உலகமே அதிர்ந்து போன ஒருநாள்! உலகையே தன் ஒரு விரலசைவால் ஆட்டிப்படைக்கும் திறன் கொண்ட அமெரிக்காவின் பிரதான நகருக்குள்ளேயே புகுந்து கண்ணுக்குள்ளே விரல்விட்டு ஆட்டிப் படைத்த நாள்!
உலகில் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவையும் அசைத்துப் பார்க்கலாம் என்பதைத் தகர்ந்து, வீழ்ந்து பொடிப்பொடியாகிப் போன இரட்டைக் கோபுரங்கள் உலகுக்கு உணர்த்தின. ஒரு செயல் ஒரு சம்பவம் ஒரு இனத்தையே மேற்குலகு சந்தேகக் கண்கொண்டு பார்க்குமளவுக்கு மாற்றியது!
உலகம் முழுவதும் நிலைகள் மாறின! பாதுகாப்பு வலைகள் இறுகின! அமெரிக்கா தற்காலிகமாகத் தோற்றது – எனினும் தொடர்ச்சியாக இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்துக் குதற ஆரம்பித்தது.
ஆனால் மனிதம்? 11/09/2001இல் இறந்த 2998 உயிர்கள்.. அவற்றைப் பிரிந்து தவிக்கும் உறவுகள்? அங்கங்கள் இழந்து வாழ்வே சூனியமாகிய மனிதர்கள்?
மறக்க முடியாத 11/09......