எனது வலைத்தளம் பற்றி ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை பாராட்டி எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.. அந்தப் பத்திரிகையின் பெயரே 'ஒரு பேப்பர்' !!!
அன்றொரு நாள் ஒரு அன்பர் இது பற்றி பின்னூட்டம் ஒன்றில் தகவல் தந்தார்..அதன் பின் நண்பர் சயந்தன் நாங்கள் ஜீமெயிலில் சாட்டிங்கில் இருக்கும் பொது தகவலை உறுதிப் படுத்தினார்..
அந்த அறிமுகம் வந்த பக்கத்தையும் அனுப்பி வைத்தார்..
மகிழ்ச்சி..
தெரிந்தெடுத்த நல்ல வார்த்தைகள் மூலமாக ஊக்கப் படுத்தி உற்சாகமும் தந்துள்ளார்கள்.. கட்டுரை வரைந்த யாழ்பாடிக்கும், நண்பர்கள் சயந்தன், மாயா ஆகியோருக்கும், இந்தப் பக்கத்தை மேலும் துல்லியப்படுத்தி இங்கு பிரசுரிக்கும் அளவுக்கு தந்த நண்பர் பிரதீப்புக்கும் எனது நன்றிகள்..
'ஒரு பேப்பர்'க்கும் நன்றிகள்..
இதோ ஒரு பேப்பரில் இருந்து 'லோஷன்' பற்றி வந்த கட்டுரைப் பக்கம்..