதன அலகுகள் பலப்பல –

இலங்கையில் நாம் 1958முதல் முட்டாள்தனமாகவே பலமுறை ஏமாந்தும் பலவாறு போராடி எதிர்பார்ப்புக் குறைந்தும் முட்டாள்தனத்தின் பொன்விழாவையும் கொண்டாடி முடித்துவிட்டோம்.

இன்னமும் சர்வதேசத்தையும் இந்தியாவின் சந்தர்ப்பவாத அரசியல் முதலைகளையும் நம்பிக்கொண்டே நாட்களையெண்ணும் முட்டாள்தனத்தை எங்கு சென்று சொல்வது?

அங்கிருக்கும் உண்மையான சோகம்,அனுதாபம்,அன்பு கொண்ட முட்டாள் அப்பாவிகள் பாவம்.. 

இந்தியாவிலே ஐயா orஅம்மா இல்லாவிட்டால் யாரோ (என்னபொருத்தம் இது மத்தியிலும் இதே.. தமிழ் மாநிலத்திலும் இதே ) முட்டாளாவதைவிட வேறு வழி தான் ஏது? 

வெள்ளித்திரை நாயகர்களை வா.. வா என்றழைத்து மீண்டும் முட்டாளாகவும் பலபேர் தயார் போல!

உலகமெங்கும் தமிழர் வாழுமிடமெங்கும் டிவியிலும் திரையிலும் கிரிக்கெட்டிலும் Internetஇலும் அதிலும் இப்போ வலைப்பதிவுகளிலும் எம் நேரத்தையெல்லாம் முதலிட்டு முற்றுப்பெறா முட்டாள் பயணம் செல்கிறோம்!

பதிவுலகிலும் எத்தனை எத்தனை முட்டாள்கள் முட்டாள்தனங்கள். 

முட்டாள்தனங்களை இல்லாமல் செய்ய சிலர் - முட்டாள் தனங்களைப் பகிர்ந்து கொள்ள சிலர் - மேலும் முட்டாளாவதற்கு சிலர் - முட்டாளாக்குவதற்கு சிலர் - (இதில் நான் எந்த ரகம்னு சொல்கிற அளவுக்கு தெளிவு பெறாத முட்டாளுங்க தான்!)

நாங்களெல்லாம் ஏதோ ஓரு விதத்துல எங்களை ஹீரோக்களாகக் காட்டிக்கொள்ள முயல முட்டாள் பையன் என்ற பெயரோடு ஒருவர் அண்மைக்காலமாகக் கலக்குகிறார்.

முற்றிய முட்டாள்களாக நாம் ஒவ்வொருநாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தனியாக ஒரு முட்டாள்தினமா?

இன்று எனது வானொலியின் காலைநேர நிகழ்ச்சியிலும் முட்டாள்கள்; தினத்தை முன்னிட்டு நான் ஏதாவது ஏமாற்று வேலை/pranks செய்வேன் என்று எண்ணியே நான்கு மணித்தியாலத்தில் ஒவ்வொரு வினாடியையும் எண்ணி எண்ணி உற்று அவதானித்து முட்டாளானோர் பலப்பல பலர்.

நிகழ்ச்சி நிறைவுறும்போது நான் சொன்னதும் இதுவே.

முட்டாள்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம்மையே மறுபடி முட்டாளாக்க அதுவும் ஒரு தினத்தையே கொண்டாட வேண்டுமா? 
ஒவ்வொரு நாளுமில்லையா கொண்டாடுகிறோம்!

விடைபெறும்போது போட்ட பாடல் 'நானொரு முட்டாளுங்க - சந்திரபாபு பாடியது


டிஸ்கி - என்னுடைய இந்த முட்டாள் தின சிறப்புப் பதிவில் எத்தனை தரம் முட்டாள் என்ற வார்த்தை வந்துள்ளது என்று சரியாகச் சொல்வோருக்கு லோஷன் என்ற முட்டாள் பரிசு வழங்குவார் என்று எந்த முட்டாளாவது சொல்லி அதை நீங்கள் முட்டாள்தினமாக நம்பி முட்டாளை எண்ணிக் கொண்டிருந்தால் - I am really sorry !

ஒரு சிறப்பு நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு.. Adsense விஷயத்தில் அரைகுறை முட்டாளாக இருந்த எனக்கு ஞானோபதேசம் செய்து நேற்றிலிருந்து வரவு வைத்த வள்ளல் அவர் - நன்றிகள் தமிழ்நெஞ்சம்.

சொடுக்குங்கள் அன்பர்களே – நண்பர்களே மில்லியனயர் வலைப்பதிவராக என்னை மாற்றுங்கள்!

இப்போ முதலில் முட்டாள்தனமா இருக்காம கமெண்டும் வோட்டும் போடுங்க முதலில!    

 

Post a Comment

21Comments

Please Select Embedded Mode To show the Comment System.*