நேற்று முன்தினம் நம்ம இளைய தளபதி விஜய் எதோ ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பாய்ந்து வெடித்ததாக இல் ஒரு வீடியோ வெளியானதை அடுத்து எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு..
ஏதோ உலக மகா புரட்சி நடத்திய மாதிரியோ, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்த மாதிரியும்..
என் விஜய் இப்படி செய்தார்? இது பொய்யாக இருக்கும்.. கிராபிக்ஸ்யில் யாரோ செய்த ஏமாற்று வேலை இது.. விஜய்க்கு எதிரான அரசியல் (!) சதி இது.. தலயின் ரசிகர்கள் செய்த சதி இது அப்படி இப்படி என்று ஒரே சல சல..
எனக்கு மட்டும் எத்தனையோ தொலைபேசி அழைப்புக்களும்.. வெறுத்துப் போய் எனக்கு மாலை வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு கேட்ட வார்த்தைக்கு அண்மித்த நல்ல வார்த்தையால் ஏசிவிட்டு அடப் பாவிகளா,, முத்துக்குமார் தீக்குளிச்துக்கு கூட இவ்வளவு கவலைப்பட்டு,பர பறக்கவில்லையே என்றேன்..
இதெல்லாம் ஒரு பக்கம் சீரியசான விஷயங்களாக இருக்க... இது உண்மையா இல்லையா இல்லை இது எந்தக் கூட்டத்தில் நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் நான் ஆராயப்போகவே இல்லை. எனக்கென்ன வேற வேலையே இல்லையா?
அடுத்தது இது தனிப்பட்ட அலுவலக,அல்லது விஜயும் பிரபுதேவாவும் மட்டும் கலந்து கொண்ட கூட்டமும் இல்லை.. காரணம் பல ஊடக நிறுவனங்களின் மைக்குகள் தெரிகின்றன.. (வீடியோவை நானும் இணைத்தால் ஏராளமான இணையத் தளங்களுக்கும்,வலைத்தளங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காது என்பதால் இணைக்கவில்லை.. ஹீ ஹீ .. இது எப்டி இருக்கு)
எங்கேயாவது தேடிப் பார்த்துக்குங்க.. நீங்கள் இதுவரை அந்த சரித்திரப் பெருமை வாய்ந்த கிளிப்பிங்கைப் பார்க்கவில்லை என்றால்..
எனினும் தனிப்பட்ட முறையில் விஜயின் இந்த செயல் எனக்கு ஒரு சின்ன பாதிப்பை தந்துள்ளது..
அதுக்காகத் தான் இந்தப் புலம்பல்,கண்டனம்,கவலை சேர்ந்த பதிவு..
இளைய தளபதி ஒழிக..
எங்கள் அலுவலகத்தில் எனக்கும் சக பதிவர் ஹிஷாமுக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி ஒன்று இருக்கிறது.. ஒவ்வொரு நாளும் பதிவுகள் இடும் வேளையில் யாருக்கு அதிக ஹிட்ஸ் வருகிறது என்பதே அந்தப் போட்டி..
ஆரம்பத்தில் ஒரு மஜா பதிவின் மூலமாக ஹிஷாம் வைத்த சாதனை ஹிட்ஸ் மட்டத்தை நான் கமல் பற்றிய எனது பதிவின் மூலமாக முறியடித்து இருந்தேன்.. நான் அனேகமாக ஒவ்வொரு நாளும் பதிவிடுவதால் எனக்கு சராசரியான ஹிட்ஸ் கிடைத்து வந்தது.. (வாடிக்கையான customers இருக்காங்கப்பா ;))
எனது சாதனையும் மூன்று மாதங்களாக முறியடிக்கப் படாமலேயே இருந்து வந்தது..
ஆனால் நம்ம ஹிஷாம் இருக்காரே.. இயக்குனர் ஷங்கர் மாதிரி.. எப்பவாவது பதிவு போடுவார். அது கலக்கல் ஹிட் ஆயிடும்.. இது போலத் தான் நேற்றும் நடந்திருக்கு..
இந்த பாழாய்ப்போன விஜய் விவகாரத்தை நம்ம பதிவுலக ராமசாமி வீடியோவோட பதிவைப் போட, குய்யோ,முறையோ என்று எல்லோரும் ஹிஷாமின் தளத்துக்கு ஓட,என்னோட சாதனை டம்,டமால்,டுமீல்..
நான் நமீதாவை தற்செயலாக (உண்மையிலேயே தற்செயலாத் தான்) பதிவுல நேற்று சம்பந்தப் படுத்தியும் முடியல.. விஜய் நமீதாவையே தூக்கி சாப்பிட்டாரு..
இனி மறுபடி விஜயின் படம் ஒன்று தோத்து,அதுக்கு ஒரு மீட்டிங் வச்சு,அதில விஜய் பொங்கி வெடிச்சா தான் நான் சாதனை முறியடிக்கலாம் போல.. (அதை நான் எடுத்து பதிவா போட வேற வேணுமே.. என்ன கொடும லோஷன் இது..)
வேட்டைக்காரன் எப்ப ரிலீசுப்பா? (கெட் அப்பெல்லாம் வேற மாத்துறாராம்.. அப்படின்னா ரொம்ப காலம் காக்க வேண்டிய தேவை இல்லை..)
வாருங்கள் என அன்பர்களே..எனது எதிர்கால வாக்காளர்களே (இப்போதைக்கு ஐடியா இல்லை.. நாளைக்கு என்ன நடக்கும் யார் கண்டார்.. ) வந்து திரளுங்கள் என வலைத்தளத்திலே.. ஹிஷாமின் ஆதிக்க சாதனையை முறியடிப்போம்..
ஹிஷாம் ஒழிக .. இளைய தளபதி ஒழிக ..
கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேனோ..
its okமா.. இன்னுமொரு பர பர பதிவு போட்டுற மாட்டோம்??எவ்வளவு பண்ணிட்டோம்.. இதைப் பண்ண மாட்டமா? (இங்கேயும் அதே தளபதியா? வேற வழி)