ஒலிபரப்பு கடமை காலை 5.30 முதலே ஆரம்பம்.. 6.00 மணிக்கு வெற்றியின் விடியல்..
பத்து மணி வரை விடியலில் என் பயணம் தொடரும்.. எனினும் நிகழ்ச்சி முடிந்த பின்னும் என் அலுவலகப் பணிகள் தொடர்வதால் மாலை ௪.௫ மணிக்கு பின் தான் மீண்டும் வீடு நோக்கிய என் பயணம் இருக்கும். இடை நடுவே வரும் பிற பணிகள் , சின்ன சின்ன பொழுது போக்கு நேரங்களும் உண்டு.. அந்த நேரங்களில் தான் facebook, cricket manager,yahoo,gmail,tamilish,thenkoodu.. இன்னும் பலப்பல விடயங்களில் என்னை ஈடுபடுத்தி கொஞ்சம் ஈர சுவாசம் எடுத்து கொள்வேன். என்னுடைய பரபரப்பான ஒவ்வொரு நிமிடங்களுமே ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் பிரயோசனமாகவே சென்று கொண்டு இருப்பதாகவே நான் கருதிக்கொள்வது உண்டு..
எப்போதாவது கூட்டங்கள் என்று வந்தால் (specailly management meetings) வாழ்க்கை வெறுக்கும் தருணங்களாகவே நான் அவற்றைக் கருதிக் கொள்வேன். In my opinion those are sometimes time killers.. specially when they call up for a meeting in the after noon.. உடலின் அனைத்து சக்திகளும் வடிந்து போய் இருக்கின்ற நேரத்தில் எந்த மனிதனுக்கு தான் பேசுகின்ற, கிரகிக்கின்ற, யோசிக்கின்ற திராணி வரும்? அதி காலையிலேயே எழுவதால் மதியத்திற்கு பிறகு ஏனோ தூக்கம் சில நேரங்களில் வந்து எட்டிப் பார்க்கும் ..
நான் அழைக்கின்ற கூட்டங்களுக்கெல்லாம் இந்த விதிகள் பொருந்தாது என்று உறுதியாக நம்புபவன் நான்.. ( he he.. lol) காரணம் என்னுடய கூட்டங்கள் நான் புத்துணர்ச்சியுடன் இருந்தால் மட்டுமே இடம்பெறும்..
மாலை வீடு சென்றால்.. அடுத்த நாள் அதி காலை வரை வெளியே செல்லாதவன் நான்.. முன்பெல்லாம் வீட்டில் இருப்பதே அபூர்வமாக இருந்த என்னுடைய வாழ்க்கை முறை மாறுவதற்கு முக்கியமான இருவர் காரணம்..
1. LOVESUKI
2.HARSHAHASANN
என்னுடைய மனைவி & செல்ல மகன்.. வெளியே செல்வதாக இருந்தால் அப்பா,அம்மாவை பார்க்க, shopping, visit அல்லது இரவு உணவுக்காக மட்டுமே..
வார இறுதி நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமானவை.. அதிக நேரம் வீட்டில் செலவிடப்படும் வாய்ப்பை நான் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறேன்..என்னுடைய குட்டி,குழப்படி வாரிசோடு அதிக நேரம் விளையாடக் கூடியதாகவும் மனைவி வேலை செய்ய நான் கொஞ்சம் ஒத்தாசை செய்யக் கூடியதாகவும் இருக்கும்...
சனிக்கிழமை என்னுடைய ஒலி பரப்புக் கடமை மாலை 4 மணிக்கு மேல் ஆரம்பிக்கும். அவதாரம் 6 மணி முதல் 9 மணி வரை.. ஞாயிறு பி.ப 3 மணிக்கு ஆரம்பிக்கும் சினிமாலை 5 மணிக்கு முடிவுறும்..
பொதுவாக மாற்ற நினைத்தாலும் மாற்றவே முடியாத என்னுடைய வாரச்சக்கரம் இது தான்.. இடை இடையே வருகிற சின்ன சின்ன நிகழ்ச்சிகள் , ஏதாவது விசேட நிகழ்வுகள் கொஞ்சம் சந்தோசம் தரும் அல்லது கொஞ்சம் டென்ஷன் தரும்..