கிரிக்கெட்டின் பிதாமகர் என்று அழைக்கப்படும் டொனல்ட் பிராட்மனின் நூற்றாண்டு இது. எத்தனை சாதனைகள் முறியடிக்கப்பட்ட வண்ணம் இருந்தாலும் கூட,அவரது என்ற அசாத்திய சராசரியை யாராவது நெருங்க முடியுமா என்பது சந்தேகமே..
ஏற்கெனவே பிரட்மன் நூதனசாலையில் சேகரித்து வைக்கப் பட்டுள்ள பல்வேறு நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், இன்று Leski Auctions நிறுவனத்தினரால் பிரட்மன் பயன்படுத்திய முதலாவது துடுப்பு ஏலத்துக்கு விடப்படுகிறது.
1928 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக பிரட்மன் தான் விளையாடிய முதலாவது போட்டியில் பயன்படுத்திய துடுப்பு இதுவாகும். பிரட்மன் ஒரு தெய்வம் போலக் கொண்டாடப்படும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்த துடுப்பு இந்தியா அல்லது பிற நாடொன்றுக்குச் சென்று சேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Leski Auctions நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் லேச்கி (Charles Leski) ,இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியர்கள் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை எனக் கவலைப்பட்டுள்ளார்.இந்த ஏலத்தில் $90,000 முதல் $120,000 வரை பெறப்படும் என எதிர்பார்க்கிறாராம்.
இதை வாசிக்கின்ற உங்களில் யாருக்காவது அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற துடுப்பைப் பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்தால்,இன்றே ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுங்கள்.. (போறதுக்கு முன்னால தகவலை சொன்ன எனக்கு கமிஷன் வெட்டிட்டுப் போங்க.. )
*படத்தில் Leski பிராட்மனின் முதலாவது துடுப்போடு..