அமெரிக்கப் பங்குச் சந்தைகள் திடீர் சரிவைக் காட்டியபோது,சட சடவென சரிந்தது,அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமல்ல;பல பேரின் மனக் கோட்டைகளும் தான்..
பங்குச் சந்தைகளில் அந்த இமாலய சரிவுகளை நேரடியாக அவதானித்துக் கொண்டிருந்த வர்த்தகர்கள்,முகவர்கள் காட்டிய அதிர்ச்சி,ஆச்சரியங்கள்,கவலைகளைப் பதிவு செய்கின்றன இந்தப் புகைப்படங்கள்..
பாருங்கள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை என்ன வெளிப்பாடுகளைக் காட்டுகிறார்கள்..
எங்களுக்கு வேடிக்கை..அவரவர்க்கு வேதனை..
தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்..
இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு எனக்கு வந்த சந்தேகம்,மனதை உருக்குகின்ற இந்தக் காட்சிகளை,அப்படிப்பட்ட சோகமான,அதிர்ச்சியான நேரத்திலும் மினக்கெட்டுப் படமெடுத்த அந்தப் புண்ணியவான் யாரோ?