எனக்கு மனதில் எரிச்சல் (கடுப்பு) தருகின்ற சில விஷயங்கள்.. ஆரம்பத்தில் சும்மா யோசித்தபோது ஒரு சில போல் தான் தோன்றின.. பார்த்தால் அடுக்கிக் கொண்டே போகலாம் போலிருந்தது.. சரி கவர்ச்சியாக இருக்கட்டுமே என்று எரிச்சல்கள் எண்பது என்று பெயரிட்டேன்.. ஆனால் இப்போதைக்கு இருபத்தேழு மட்டுமே இனம் காணப்பட முடிந்துள்ளதால் எரிச்சல்கள் இருபத்தேழு என இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்..
- அசந்து தூங்கும் போது அடிக்கின்ற அநாவசிய செல்பேசி அழைப்பு!
- அவசர அவசரமாக வாகனம் செலுத்துகையில் வழிமறித்தோடும் மனிதஜென்மங்கள்!
- வேண்டாத நேரத்தில் வீண் smsஅனுப்பிப் பொறுமையை சோதிக்கும் முகந்தெரியா நண்பர்கள்!
- விடுமுறை நாட்களில் வீட்டுக்கு visit அடிக்கும் அன்பின் அதிகப் பிரசங்கிகள்!
- வெள்ளவத்தை காலி வீதி கடக்கும்போதும் பராக்குப் பார்க்கும் என் இனிய தமிழ்மக்கள்!
- மதுஸ்ரீ, உதித்தால் மரண பலியாக்கப்படும் நல்ல திரைப்பாடல்கள்!
- நடுச்சாமம் miss call பண்ணித் தம் அன்பு காட்டும் என் அன்பு நேயர்கள்
- தேவையுடன் call அடித்தால் உடனேயே சிக்காத ஒரு சில நம்பர்கள் (நண்பர்கள்)
- ஒரு சில நிமிடங்களுடன் முடியாத தொலைபேசி அழைப்புக்கள்
- உடனே புரியாத உயர்தரக் கவிதைகள்
- ஒயாத அழுகையுடன் ஒப்பாரி,பழிவாங்கி, உயிர் குடிக்கும் மெகா தொடர்கள்
- அவசரத் தேடுகையிலும் அநாதவராய் crash ஆகும் இணைய browserகள்.
- meeting என்றழைத்து மணிக்கணக்கில் காக்க வைத்து வெறுக்க வைக்கும் ஜென்மங்கள்
- ஊர்விடுப்பு பேசவென்றே ஒர் நாள் கடத்துகின்ற ஒரு சில ஜென்மங்கள்
- சில்லறை லாபத்துக்கு சுயநலக் கட்சி பிரிக்கும் சில சில பேய்கள்
- சொன்ன சொல் கேட்காத அலுவலக குடும்ப உறவுகள்
- ஒயாமல் கடித்தே தின்று உறக்கம் கலைக்கின்ற என் அறையின் நுளம்புகள்
- எவ்வளவு அழித்தாலும் என் சின்னக் கண்ணனைக் கடிக்கும் எறும்புகள்
- தேவையான நேரம் கண்ணுக்கு அகப்படா tie,socks, லேஞ்சிகள்
- அன்பாகப் பேசினாலும் அர்த்தம் மாறிப் புரிந்து கொண்டு முகம் திருப்பிக் கொள்ளும் என் மனைவி(சில நேரங்களில்)
- லேட்டாகும் நாட்களிலே ரோட் close பண்ணி ரோதனை தரும் மகிந்தவின் படையணி
- நிம்மதியாக நான்கு மணிநேரம் நிகழ்ச்சி செய்ய விடாத sponsors (இப்போது விடியலுக்கு 4 அனுசரணையாளர்கள்)
- மழை பெய்யும் அதிகாலை இதமான நேரமும் வா என்று அழைக்கும் என் கடமை
- media id இருக்கும் என்று தெரிந்துமே மறித்து பின் போக விடும் செக் பொயின்ட் செக்கு மாடுகள் இத்தனை ஆண்டு கழிந்தபின்பும் சக்தியை விட்டு ஏன் மாறினீர்கள் என்ற கேள்விகள்
- O/L இல் 8 D எடுக்கவில்லை என்று இன்னும் இருக்கும் மனதில் ஒர் ஏக்கம்
- முதுகின் பின்னால் கத்தி வைத்தபடியே திரிபவரும் என்னோடு சிரித்து பேசும் கணங்கள்
- பச்சைக் குழந்தைகளை பகல் வெயிலில் படாய்ப் படுத்தி பிச்சைக் கேட்கும் பாவிகள்