இந்திய டெஸ்ட் அணியின் தலைவரும் மிக நீண்ட காலம் (90 முதல் ) இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு பந்து வீச்சாளராகவும் விளங்கிய கும்பிலே நடைபெறும் டெல்லி டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு பெறப்போவதாக சற்று முன் அறிவித்துள்ளார். இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் போட்டி முடிவடைந்த பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 10 தையல்கள் போடப்பட்டிருக்கும் நிலையிலும், ஏற்கெனவே அவர் மீது ஓய்வு பெறுமாறு அழுத்தங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும் கும்பிலே இந்தத் தொடரின் பின்னர் விலகலாம் என்று கருதப்பட்டு வந்தது.
எனினும் அவரது சுபாவம் போலவே அமைதியாக இன்று வெற்றி-தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்ற டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று கும்பிலே இந்த முடிவை அறிவித்துள்ளார்.
கங்குலி அறிவித்ததன் பின்னர் கும்பிலேயே இவ்வாறு ஓய்வு பெறுவார் என்பதைப் பலரும் ஊகித்து இருந்தனர். சான்று எனது தளத்திலேயே உள்ள கருத்துக் கணிப்பு..
முழுமையான பார்வை & பதிவு நாளை தருகிறேன்..
நம்ம typing speed ரொம்பவே slow என்பதால் யாராவது இந்த செய்தியை தருவதில் முந்திடாங்களோ தெரியல.. ;)