இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கொலை அச்சுறுத்தல் இவருக்கு இருந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு போதவில்லையென தோனி குறைப்பட்டத்தை அடுத்தே அவரது பாதுகாப்புக்கு இந்தியாவில் அதியுயர் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இசட் (Z)பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தோனியைச் சூழ எந்நேரமும் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய காவல் படையினர் காவல் காப்பர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
தோனிக்கு தாவூத் கும்பல் என்று கருதப்படும் ஒரு மர்மக் கும்பலிடம் இருந்து வந்த மிரட்டல் கடிதத்தை அடுத்தே இந்த உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த மர்மக் கடிதத்தில் ஐம்பது லட்சம் இந்திய ரூபாய்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினமே தோனியின் வீட்டுக்கு இந்தக் கடிதம் வந்து சேர்ந்துள்ளது. அண்மையில் ஒரு நாள் தோனி தனது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனியாகவே ராஞ்சி விமான நிலையத்திற்கு சென்றதாகவும், அதன் பின் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 9 mm கைத் துப்பாக்கி ஒன்றைக் கோரியுள்ளதாகவும் தோனியின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிரணிப் பந்து வீச்சாளர்களை துப்பாக்கி இல்லாமல் துடுப்பாலேயே மிரட்டுகிற தோனிக்கே மிரட்டலா?
கேப்டன் விஜயகாந்த் இந்தியாவில தானே இருக்கார்? கூப்பிடுங்க அந்தக் கேப்டனை இந்தியக் கேப்டனை காப்பாத்த..