இந்த பதினோரு ஜோதியில் கலக்கலாம் என்று இன்று சும்மா யோசித்தேன்.. இது மனசுள் இருந்த சில சந்தேகங்கள்.. உண்மையிலேயே யாருக்காவது விடை தெரிந்தாலும் சொல்லுங்கள்..
- உலகின் முதலாவது தமிழ் பதிவர் யார்?(எப்போது தனது வலைத்தளம் தொடங்கினார் & இன்னும் போடுகிறாரா என்பது உப கேள்விகள்)
- அவர் ஆரம்பித்த உலகின் முதலாவது தமிழ் வலைப்பூ/வலைத்தளத்தின் பெயரென்ன?
- அவரின் முதலாவது வலைப்பதிவு எதைப் பற்றியதாக இருந்திருக்கும்?(நாமெல்லாம் ஆரம்பிச்சது போல வணக்கம் & அறிமுகம் தானோ?)
- முதலாவது பின்னோட்டம் யாரிடமிருந்து வந்திருக்கும்? (வலைப்பதிவு உருவாகு முன்னரே அனானிகள் இருந்ததாக சுவாமி வலையானந்தா அருள்வாக்கியிருக்கிறார்)
- தமிழிச்,தமிழ்மணம்,தமிழ், ஈதமிழ் போன்ற திரட்டிகள் எல்லாம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் வாசிப்போர் எப்படி இது பற்றித் தெரிந்திருப்பார்?
- மொக்கையா சீரியசா என்று முதல் பதிவை யார்,எப்படி தீர்மானித்திருப்பர்?
- நம்மையெல்லாம் மாதிரி அட்சென்ஸ், ஹிட்ஸ், போல்லோவேர்ஸ் (followers), வோட்டுக்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டாரே? (வேறு ஏதாவது குடும்ப,கடன் தொல்லைகள் தாங்காமல் அதைக் கொட்டத் தான் பதிவு போட வந்தாரோ?)
- உள்குத்து,நுண்ணரசியல்,கும்மி,அனானிகள் இல்லாத அந்த தமிழ்ப்பதிவு அவருக்கே போரடித்திருக்காதா?
- அனானிகளாக வந்து பழைய /புதிய பகை, எரிச்சல்,பிரசாரம்,விளம்பரம் பண்ணும் தொல்லைகள் அப்போதே ஆரம்பித்திருக்குமா?
- தான் தான் தமிழின் முதல் பதிவர் என்று வலைத்தளம் ஆரம்பித்த போதே அவருக்கு தெரிந்திருக்குமா?
- லோஷன் என்ற ஒருத்தன் ஒரு சோம்பலான,போரடிக்கும் சனிக்கிழமையில் தன்னைப் பற்றித் தன்னிடமே இப்படி ஒரு பதிவு போட்டு, பதினோரு கேள்வி கேட்பான் என்று அப்போதே யோசித்திருப்பாரா?