2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா

ARV Loshan
18
அவுஸ்திரேலியாவின் 16வருட சொந்த மண்ணில் தோல்வியுறாப் பெருமையைத் தவிடுபொடியாக்கிய தென்னாபிரிக்கா தான் இந்த 2008இன் அசகாயசூர அணி.

இந்த வருடத்தில் கிரேம் ஸ்மித்தின் தலைமையில் தென்னாபிரிக்கா 11 போட்டிகளில் வெற்றியை ருசி பார்த்துள்ளது. இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வி. வேறெந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் அணியும் இந்த ஆண்டில் தென்னாபிரிக்காவை நெருங்க முடியவில்லை.

             மெல்பேர்னில் வென்ற உற்சாகத்தில் தென் ஆபிரிக்க வீரர்கள்

ஒரு வருடத்தில் ஒரு அணியால் வெல்லப்பட்ட அதிகமான போட்டிகள் டெஸ்ட் வரலாற்றிலேயே 11 தான். 1984இல் மேற்கிந்தியத் தீவுகளும், 2004இல் இங்கிலாந்தும் இதே சாதனையைப் புரிந்திருந்தன.

இதற்கு அடுத்த படியாக 10 டெஸ்ட் வெற்றிகளை ஓராண்டில் 3 தடவைகள் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 2002, 2004, 2006

இதுவரையில் தென்னாபிரிக்காவின் எந்தவொரு அணித்தலைவரம் அடையாத அரிய டெஸ்ட் தொடர் வெற்றி அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரை வென்ற ஒரே தென்னாபிரிக்க தலைவர் ஸ்மித் மட்டும் தான்.

மெல்பேர்ன் மைதானத்தில் தென்னாபிரிக்கா 90களில் பின்னர் (இன ஒதுக்கல கொள்கைகளின் பின் மீள் வருகை புரிந்த பின் ) பெற்ற முதலாவது வெற்றியும் இதுவே.

இன்னமொரு குறிப்பிடத்தக்க விடயம் - கடந்த இரண்டாண்டுக்கும் மேலாக தென்னாபிரிக்கா எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வி அயைவில்லை. இறுதியாக தென்னாபிரிக்காத் தோல்வியடைச் செய்த ஒரே அணி இலங்கை. 2006 ஜீலை மாதம்.

இந்தக் காலகட்டத்தில் 9 தொடர்களை வென்றதுடன், ஓரே ஒரு தொடரை சமநிலையில் முடித்துக்கொண்டது.

                            வேக இரட்டையர் - ந்டினி & ஸ்டைன்

இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,இந்த வருடத்தை எவ்வாறு தென் ஆபிரிக்கா ஆரம்பித்தோ அதே போலவே நிறைவு செய்துள்ளது.. 2008இல் அவர்களது முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளுக்கேதிராக கேப்டவுனில் 185என்ற இலக்கை மூன்று விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது..நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 183என்ற இலக்கு.. ஒரே விக்கெட்டை இழந்து..

இதுபோல தென் ஆபிரிக்க அணித் தலைவரான ஸ்மித்துக்கு மேலும் ஒரு சாதனை கிடைத்துள்ளது.. நான்காவது இன்னிங்க்சில் வெற்றிகளைப் பெரும் வேளையில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர் என்பதே அது..
அவர் இவ்வாறு பெற்ற ஓட்டங்கள் 919.

அடுத்த படியாக வருகிறார்கள் ஹெய்டன் மற்றும் பொன்டிங் .

                                         சாதனைத் தலைவன் ஸ்மித்

இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற பெருமையும் ஸ்மித்துக்கே .. அவர் குவித்த 1656ஓட்டங்கள்(15 டெஸ்ட் போட்டிகளில்) இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள்..
மொகமட் யுஸுப் - 1788 (2006) 
விவ் ரிச்சர்ட்ஸ் - 1710 (1976) 

இவர் மட்டுமில்லாமல் இந்த ஆண்டில் தென் ஆபிரிக்காவின் எல்லாத் துடுப்பாட்ட வீரர்களுமே ஓட்டங்கள் குவிக்கும் மேஷின்களாக மாறியுள்ளார்கள்..இந்த ஆண்டில் ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களைத் தாண்டியவர்கள் பத்துப் பேரில் நால்வர் தென் ஆபிரிக்கர்கள்..
ஸ்மித்,மக்கென்சி,டீ வில்லியர்ஸ், அம்லா..(ஏனைய அறுவரில் மூவர் இந்தியர்,மூவர் ஆஸ்திரேலியர்)

நாளை பிறக்க இருக்கும் 2009 தென் ஆபிரிக்க்காவுக்கு எப்படி இருக்கும் என்பதை எதிர்வரும் சனிக்கிழமை சிட்னியில் ஆரம்பமாக உள்ள டெஸ்ட் போட்டி எதிர்வு கூறும் என நம்பலாம்.. 


Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*