வருகிறார் அசாருதீனின் வாரிசு

ARV Loshan
3
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மொகமட் அசாருதீனை யாரும் இலேசில் மறந்திருக்க மாட்டோம்.. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்காலத்தை கறைபடிந்ததாக அவர் மாற்றிக் கொண்டாலும், விளையாடு வரை தனது துடுப்பாட்டப் பிரயோகங்களுக்காகவும்,துரித களத் தடுப்பாட்டத்துக்ககவும், முக்கியமாக சிறந்த தலைமைத்துவத்துக்காகவும் இன்று வரை புகழப்படுபவர்.

எனக்கென்றால் இன்னும் அசார் என்றவுடன் கண் முன்னே நிற்பது அவரது அலட்டல் இல்லாத துடுப்பாட்டப் பிரயோகங்களும், square cuts,drives,flick shots ம் தான்.. 

                                                                 மொகமட் அசாருதீன்

அவரது மூத்த மகன் மொகமட் அஷாடுடீன் இப்போது தனது பெரியளவிலான கிரிக்கெட் பிரவேசத்துக்கு தயாராகிறார்.

17 வயதாகும் அப்பாஸ் என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் அஷாடுடீன் இதுவரை எந்த முதல் தர அணிகளுக்கும் விளையாடியவர் அல்ல.. 

ஹைதேராபாதின் ஒரு கிரிக்கெட் கழகத்துக்கு விளையாடி வரும் அப்பாஸ் தந்தையைப் போலவே ஒரு துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், தந்தையிலிருந்து வித்தியாசமாக இவர் இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். இந்தப் பருவ காலத்தில் தான் கழகத்துக்காக விளையாடிய ஆறு இன்னிங்க்சில் நான்கு அரைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இப்போது இவர் தெரிவு செய்யப் பட்டிருப்பது பிரபலமான IPL அணியான கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி குழாமுக்கு.எதிர்வரும் வாரம் ஈடென் கார்டென்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இரு நாள் பயிற்சி முகாமுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முப்பது பேர் கொண்ட இளைஞர்களில் இவரும் ஒருவர்.

                                    மொகமட் அஷாடுடீன் 

இதிலே உள்ள சுவாரஸ்யமான விடயமொன்று அஷாடுடீன் விளையாடுகின்ற கழகத்திலே தான் இப்போது இந்தியாவின் தலை சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், அசாரின் பாணியிலேயே துடுப்பாட்டப் பிரயோகங்களைக் கையாளுபவருமான V.V.S.லக்ஸ்மணும் தனது கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தைக் கழித்தவர் என்பது தான்.

ஆரம்பத்தில் அப்பாசை விட அவரது இளைய சகோதரரான அயாசுடீன் தான் கூடுதல் பிரபலமாகவும்,அதிகம் பேரால் அசாருதீனின் வாரிசாகவும் கருதப்பட்டு வந்தவர். அத்துடன் அயாசுடீன் துடுப்பெடுத்தாடும் போது அசாருடீனே மறுபடி வந்து ஆடுவது பல இருக்குமாம்..ஆனால் தம்பியை முந்திக் கொள்ள அண்ணன் எடுத்த முயற்சிகள் மிக அதிகம் என்கிறார் அஷாடுடீன் விளையாடும் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான ஸ்ரீதர்.

ஒவ்வொரு நாளும் பெருமைக்குரிய தந்தை அசாருதீனும் மகனுக்கு நுண்ணிய நுட்பங்களையும், தனக்கே உரியதாகத் திகழ்ந்த மணிக்கட்டுத் திருப்பல் அடிகளையும் (wrist flicking shots) கற்றுக் கொடுப்பாராம். 

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தந்தையின் திறமைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவரட்டும்.. ஆனால் கறுப்புப் பண விளையாட்டும், பந்தயக்காரர் பழக்கமும் மட்டும் வேண்டாம்.   

 

Post a Comment

3Comments

Please Select Embedded Mode To show the Comment System.*