இந்த உலகிலேயே அதிக கொடுமைகளை அனுபவிக்கும் ஜீவன்களில் ஒன்று என் மனைவி. இப்படி நான் சொன்னவுடன் ஏதோ அடிக்கிறேன்; கொல்கிறேன் என்று அர்த்தமல்ல.
வானொலியில் எனது நேயர்களை விட கூட வேலை செய்யும் நண்பர்கள் சக ஊழியர்களை விட எனது அறுவை,கடிகளை அதிகநேரம் தாங்கிக் கொள்பவர் என்பதனால் தான் அப்படிச் சொன்னேன்.
சிலநேரங்களில் நான் சீரியஸாக சொல்வது போல ஏதாவது புளுகு அவிழ்த்து விட்டால் கூட நம்பிவிடும் அப்பாவி! இதனாலேயே இப்போதெல்லாம் முன்பே இது 'உண்மையுடனான விஷயம்' என்ற முன்னெச்சரிக்கையோடே எந்த விஷயமானாலும் சொல்கிறேன்!
நேற்று இரவு இப்படித்தான் ஏதோ ஒரு பேச்சு சுவாரஸ்யத்தில் சின்ன வீடு, இரண்டாம் தாரம் என்று கதை போய்க் கொண்டிருந்து. கொஞ்சம் Over possessive ஆன என் மனைவியிடம் இப்படியான விஷயங்களை நான் ரொம்ப அவதானமாகவே பேசுவது உண்டு.
தனக்கொரு சக்களத்தி இருந்தால் எங்கள் குழப்படிக்கார மகனைப் பார்த்துக்கொள்ள உதவி,ஒத்தாசையாயிருக்கும் என்று உரையாடலின் இடையே எனது மனைவி சொன்னாள்..
"அதுக்கென்ன – எனக்கும் வசதிதான்! No Objection" என்றேன்.
"மாமிட்டை (என் அம்மா) சொல்லவா பாக்கச் சொல்லி" என்று கேட்டாள் மனைவி.
"வேண்டாம் வேண்டாம்..என்ரை டேஸ்ட் உமக்குத் தெரியும் தானே...நீரே பாரும்"
"ஏன் அவதானே என்னை உங்களுக்குப் பார்த்தா" இது மனைவி
"அதுதானே இப்ப அனுபவிக்கிறேன்..அம்மா பார்த்தது failure. இந்த தடவையாவது நீர் பாரும்.இதாவது நல்லா அமையட்டும்" சைக்கிள் கப்பில (gap) பிளந்து கட்டிட்டேன்
அவ்வளவு தான் பேச்சு cut .. காலை டீயில் சீனியில்லை – ironing நானே-காலைச் சாப்பாடும் கடையிலே..
இன்னும் என்னென்ன தொடரப் போகுதோ?
லோஷன் தேவையா இது உனக்கு?