நான் அந்த நாளில் முதலில் நுவர எலியவிற்கு செல்லத் திட்டமிட்டிருந்த காரணத்தால் முடியாதென்றும் என்னுடைய தம்பியான செந்தூரனை அனுப்புவதாகவும் சொல்லி இருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னுடைய நுவர எலிய பயணம் பிற்போடப்பட நான் தவிர்க்க நினைத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். நான் இந்நிகழ்ச்சியை தவிர்க்க விரும்பியதற்கு 2 காரணங்கள்..
1.மெத்த படித்தவர்கள் அதிகம் வருகிற விழா என்ற காரணத்தால் சின்ன தவறு கூட பெரிதாகிவிடும்.. 2.என்னுடைய சினிமாலை நிகழ்ச்சி செய்ய முடியாமல் போகும்.. ( I LOVE TO DO WHAT EVER MY PROGRAMMES.. specially i love to work on week ends 'cos its easy to work with casual wears rather than working with official wear ) ஆனால் நேற்று நிகழ்ச்சியொன்றும் எனக்கு சிரமத்தை தரவில்லை.. மாறாக எனக்கு ஒரு பெருமையை தந்தது.. பல்கலைக்கழகப் பட்டம் எதுவும் பெறாமலேயே பல கலாநிதிகள், முனைவர்கள் எல்லோரையும் வரிசைப் படுத்தி அழைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? அந்த ஒரு நாள் மட்டுமாவது என் கட்டளைக்கு அந்த மெத்தப் படித்த மேதைகளை நான் கட்டுப் படுத்தி வைத்திருந்த பெருமை.. நான் நன்றாகவே (வழமை போல் ;) ) தொகுத்து வழங்கியதாக அப்பா உட்பட பல பேரும் சொன்னார்கள்.. ஆனால் எனக்கு நான் ஒன்றும் பெரிதாக விசேடமாக செய்ததாக தெரியவில்லை. சிலவேளைகளில் மற்ற எல்லாப் பேச்சாளர்களும் சின்ன (!?) விரிவுரைகளை நடத்த நான் மட்டுமே குறைவாக பேசியது காரணமாக இருக்கலாம்...
எங்களூரை சேர்ந்த ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வொன்றில் பங்கு பற்றிய திருப்தி இருந்தது..