
உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான இளசுகளின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அங்கம். ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரமாவது Facebookஇல் செலவழிக்காவிட்டால் ஒருவனது/ஒருத்தியினது இளமையினையே தொலைத்துவிட்ட அளவுக்கு Facebook செலுத்துகின்ற ஆதிக்கம் மிக அதிகம். இளையோர் மட்டுமன்றி ஏனைய பராயத்தினரும் இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது Facebookஇன் அண்மைக்காலப் பிரபல்யத்தினால் மேலும் புலப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Facebook 8ம் இடத்தில். அண்மையில் தான் Facebookஇன் 5வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள facebookகிகளால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

Facebook போலவே நட்புறவுகளை இணைக்கின்ற சமூகக் குழுக்கள்,ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய இதேபோன்ற தளங்கள் தான்MySpace,Orkut,Wayn,Hi 5 போன்றன. ஆங்கிலத்தில் இவை Social networking sitesஎன்று பொதுப்படையாக அழைக்கபடுகின்றன.
Facebookஇன் நேரடிப்போட்டியாளர் என்று கருதப்படும் அளவுக்கு Myspaceக்கும் க்கும் இடையில் கடுமையான போட்டி.உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Myspaceஇருப்பது 6ஆம் இடத்தில்.
எனினும் ஏனைய எல்லா சமூக நட்பு இணையதளங்களையும் விட Facebook பாதுகாப்பானதும் சமூகப் பொறுப்பு வாய்நததும் என்று கருதப்படுகிறது. காரணம் Facebook இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் சொந்தப் பெயர் (சுயபெயர்) பாவனைக் கொள்கை தான்!
இதன்மூலம் பாலியல் குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் போன்ற தகாத நடவடிக்கைகள் அதிகளவில் தவிர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று நிர்வாணப்படங்கள் தகாத பிரச்சாரங்கள் பொன்றனவும் Facebookஇல் கூடுமானவரை தவிர்க்கப்படுகின்றன.
MySpaceஇலும் இதே போன்ற நடவடிக்கைகள் இருப்பதாக இதுவரை பெருமை பேசப்பட்டு வந்தாலும் இணையத்தில் பாலியல் பிரச்சினையை ஏற்படுத்தவோர் (sex offenders) பற்றி விசாரணைகளை அமெரிக்காவின் சிறப்பு விசாரணைக்குழு ஒன்று ஆராய்ந்த வேளையில் MySpaceஇல் 90000 பாலியல் குற்றவாளிகள் பாலியல் நோக்கங்களுக்காகவே பதிவுசெய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் பலதடவை பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்காவில் தண்டனை பெற்றவர்கள். இவர்களது நடவடிக்கைகள் தொடக்கம் அங்க அடையாளங்கள்,டட்டூக்கள்(Tattoos),வடுக்கள் வரை அத்தனையும் பாலியல் குற்றங்களை அமெரிக்காவில் கண்காணிக்கும் அமைப்பிடம் உள்ளதாம்!
இந்த 90000 பேரும் இனிமேலும் MySpaceஇல் நுழையாமலிருக்கும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.
மறுபக்கம் Facebookஇல் எவ்வளவுதான் விதிகள் இறுக்கமாக இருந்தாலும் பலவிதமான பாலியல் நடவடிக்கைகள் நடந்தவண்ணமே உள்ளன. (சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)
யுத்தம்,இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கெதிராக மற்றும் பல விழிப்புணர்வு விடயங்கள்,அறிவூட்டல் சமாச்சாரங்கள் இன்னும் எவ்வளவோ விடயங்களுக்காக பிரயோசனமான பல groups இருந்தாலும் கூட வேலை மினக்கெட்டு பாலியல் விளையாட்டுக்களுக்கென்றும் ஒரு கூட்டம் அலைகிறது.
இதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.வளர்ச்சியடைந்த அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இவை போன்ற தளங்களின் காமுகர்களினால் வாழ்க்கை தொலைந்து,அழிந்து போன பல இலம்பராயத்தினர்,ஏன் இளைஞர்கள்,குடும்பப் பெண்கள் என்று பட்டியல் நீளுகிறது..
Myspaceஇலிருந்து விரட்டப்பட்ட இந்த 90000 பேரும் ஏதோ ஒருவிதத்தில் Facebookஇல் நுழைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவாம்!
நீங்களோ உங்கள் சகோதரர்கள் பிள்ளைகளோ இவ்வாறான Facebook,Myspace,Hi5,Orkut போன்றவற்றின் பாவனையில் ஈடுபடும்போது ஆழ்ந்துபோகாமலும் அடிமையாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..)